மூன்றாம் முத்திரை Jeffersonville, Indiana, USA 63-0320 1பிரான்ஹாம் கூடாரம் ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா மாலை வணக்கம், நண்பர்களே. நாம் எழுந்திருந்து தலை வணங்கி சற்று நேரம் ஜெபிப்போம். எங்கள் பரம பிதாவே, அந்த அழகான பாட்டை நாங்கள் கேட்கும்போது, நீர் எங்கள் அருகாமையிலிருப்பதாக எண்ணம் எழுகின்றது. கர்த்தாவே, இன்றிரவு நீர் எங்களை உம் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டு, எங்கள் பாவங்களையும், குற்றங்குறைகளையும் மன்னித்து, தேவை யுள்ள எங்களுக்கு உமது ஆசீர்வாதங்களை அருளவேண்டுமாய் கெஞ்சுகிறோம். நாங்கள் வாழும் இம்மகத்தான காலத்திலே, வருடந்தோறும் உலகம் அந்தகாரப்படுவதையும், கர்த்தர் தம்மை வார்த்தையின் மூலமும் தோற்றத்தின் மூலமும் எங்களுக்கு வெளிப்படுத்திக்கொண்டு வரு வதால், அவருடைய வருகை பிரகாசமடைந்து வருவதையும் நாங்கள் உணருகிறோம். கர்த்தாவே புஸ்தகத்தின் மூன்றாம் முத்திரையை நீர் திறந்து நாங்கள் என்ன செய்யவேண்டுமென்றும், சிறந்த கிறிஸ்தவர் களாய் எவ்வாறு வாழ வேண்டுமென்பதையும், இன்றிரவு எங்களுக்கு வெளிப்படுத்தித் தரவேண்டுமென்று உம்மை நோக்கி கெஞ்சுகிறோம். 2இன்றிரவு இங்கு கூடியுள்ள கிறிஸ்தவரல்லாத ஒவ்வொருவரும் உம்மை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணரச் செய்யுமாறு நான் ஜெபிக்கிறேன். பரம தந்தையே, மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர் யாவரும் முன்பிருந்ததைக் காட்டிலும் உம்மில் இன்னும் அதிகமாக நெருங்கி ஜீவிக்க வேண்டும் என்பதை உணர்ந்துக் கொள்ளட்டும். ஆகையால் கிறிஸ்தவ அன்பின் ஐக்கியத்திலும் விசுவாசத்திலும் நாங்களெல்லாரும் நிலை நிற்கவும் எங்களுக்கு ஏதுவாயிருக்குமென நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, எங்கள் மத்தியில் நோயுற்றுள்ள எல்லாரும் இன்றிரவு சுகம்பெற அருள்செய்யும். உம்மை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தை அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். பிதாவே, உம் கனம், மகிமைக்கென்று இங்கு நடப்பவைகளையும் பேசப்படுபவைகளையும் நீர் ஆசீர்வதிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் இவைகளைக் கேட்கிறோம். ஆமென். 3நல்லது, இன்றிரவு - புதன்கிழமையன்று - நாமெல்லாரும் மறு படியும் கூடி வந்துள்ளோம். கர்த்தர் தாமே தம் மகத்தான ஆசீர்வாதங்களை அவருடைய வார்த்தையின் மேல் பெருமாரியாக ஊற்றுவார் என்று நாம் நம்பியிருக்கிறோம். வழக்கப்படி நான் இன்று படித்துவிட்டு, உங்களிடம் எடுத்துக் கூறுவதற்குத் தகுதியுள்ளவை எவை யென்று யோசித்துக் கொண்டே, வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்த கர்த்தருடைய வார்த்தைக்கு உண்மையான விளக்கத்தையும் அர்த்தத் தையும் எனக்களிக்க அவர் பேரில் சார்ந்திருந்தேன். இவ்வாரத்தில் அவர் நமக்குச் செய்துள்ள யாவற்றிற்கும்... முத்திரைகளைத் திறந்ததற்காக அவருக்கு நான் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன். 4இப்பொழுது, ஞாயிறு காலை... இது ஒருவேளை நன்மையான காரியமாக இருக்கலாம். நீங்கள் அறிவீர்கள், அநேக சமயங்களில்... நாம் கூறியுள்ளவை தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகையால் இவைகளைக் குறித்த கேள்விகள் உங்கள் மனத்தில் எழுந்தால், அவைகளை எழுதி நான் அது என்னவென்று காணும்படியாக அடுத்த சனி இரவு இங்குள்ள மேசையின் மேல் வைத்து விடுங்கள். நான் அவைகளைப் படித்துவிட்டு, கர்த்தருக்குச் சித்தமானால், ஞாயிறு காலையன்று பதிலுரைக்க முனைவேன். நாம் என்ன திட்டமிட்டுக் கொண்டிருந்தோமோ, அதைவிட இது நன்மையாக இருக்குமென்று நான் நினைக்கிறேன். ஏனெனில், அது சில சமயங்களில் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றது என்று நீங்கள் அறிவீர்கள். அது எவ்விதம் இருக்கவேண்டுமோ அவ்விதம் இருக்க நான் அதை நேர்ப்படுத்துவது நலமானதாக இருக்கும் என்று நீங்கள் அறிவீர்கள். ஏனெனில், ஒரு சமயம், இப்பொழுது... 5இன்று ஒருவர் என்னை அணுகி, “எடுக்கப்படுதலின்போது ஜெபர் ஸன்வில் பட்டிணத்திலிருந்து ஒருவரும், நியூயார்க் பட்டினத்திலிருந்து ஒருவரும் மாத்திரமே எடுக்கப்படுவாரென்றும், மற்றவரெல்லாம் அயல் நாடுகளிலிருந்து எடுக்கப்படுவர்' என்பது உண்மையா என்று வின வினார். ஆகவே, நீங்கள் பாருங்கள்? அது தவறாகப் புரிந்துகொள்ளப் பட்ட ஒன்றாகும். வேறொருவர், ”சனியிரவு கடைசி முத்திரையை கர்த்தர் திறந்தபிறகு, ஞாயிறு காலையில் வந்துவிடுவார்“ என்றார். பாருங்கள்? அது அவ்வாறில்லை. உங்களால் முடியாது. அது அல்ல. நாம் அதை அறியோம். யாராவது அவர் எப்பொழுது வருவா ரென்று அறிந்துள்ளதாக உங்களிடம் கூறினால், அவர்கள் ஆரம்பத் திலேயே தவறு செய்கின்றனர். ஏனெனில் அவர் வருகையின் நாளை யாரும் அறியார். ஆனால் அவர் இபொழுதே வந்துவிடலாம் என்று நாம் நினைத்துக்கொண்டு அதற்கேற்ப வாழவேண்டும். 6நீங்கள் ஆயத்தமாக இருக்கவேண்டுமென்பதற்காக, ஒரு நிமிடம் நான் இதை இவ்விதம் கூற விரும்புகிறேன். கர்த்தர், அவருடைய கால அளவின்படி, இன்னும் மூன்று நிமிடங்களுக்குள் வந்து விடு வாரென்று நான் நம்புகிறேன், அது நம் கணக்கின்படி எவ்வளவு கால மென்று தெரியுமா? சுமார் முப்பத்தைந்து வருடங்கள். பாருங்கள், அவருடைய பார்வைக்கு ஆயிரம் வருடங்கள் ஒரு நாள் போல் உள்ளது. நீங்கள் பாருங்கள்? எனவே, யோவான் அப்போஸ்தலனும் வெளிப்படுத்தின விசேஷத்தில், ''அவர் வருகையின் நேரம் வந்துவிட்டது'' என்கிறான். நாமும், அவ்வாறே “அவர் வருகையின் நேரம் வந்துவிட்டது'' என்கிறோம். இவ் விரண்டிற்கும் இடையேயுள்ள காலம் தேவனுக்கு நேற்று கழிந்த நாள் போலுள்ளது. அவருடைய கால அளவின்படி 'அவர் வருகையின் நேரம் வந்துவிட்டது' என்று கூறப்பட்டு இன்னும் இரண்டு நாட்கள் ஆகவில்லை . 7ஆகவே பாருங்கள், அவர் வருகைக்கு மூன்று நிமிடங்களைவிட குறைவான நேரம் உள்ளது. மூன்று நிமிடங்கள் என்பது அவருக்கு எவ்வளவாய் உள்ளது; நமக்கு அது முப்பது வருடங்களுக்குச் சமானம். அவர் வருவதற்கென சிங்காசனத்தைவிட்டு அவர் எழுந்து விட்டார். சில சமயங்களில் அவைகளை சற்றே படிக்கிறீர்கள். அவர் தம் முடைய வார்த்தையின் கருத்தின்படி பேசுகிறார், பாருங்கள், நம்முடைய கருத்தின்படியல்ல. நாளை இரவு அவர் வருவாரென்று நான் ஒருக்கால் அறிவேனா னால், நாளை இரவு பிரசங்கிக்கவிருக்கும் நான்காம் முத்திரையைக் குறித்த செய்தியை அருளுமாறு அவரிடம் கேட்டு, நாளை இரவு உங்களுக்கு அதைப் பிரசங்கிப்பேன். அவர் வரும்போது நான் என்ன செய்து கொண் டிருக்க வேண்டு மென்று விரும்புகிறேனோ, அதையே நான் ஒவ் வொருநாளும் செய்துகொண்டிருப்பேன். அவர் வரும்போது, எனக்களிக் கப்பட்ட உத்தியோகத்தின் ஸ்தானத்தில் நான் காணப்படுவதைத் தவிர வேறு சிறந்த ஸ்தானம் எதுவுமில்லை, பாருங்கள், உத்தியோகத்தின் ஸ்தாபனம் ஆகையால், அவர் வரும்வரை அவரளித்த உத்தியோகத் தில் நாம் நிலைத்திருத்தல் அவசியம். 8சில சமயங்களில் நாம் சற்றே படிக்கும்போது, ஆகவே, இப் பொழுது, மிக கவனமாக இருங்கள். நீங்கள் படிக்கையில், ஒலி நாடாக் களைப் பெற்று, அவைகளை கவனமாக கூர்ந்து கேளுங்கள். ஏனெனில், அவை மிகவும் நன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆகையால் உங்களால் அதைத் தெளிவாகக் கேட்க முடியும். கிறிஸ்துவில் அன்பு கூறுகிறவர்களே! நீங்களெல்லாரும் கிறிஸ் துவை நேசிக்கிறவர்கள் என்று நினைக்கிறேன். ஜனங்களை குழம்பச் செய்வதெது என்பதைக் கூற விரும்புகிறேன். சிலர் ஆராதனையில் செய்தியின் முதற்ப்பாகத்தைக் கேட்காமல், தாம தித்து வந்து பிரசங்கத்தின் முதலாம் பாகத்திலிருந்து சில குறிப்பு களையோ அல்லது யாரையாவது நான் குறை கூறுவதையோ மாத்திரம் கேட்பதனால், அவர்கள் குழப்பமுற்று, முரண்பட்ட காரியங்கள் பிரசங் கிக்கப்பட்டதாக எண்ணுகின்றனர். அது உண்மையன்று. ஆகையால் நீங்கள் புரிந்துகொள்ள இயலாத ஏதாவதொன்று இருக்குமாயின் அதை ஒரு தாளில் எழுதி சனிக்கிழமைக்குள்ளாகக் கொடுத்து விடுங்கள். உதாரணமாக, ''நல்லது. இதன் அர்த்தம் என்ன வென்று எனக்குப் புரியவில்லை'' போன்றவைகளை நீங்கள் எழுதிக் கொடுக்கலாம். நான் என்ன கருதுகிறேன் என்று நீங்கள் அறிவீர்கள். கர்த்தருக்குச் சித்தமானால், ஞாயிறு காலையன்று அவைகளுக்குப் பதிலு ரைக்க முயல்வேன். 9இப்பொழுது இன்றிரவு நாம் ஆசீர்வாதமுள்ள பழமையான வார்த்தையிலிருந்து மறுபடியும் படிக்கப்போகிறோம். ஆறாம் அதிகாரம், 5-ம், 6-ம் வசனங்களில் காணப்படும் மூன்றாம் முத்திரையைப் படிப் போம். நாளை இரவு குதிரை சவாரி செய்யும் நால்வரைக் குறித்தும் வெள்ளைக்குதிரை, சிவப்புக்குதிரை, கறுப்புக்குதிரை, மங்கின நிறமுள்ள குதிரைகளைக் குறித்தும் தியானித்து முடித்திருப்போம். ஆகவே, நான் இதைக் கூற விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் நாளின் அன்றாட நடவடிக்கைகள் துவங்குவதற்கு முன்பாகவே அதிகாலையில் நான் எழுந்து ஜெபிக்க ஆரம்பித்து விடுகின்றேன். நாள் முழுவதும் ஜெபத்தில் தரித்திருக்கிறேன். இன்று விடியற்காலை, பரிசுத்த ஆவியானவர் நானிருந்த இடத்தை அடைந்து, எல்லாவற்றையும் வெளி யரங்கமாக்கினார். மூன்றாம் முத்திரை முற்றிலுமாகத் திறக்கப்பட்டதை நான் கண்டேன். நான் பேசுவதை அவர் கேட்டுக் கொண்டிருக்கிறா ரென்று நானறிவேன். அவர் தந்த வெளிப்பாட்டிற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். 10இப்பொழுது சில காரியங்கள் சம்பவித்துக்கொண்டு வருகின் றன என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். முக்கியமான சில காரியங்கள் நிகழ்ந்து வருகின்றன. நீங்கள் அதை கிரகித்துக் கொள்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன், பாருங்கள், பாருங்கள். ஏதோ ஒன்று சம்பவித்துக் கொண்டு வருகின்றது. அது நடந்தேறு வதற்கு முன்பாகவே அதில் ஏதோ ஒன்றை அவர்களால் கண்டு கொள்ள முடியுமா என்று இந்த சபையை ஒரு முறை நான் சோதித்துப் பார்க்க விரும்புகிறேன். இப்பொழுது, உங்களிடம் நான் என்ன கூறினேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள், நினைவில் கொள்ளுங்கள். ஆகவே இப்பொழுது கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக. 11இப்பொழுது வெளி. 6:5-ம் வசனம். அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். 12இம்முத்திரையைக் குறித்து சிந்திக்கும் முன்பாக, இதுவரை முத்திரைகளைக் குறித்து தியானித்தவைகளை நாம் அதற்கு ஆதாரமாகச் சற்று சிந்தித்து, அவைகளை இம்முத்திரையுடன் ஒன்றுக்கொன்று சம்பந் தப்படுத்துவோம். வேதத்திலுள்ளபடியே சபையின் காலங்களும் அவ்வாறே ஒன்றுக்கொன்று பொருந்துகின்றன. ஏணியில் ஏறுவது போன்று, ஒவ்வொரு படியாக ஏறுவது, நீங்கள் ஒவ்வொரு அடியாக ஏறுகையில் கீழிருந்து மேல்வரை ஒவ்வொன்றிற்கும் தொடர்புண்டு. இப்பொழுது இந்த முத்திரைகள்... இது முத்திரிக்கப்பட்டுள்ள மீட்பின் புத்தகமாயுள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் அதைப் புரிந்து கொள்கிறீர்களா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி) மீட்பின் புஸ்தகம் ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்டுள்ளது. இது ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்ட புஸ்தகம். பாருங்கள்? 13ஆகவே இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள். நான் எரேமியா தீர்க்கதரிசன புஸ்தகத்திலிருந்து உங்களுக்கு எடுத்துக் காண்பித்தேன். அவர்கள் காகிதத்தில் இவ்விதம் எழுதி... காகிதத்தில் அல்ல, தோல் களில் எழுதி, அதை இப்படிச் சுருட்டினர். (சகோதரன் பிரான்ஹாம், தாள்களைக் கொண்டு ஒரு சுருளானது (Scroll) எவ்விதம் சுருட்டப்பட்டு முத்திரிக்கப்படுகின்றது என்பதை விளக்கிக் காட்டுகின்றார்) அதன் முனை இவ்வாறு விடப்பட்டது. அது என்னவென்பதை அம்முனை பாகம் குறிக் கும். அவ்விதம் ஒவ்வொன்றுமாக சுருட்டப்பட்டு முத்திரிக்கப்பட்டது. அதுதான் ஏழு முத்திரைகள் கொண்ட புஸ்தகம். நல்லது, அதுதான் ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்ட புஸ்தக மாகும். தற்போது நம்மிடம் புஸ்தகங்கள் உள்ளது போன்று அக்காலத்தில் கிடையாது. பழைய காலங்களில் சுருள்கள் மாத்திரமே உண்டாயிருந்தன. வேதம் இவ்விதமாக சுருட்டப்பட்டிருந்தது; அதிலிருந்து ஏசாயாவின் புஸ்தகத்தைப் படிக்க வேண்டுமானால், நீங்கள் ஏசாயா என்று எழுதப்பட்ட முனைக்குத் திருப்பி சுருளைப்பிரித்து அதைப் படிக்க வேண்டும். மீட்பின் புஸ்தகம் ஏழு முத்திரைகளைக் கொண்ட தாயிருந்தது. 14ஆகவே, இப்பொழுது ஆட்டுக்குட்டியானவர் புறப்பட்டு வந்து, சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவருடைய கரத்திலிருந்து புஸ்தகத்தை எடுத்து, ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று கருதி, முத்திரை களை அவிழ்க்கிறார் என்று நாம் காண்கிறோம். சபையின் காலங்களைக் குறித்து நாம் சிந்தித்தபோது நாம் கண்ட அதே நான்கு ஜீவன்கள் - அவைகளை வேதம் முழுவதிலும் நாம் காண லாம் - அவைகள்தான் இந்த முத்திரை உடைக்கப்படுதலை அறிவிப்பு செய்கின்றன. இப்பொழுது, இது மீட்பின் புஸ்தகம் என்பதை நாம் காண்கிறோம். 15பின்பு, மீட்பின் இனத்தானின் (Kinsman redeemer) ஊழியம் என்னவென்பதை பார்த்து, அவரை கண்டு கொண்டோம். இத்தனை வருடங்களாக கிறிஸ்து மீட்பின் இனத்தானின் ஊழியத்தைச் செய்து கொண்டிருந்தார். அதைப் புரிந்துகொண்டவர்கள் 'ஆமென்' என்று சொல்லுங்கள். (சபையார் 'ஆமென்'' என்கின்றனர்-ஆசி). அவர் மீட்பின் இனத்தானின் ஊழியத்தை செய்து கொண்டு வருகிறார். ஆனால் அவருடைய மீட்பின் ஊழியம் முடிவடையப்போகும் தருணம் ஒன்று வரும். ஆகவே மீட்பின் ஊழியம் முடிவிற்கு வருகையில் அப்பொழுது அவர் தற்போது அமர்ந்திருக்கும் தேவனுடைய சிங்காசனத்தை விட்டுப் புறப்படுவார். அது அவருடைய சிங்காசனமல்ல. 'நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன்''. ஆகையால் அவர் வீற்றிருப்பது அவருடைய சிங்காசனமல்ல, அது ஆவியாகிய தேவனுக்குச் சொந்தமானது. அது ஆட்டுக்குட்டியானவராகிய கிறிஸ்துவுக்குச் சொந்தமானதல்ல. அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன். ஆவியாகிய அதே தேவன்தான் மாம்சத்தில் வெளிப்பட்டார். இப்பொழுது அவர் சிங்காசனத்தை விட்டு எழுந்திருக்கிறார்... 16முதலாவதாக, 'மீட்பின் புஸ்தகத்தைப் பெற்றுக்கொள்ளப் பாத்திரவான் யார்?'' என்னும் அறிவிப்பு விடுக்கப்படுகிறது. பாருங்கள், ஆதாமிலிருந்து முழு மீட்பின் திட்டம், ஆதாம் இழந்த எல்லாம். ஆதாம் வரையிலும் ஒன்றும் இழக்கப்படவில்லை. ஆதாமுக்குப் பிறகு பூமியிலுள்ள யாவும் இழக்கப்பட்டன. பூமியினுடைய சிருஷ்டிப்பு யாவும் இழக்கப்பட்டன. ஆதாமுடன் சர்வசிருஷ்டியும் எல்லா வற்றையும் இழந்து, ஆதாமுடன் பாவத்தில் விழுந்து, திரும்ப வரக் கூடாதப்படிக்குப் பிளவைக் கடந்தன. மனிதன் பாவம் செய்தபோது, அவன் தன் வழியை விட்டுவிட்டான். அவன் திரும்பவும் வரமுடியாத அளவிற்கு தனக்காக ஒரு வழியையும் விட்டுவைக்கவில்லை. ஆகவே அப்பொழுது அந்த... 17திவ்ய வாசகனாகிய யோவான் (தீர்க்கதரிசியாகிய யோவான்) இந்தக் கேள்வி கேட்கப்படுவதைத் தரிசனத்தில் காண்கிறான். வானத்தி லாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது ஒருவனும் அந்தப் புஸ்த கத்தைப் பார்க்கவும்கூட பாத்திரவானாயில்லை. பாருங்கள்? இப்பொழுது அதைக் குறித்து சற்று சிந்தனை செய்யுங்கள்! அப்பொழுது ஆட்டுக் குட்டியானவர் முன் வந்து புஸ்தகத்தை எடுக்கிறார். 'யோவான், இனி அழவேண்டாம். புஸ்தகத்தை வாங்கவும் அதைத் திறக்கவும் யூதா கோத் திரத்தின் சிங்கமானவர் ஜெயங்கொண்டிருக்கிறார்' என்று ஒரு மூப்பன் சொன்னான். யோவான் சிங்கத்தைக் காணத் திரும்பிப்பார்த்தபோது, சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிற ஒரு ஆட்டுக்குட்டியைக் கண்டான். மூப்பனானவன் அழைத்து, ''சிங்கமானவர் ஜெயங்கொண்டிருக் கிறார்'' என்றான். ஆனால் அவன் வந்து பார்த்தபொழுது, சிங்காசனத்தி லிருந்து புறப்பட்டு வருகிற ஒரு ஆட்டுக்குட்டியைக் கண்டான். 18இப்பொழுது, யோவான் அதற்கு முன்பு இந்த ஆட்டுக்குட்டி யானவரைக் காணவில்லை. ஏனெனில், அவர் இரத்தம் தோய்ந்தவராய், உலகத் தோற்றத்துக்கு முன்பு ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டிருக்கும் கடைசி ஆத்துமா உட்பிரவேசிக் கும் வரை, மத்தியஸ்த ஊழியத்தைச் செய்து, ஜனங்களுக்காகப் பரிந்து பேசிக் கொண்டிருந்தார். அநேகர் அதில் உட்பிரவேசித்திருப்பார்கள். மற்றவர்களுக்கோ உட்பிரவேசிக்க எவ்வித விருப்பமும் இராது. கடைசி ஆத்துமா உட்பிரவேசித்த பின்பு, மீட்கப்படும் சமயம் முடிவடைகிறது. அப்பொழுது ஆட்டுக்குட்டியானவர் தாம் மீட்டவர்களைச் சொந்த மாக்கிக்கொள்ள புறப்பட்டு வருகிறார். உலகமும் சர்வசிருஷ்டியும் அப் பொழுது அவருக்குச் சொந்தமாகும். பாருங்கள்? அவர் தமது சொந்த இரத்தத்தினால் அவைகளை மீட்டுக்கொண்டார். அப்புஸ்தகத்தை எடுத்து அதைத் திறப்பதற்கென அவர் புறப்பட்டு வரும்போது..... யோவான் பின்பு அழவேயில்லை. அவன் அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கும் ஆட்டுக்குட்டியைக் காண்கிறான். அது ஏற்கனவே கொல்லப்பட்டிருந்தது. ஆனால் அது மறுபடியுமாக உயிரோடிருந்தது. அடிக்கப்பட்டிருக் கும் ஆடானது முழுவதுமாக இரத்தத்தால் தோய்ந்திருந்தது என்று நாம் அறிந்துகொண்டோம். அது அடிக்கப்பட்டிருந்தது. அது அடிக்கப்பட்டு கொல்லப்பட்ட பிறகு அது மறுபடியுமாக உயிரேடெழுந்தது. அது சிங்காசனத்தில் வீற்றிருந்து, உட்பிரவேசிக்க வேண்டிய ஆத்துமாக்களுக் காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறது. கடைசி ஆள் உட்பிவேசிக்கும் வரை, தேவன் மீட்பின் புஸ்தகத்தைக் கையில் வைத்திருக்கவேண்டும். பாருங்கள்? இப்பொழுது அவர் போவாசைப் போன்று மீட்பின் இனத் தானின் ஊழியத்தைச் செய்துகொண்டிருக்கிறார். 19ரூத்தைப் பற்றி சமீபத்தில் நான் பிரசங்கித்தது நினைவிருக் கிறதா? ரூத் தானியத்தைச் சேர்த்தல்... முடிவில் ரூத் காத்துக்கொண் டிருத்தல். இச்சரித்திரத்தை நான் சபையுடன் ஒப்பிட்டுப் பேசினேன். போவாஸ் மீட்பின் இனத்தானின் ஊழியத்தைச் செய்து தன் பாதரட்சை யைக் கழற்றிப்போட்டு, உறுதிப்படுத்தி, நகோமியை மீட்டெடுத்து, அவள் மூலம் ரூத்தை அடைந்தான். இப்பொழுது, ரூத் ஏற்கனவே பணிசெய்து, அதன் பின்பு காத்திருந்தாள். அவள் செய்ய வேண்டிய யாவையும் செய்து முடித்த பின்னர் காத்துக்கொண்டிருந்தாள். அவ் வாறே ஆட்டுக்குட்டியானவர் மீட்பின் இனத்தானின் ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும்போது, சபையின் அநேகர் பூமியின் தூளில் நித்திரை யடைந்து மீட்கப்படுவதற்கென காத்துக்கொண்டிருக்கின்றனர். 20இப்பொழுது உலகம் இன்னும் மோசமாகிக் கொண்டே செல் கின்றது. பாவம் அதிகரித்து குவிந்துக் கொண்டு வருகிறது. அதன் விளைவால் வியாதியும் துன்பமும் மரணமும், துயரமும் உண்டாகின் றன. தேவனற்ற மனிதனும், ஸ்திரீயும் மரித்துக் கொண்டிருக்கின்றனர். தேவனளிக்கும் சுகத்தை விசுவாசத்தால் பெற்றுக்கொள்ள இயலாமல் புற்றுநோய் போன்ற வியாதிகளால் மரித்துப்போகின்றனர். இப்பொழுது கவனியுங்கள். பரிந்து பேசுதல் ஊழியம் முடிவ டைந்த பின்னர், அவர் புறப்பட்டு வந்து சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவருடைய கரத்திலிருந்து புஸ்தகத்தை வாங்குகிறார். அப்பொழுது யோவானும் பரலோகத்திலுள்ள மற்றவரும் களிகூருகின்றனர். பலி பீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்கள் கூச்சலிடுகின்றனர் என்று ஆறாம் முத்திரையில் மறுபடியும் காணலாம். மூப்பர்கள் தாழ விழுந்து பரிசுத்த வான்களின் ஜெபங்களைத் தரையில் ஊற்றுகின்றனர். பலிபீடத்தின் கீழேயுள்ள ஆத்துமாக்கள், “நீர் பாத்திரவானாயிருக்கிறீர். நீர் தேவனுக்கென்று எங்களை மீட்டுக் கொண்டீர். நாங்கள் பூமிக்குச் சென்று ராஜாக்களும் ஆசாரியர்களுமாய் வாழுவோம்'' என்று சத்தமிட்டனர். ஓ, அங்கே மகத்தான ஒரு... 21பரலோகத்திலுள்ள யாவரும், பூமியின் கீழுள்ள அனைவரும் யோவான், தான் தேவனுக்கு ஏறெடுத்த துதியைக் கேட்டதாக கூறு கிறான். உங்களுக்குத் தெரியுமா? யோவான் தன் பெயர் அதில் எழு தப்பட்டிருப்பதைக் கண்டிருப்பான் அந்த நேரத்தில்! அப்பொழுது அந்த மூப்பன், “அவர் மீட்பின் புஸ்தகத்தை வாங் கிக்கொள்ள பாத்திரவானாயிருக்கிறார்'' என்றான். அவர் அதை வாங்கிய பிறகு அது நியாயாதிபதிக்கு சொந்தமானதல்ல. அது மீட்பின் ஊழியத்தைச் செய்து முடித்த மீட்பருக்குச் சொந்தமானதாகும். இப்பொழுது, அவர் செய்தது யாதென்பதை சபைக்குக் காண் பிக்கப்போகிறார். ஆமென். பாருங்கள்? அவர் புஸ்தகத்தை வாங்கின போது... ஆனால் அந்த புஸ்தகம் மூடப்பட்டிருந்தது. அதிலுள்ள இரக சியம் யாருக்கும் தெரியவில்லை. அது மீட்பின் புஸ்தகம் என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனால் வெளிப்படுத்தல் 10-ம் அதிகாரத்தில் சொல்லியுள்ளபடி கடைசி நாட்களில் அதன் இரகசியம் வெளிப்பட வேண்டும். ஏழாம் தூதனுக்கு அச்செய்தி அளிக்கப்படும். ஏனெனில் ஏழாம் சபையின் தூதன் எக்காளம் ஊதும்போது, அவன் காலத்தில் தேவரகசியமாயிருந்த அனைத்தும் நிறைவேற வேண்டும். இவை யாவும் வெளிப்பட்ட பின்பு கிறிஸ்துவாகிய அந்த தூதன் பரலோகத்திலிருந்து இறங்கி வருகின்றார். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். பூமியில் உள்ள இந்த தூதன், ஒரு செய்தியாளன் ஆவான். 22கிறிஸ்து இறங்கி வருவதை நாம் வெளிப்படுத்தல் 10-ம் அதிகா ரத்தில் காண்கிறோம். அவர் சிரசின் மேல் வானவில் கொண்டவராய், அக்கினி ஜுவாலை போன்ற கண்களையும் அக்கினி ஸ்தம்பம் போன்ற கால்களையும் உடையவராய், ஒரு காலை பூமியின் மீதும் மற்றொரு காலை சமுத்திரத்தின் மீதும் வைத்து, கையை வானத்திற்கு நேராக உயர்த்தி “இனி காலம் செல்லாது'' என்று சதாகாலங்களிலும் உயிரோடிருந்து, சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவர் மேல் ஆணையிட்டு கூறுகிறார். அவர் இவ்விதம் ஆணையிடும்போது, ஏழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கின. ஆவிக்குள்ளாகி பரலோகத்துக்கு எடுக்கப்பட்ட யோவான் தான் கண்டவைகளையும் கேட்டவைகளையும் எழுதவேண்டுமென்ற உத்தரவு பெற்றிருந்தான். அவன் அதை எழுத ஆரம்பித்தான். அவர், ''அதை எழு தாதே'', என்றார். ஏனெனில், ''நீ அதை எழுதாதே“ அது ஒரு... அவர் கூறினார், ”அதை முத்திரைப் போடு.'' உள்ளே என்ன? “முத்திரை போடு. அதைக் கூறாதே.'' பாருங்கள் அது வெளிப்பட வேண்டும், ஆனால் அது வார்த்தையிலும் கூட எழுதப்படவில்லை. ஆகவே அப்பொழுது, ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளைத் திறந்தபோது, யோவான் கண்டவை அவனைத் தடுமாறச் செய்தன. பாருங்கள்? அவர் முதலாவது முத்திரையைத் திறந்தபோது அவன் (யோவான் - தமிழாக்கியோன்) “இப்பொழுது அது இன்னார் - இன்னார் சிங்காசனத்தில் அமருவார், நிச்சயமாக இதைச் செய்வார், இது அதைச் செய்யும் என்று இவ்விதமாக கூறும்,'' என்று எண்ணியிருந்தான். 23ஆனால் அதற்கு மாறாக ஒரு வெள்ளைக் குதிரையையும் அதின் மேலேறியிருக்கிறவனையும் அவன் காண்கிறான். நல்லது, “குதிரையின் மேலிருக்கிறவன் கையில் ஒரு வில் இருந்தது. சற்று பின்னர் அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்படுகிறது.'' என்று கூறினான். அவ்வளவே. ஆகவே ஆட்டுக்குட்டியானவர் மறுபடியுமாகத் திரும்பி வேறொரு முத்திரையைத் திறந்தபோது, கறுப்புக் குதிரையின் மேலிருக்கிறவன் புறப்பட்டுச்சென்றான். கறுப்புக் குதிரை... பூமியில் சமாதானத்தை எடுத்துப்போடவும், ஒருவரையொருவர் கொல்லத்தக்கதாகவும் அவனுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.'' அவர் முத்திரையைத் திறந்தபொழுது, அது ஒரு இரகசியமான காரியமாயிருக்கிறதல்லவா? 24அது தொடர்ந்து, 'இவ்வேழு இடிமுழக்கங்களுக்கு சற்று முன்னாளில், இங்குள்ள தேவரகசியம் யாவும் வெளிப்படுத்தப்படுகின்றன,'' என்று கூறினது. இப்பொழுது கவனியுங்கள், சபையின் காலங்களை நாம் ஆராய்ந்து கொண்டே வரும்போது சீர்திருத்தக்காரர் உண்டாயிருந் தனர்- தீர்க்கதரிசிகளல்ல என்று நாம் பார்க்கிறோம். சீர்திருத்தக்காரர்! ஒவ்வொரு உத்தியோகத்துக்கும் ஒரு பிரத்தியேக ஊழியமுண்டு. 25தொலைபேசி இயக்குநர் (Telephone Operator) மின்சார வேலை செய்பவராக (Electrician) முடியாது. ஒருக்கால் சிறிது மின்சார வேலையை அவர் செய்யலாம். அதற்காக அவரை மின்சார வேலைக்காரனாகக் கருத முடியாது. அவ்வாறே, மின்சாரக்கம்பிகள் அமைப்பதற்கென கம்பம் நடுபவன் மின்சாரக் கம்பிகளை அமைக்க முடியாது. அந்த வேலையை அவன் செய்ய விழையாதிருப்பது நலமாயிருக்கும்; ஆனால் ஒருக்கால் அந்த அலுவலை அவன் சிறிது அறிந்திருக்கலாம். 26ஆனால், கடைசி நாட்களில், சபையின் கடைசி பாகத்திற்கு, வேத வசனங்களின்படி நமக்கு அனுப்பப் போவதாக தேவன் கூறியுள்ள, நாம் முற்றிலுமாக ஆராய்ந்து பார்த்து, அவர் முன்னுரைத்துள்ள எலியாவின் ஆவி யாரோ ஒரு மனிதனுக்கு திரும்ப வரும் போது அந்த உண்மையான காரியம் வெளிப்படுத்தப்படும். நாம் அதை முற்றிலுமாக ஆராய்ந்தோம். இப்பொழுது அது வெளிப்படையாய் சொல்லப்பட்டுள்ளது. அது நிகழ்வதற்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம். அபிஷேகம் பெற்ற ஒருவர் எங்கேயாவது கடைசி நாட்களில் எழும்புவார். இப்பொழுது தீவிர மதப்பற்றுள்ள காரியங்களையும், இன்னும் மற்ற எல்லாக் காரியங்களையும் நீங்கள் கேள்விப்படுவீர்கள். ஆனால் அவை. அது பிசாசாகும். அந்த உண்மை மனிதன் இங்கே தோன்றும்போது, இன்னும் ஜனங்கள் கண்டு கொள்ளக்கூடாதென்று இது பிசாசு செய்யும் சூழ்ச்சியாகும். பாருங்கள், ஆனால் உண்மையான அந்த மனிதன் சரிவர அறிந்து கொள்ளப்படுவான். எலியா பழைய ஏற்பாட்டில் எவ்விதம் இருந்தான் என்பது உங்களுக்குத் தெரியும். இக்காலத்தில் வேறொருவன் அதுபோன்று இருக்கின்றானா என்று கவனித்துக்கொண்டு வாருங்கள். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அவனை அறிந்துகொள்வர். 27மற்றவரல்ல. மற்றவர் அவனை அறிந்துகொள்ளமாட்டார்கள். அவர்கள் இலட்சக்கணக்கான தொலை தூர மைல்கள் அளவிற்கு (amillion miles) அதை இழந்துவிடுவார்கள். இவையெல்லாம் நாம் சிந்தித்துக்கொண்டே வந்தோம். யோவானையும், எலியாவையும், இயேசு வையும் எவ்வாறு அவர்கள் அறிந்துகொள்ள முடியவில்லை என்பதை நாம் பார்த்தோம். ஆகவே அவர்கள் அதைப்போன்றே செய்வார்கள், ஏனெனில் அவர்கள் அவ்வாறே செய்வார்கள் என்று வேதாகமம் கூறுகின்றது. பாருங்கள்? அது கடைசி காலத்தில் மிகவும் தாழ்மையும், எளிமையுமாக காணப்படுவதால் ஜனங்கள் அதைக் கண்டு இடறி விழு வார்கள். அது அவர்களுக்கு மிகவும் எளிமையாக அமைந்திருக்கும். நான் காண்பது என்னவெனில்; எப்பொழுதுமே ஜனங்கள் மெருகேற் றப்பட்டவர்களாய் கல்வி ஞானம் பெற்று புத்திசாலிகளாய் எல்லா வற்றையும் அறிந்து கொள்ளும்போது, அப்பொழுது அவர்கள்... அது தான் அவர்கள் காணக்கூடாதவாறு இழந்து போகச் செய்கின்றது. உங்களுக்கு தெரியுமா, பாருங்கள்? பாருங்கள்? இயேசு புத்திமான்களையும் கல்விமான்களையும் தம்முடைய சீஷர்களாக தெரிந்துகொள்ளவில்லை. படிப்பறியாத மீன் பிடிப்பவர் போன்றவரை அவர் தெரிந்துகொண்டார். அவர்கள் அக்காலத்து சபைகளுடன் எவ்வித தொடர்பும் கொண்டிருக்கவில்லை. அவர் சாதாரண துறையிலுள்ள மனிதரை - சுங்கம் வசூலிப்பவர்கள், குடியானவர்கள், மீன் பிடிப்பவர்கள் போன்றவரை- தம்முடைய ஊழியத்திற்கென்று தெரிந் துகொண்டார். பாருங்கள்? ஏனெனில் அவர்கள் தாங்கள் ஒன்றுமற்ற வர் என்பதை அறிந்திருந்தனர். அப்பொழுது அவர்களை உபயோகித்து பெரிய காரியங்களைச் செய்யலாம் என்பதை இயேசு அறிந்திருந்தார். அவர்கள் தங்களை ஒன்றுமில்லாதவர்கள் என்று கருதும்போது மாத்திரமே தேவன் அவர்கள் மூலம் கிரியை செய்யமுடியும். 28ஆனால் எல்லாம் அறிந்தவர்கள் என்று நினைப்பவர்கள், அவர்கள் அறிய வேண்டியவைகளை அறிந்துகொள்ளாமல் இருக்கின்றனர் என்பதாக வேதம் கூறுவதை நாமறிவோம். ஆகவே , இப்பொழுது இந்த இரகசியங்கள் வெளியரங்கமாக வேண்டும் என்று நாம் பார்க்கிறோம். நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல் போன்றவைகளைப் போதித்த லூத்தர், வெஸ்லி இன்னும் மற்ற சீர்திருத்தக்காரர், பெந்தெ கொஸ்தே காலத்தின் உடனுள்ள பரிசுத்த ஆவியின் அபிஷேகம், மற்றும் காரியங்கள் ஏன் இந்த செய்திகளை புரிந்து கொள்ள முடியாமற் போயிற்று? ஏன் அவர்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர்கள் சீர்திருத்தக்காரர்களாய் இருந்தனர். பாருங்கள்? அங்கே உள்ளே வந்த ஜனங்கள், “ராஜாக்கள்போல் வல்லமை யுடையவராய் இருந்தனர். ஆனால் அவர்கள் ராஜாக்கள் அல்ல'' என்பதைப் போன்றதாகும். பாருங்கள்? பாருங்கள்? எந்த ஒன்றிற்கும் நீங்கள் வேதக்கூற்றை உடையவராயிருத்தல் வேண்டும். பாருங்கள்? இப்பொழுது கவனியுங்கள். நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் போன்ற சத்தியங்களில் இதுவரை வெளிப்படாத இரகசியங்களும், ஏவாள் தின்றது ஆப்பிள் கனியா அல்லது மாதுளம் பழமா? அல்லது வேறென்றா பாருங்கள்? சர்ப்பத்தின் வித்து என்பது என்ன? ”பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத் திலுள்ள ஞானஸ்நானமா,'' அல்லது “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலுள்ள ஞானஸ்நானமா,'' இவைகளில் எது சரி? போன்ற விடுபட்டுப்போன நூற்றுக்கணக்கான இரகசியங்களும் இப்பொழுது வெளிப்படவேண்டும். பாருங்கள்? 29ஆகவே, கடைசி மணி வேளையில் இந்த மனிதன் தோன்றி வேதத்தின் வாயிலாக இந்த இரகசியங்களை வெளிப்படுத்தவேண்டும். அது சரிவர அடையாளங் கண்டு கொள்ளப்படும். கவனியுங்கள். ஆம், ஐயா. ஆகவே இப்பொழுது அது ஒரு மகத்தான, பெரிய காரியமாக இருக்காது. இங்கே வேதத்தில் அது ஏதோ ஒரு பெரிய காரியம் போன்று காணப்படுகிறது. யோவான் ஸ்நானன் வந்து, ஞானஸ்நானம் கொடுப்பதாய் இருந்தபொழுது, அது எவ்வளவு மகத்தான ஒன்றாய் இருந்தது! இப் பொழுது அதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். யோவான் ஸ்நானனின் தோற்றத்தை ஏசாயா, மல்கியா இவர்கள் தீர்க்கதரிசனம் உரைத்தனர். ஆனால் அவனோ தனியனும், வயது முதிர்ந்தவனும், கல்வியறிவு இல் லாதவனாய், முகம் முழுவதும் தாடியை வளர்த்துக்கொண்டு, ஒரு பழைய ஆட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு வனாந்தரத்திலிருந்து வந் தான். நமக்குத் தெரிந்தவரையில், அவன் ஜீவிய காலத்தில் ஒரு நாளா வது பள்ளிக்கூடம் செல்லவில்லை. பாருங்கள்? இங்கே அவன் வனாந் தரத்தை விட்டு வெளியே வருகிறான், ஒரு பிரசங்க பீடத்திற்கு கூட அழைக்கப்படக்கூடாத நிலைமையில் அவன் இருந்தான். அவன் யோர்தான் நதியில் நின்று கொண்டு ஜனங்கள் மனந்திரும்ப வேண்டு மென்று பிரசங்கித்தான். நீங்கள் கற்பனை செய்யக் கூடுமா! 30“மலையும் குன்றும் தாழ்த்தப்படும், பள்ளமெல்லாம் உயர்த்தப் படும் அளவிற்கு, அந்த காலத்திலிருக்கும் ஒவ்வொன்றும் மகத்தான தாயிருக்கும்'' என்று வேதம் கூறுகின்றது. ஆம், ஐயா. ''கரடு முரடானவை சமமாகும்.'' யோவான் கிறிஸ்துவின் முன்னோடியாக வரும்போது, வனாந் தரத்தை எல்லாம் சமப்படுத்தி, அதில் புல்லை முளைப்பிப்பான் என்று அவர்கள் எண்ணியிருக்கக்கூடும் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன். பாருங்கள்? ஓ! மகத்தான காரியங்கள் நடைபெறுமென்று இன்று எண்ணுவதுபோன்றே ஜனங்கள் அன்றும் எண்ணியிருப்பார்க ளென்று நினைக்கிறேன். ஆனால் அது எளிமையாக அமைந்திருந்த காரணத்தால், இயேசு வின் சீஷர்களும்கூட அதைக் காணத்தவறினர். அவர்கள் இயேசுவிடம், ''நீர் உம்மை பலியாக ஒப்புக்கொடுக்கப்போகிறீர், எலியா தீர்க்கதரிசி முதலில் வரவேண்டுமென்று வேதம் உரைத்துள்ளதே!'' என்று கேட் டனர். அதற்கு அவர், ''அவன் வந்தாயிற்று. நீங்களோ அதை அறிய வில்லை' அதே போல அவர்கள் மனுஷ குமாரனுக்கும் அதையே செய் வார்கள்“ என்று பதிலுரைத்தார். ஆனால் யோவானோ, ''என்ன செய்ய வேண்டுமென்று எழுதப்பட்டிருந்ததோ அதை அவன் செய்தான். அவர்கள் அவனுக்கு என்ன செய்ய வேண்டுமென்று எழுதப்பட்டுள்ளதோ, அதை அவர்கள் செய்தனர்'' என்று அவர் சொல்லி, ”மனுஷ குமாரனும் இவ்விதம் பாடுபட வேண்டும்'' என்று முடித்தார். யூத வம்சத்திலிருந்தவரில் மூன்றில் ஒரு பாகம்கூட இயேசு கிறிஸ்து பூமியில் தோன்றியதை அறியவில்லை. மூடநம்பிக்கை கொண்ட ஒருவன் ஏதோ செய்துகொண்டிருக்கிறான் என்று அவர்கள் எண்ணி எவ்வித கவனமும் செலுத்தவில்லை. “அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார். அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ள வில்லை.'' இப்பொழுது, நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது, அவர் இரகசியமாக வருவார் என்று சொல்லப்படவில்லை. 31ஆனால் எடுக்கப்படுதல் இரகசியமாக நிகழும். ஆகவே அவரது தோற்றம் அவ்வளவு இரகசியமாக இருந்தால், அதைக்காட்டிலும் அதிக இரகசியமாக எடுக்கப்படுதலும் இருக்கவேண்டும்! பாருங்கள்? அவர்கள் அதை அறிய முடியாது. அவர்கள், ''பூமியில் இந்த நியாயத்தீர்ப்பு உண்டாகும் முன்பு எடுக்கப்படுதல் சம்பவிக்குமென்று நாங்கள் எதிர் பார்த்தோம்'' என்பார்கள். அவரோ, “அது ஏற்கனவே சம்பவித்துவிட்டது. நீங்கள் அதை அறியாமல் போனீர்கள்'' என்பார். பாருங்கள்? அது இரவில் திருடன் வருகிற விதமாய் வரும். நான் ஒருமுறை படித்த அந்த புஸ்தகத்தைப்போல... அதன் பெயர் என்ன? 'ரோமியோவும் ஜூலியட்டுமா? அல்லது வேறொன்றா?' 'ரோமியாவும் ஜூலியட்டும்' என்ற நாடகத்தில் காதலன் இரவு நேரத்தில் ஏணியை வைத்து, அதன் வழியாக இறங்கி காதலியை அவன் அடைந்ததற்கு ஒப்பாக அது இருக்கும். நான் அதை நீண்ட காலத்துக்கு முன்பு படித்திருக்கிறேன். 32இப்பொழுதும் அது இவ்விதமாகவே சம்பவிக்கும். அது கடந்து போகும். ஒரு கூட்டம் தேவதூதர்கள் மண்வெட்டிகளினால் கல்லறை களைத் தோண்டுவார்கள் என்று நினைப்பது தவறாகும். “உங்கள் கண்களை நீங்கள் இமைக்கும் முன்பு- இமைப்பொழுதில்- நாமெல்லாரும் மறுரூபமாவோமென்று'' வேதம் கூறியுள்ளது. 'அவர் காணாமற் போய்விட்டார்' என்று நீங்கள் சொல்வீர்கள். நல்லது, நான் இவ்விதம் கற்பனை செய்து பார்க்கிறேன். இன்றைக்கு பூமியிலிருந்து ஒவ்வொரு நாளும் மறைந்து காணப்படாமற் போன ஐந்நூறு பேரை நாம் உலகம் முழுவதும் தேடுவோமானால், பாருங்கள், ஆனால் அவர்கள் காணாமற் போனதை உலகிலுள்ள எல்லா ருமே அறிவது கிடையாது. அவர்கள் காணாமற் போய்விடுவர். நல்லது, அந்த எடுக்கப்படுதலிலும் அநேகம் பேர் செல்வதில்லை. 33இப்பொழுது நான் உங்களை பயமுறுத்த விரும்பவில்லை. அது அவ்விதமல்ல என்றே நான் நினைக்கிறேன். ஆனால் கர்த்தர் கூறி யுள்ளதை நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். நீங்களே அதை அறி வீர்கள். ''நோவாவின் நாட்களில் தண்ணீரினால் எட்டுப் பேர் காப் பாற்றப்பட்டதுபோல..... உலகத்திலிருந்தவர்களில் எட்டுப் பேர் மாத் திரமே அக்காலத்தில் தண்ணீரினால் காப்பாற்றப்பட்டனர்.'' நல்லது. ''ஓ, என்னே ! 'அப்படியானால் நான் முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை'' என்று நீங்கள் கூறலாம். எடுக்கப்படுத லுக்கு அவசியமான விசுவாசம் உங்களிடம் இல்லை என்பதை அது காண்பிக்கின்றது. எடுக்கப்படுதலில் ஒருவன் மாத்திரம் செல்வானேயாகில், அது நானாயிருக்கவேண்டும். ஆமென், பாருங்கள். ஏனெனில் நான் அவர் மீது விசுவாசம் கொண்டிருக்கிறேன் “அது நான்தான்''. இவ்விதமே நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். நிச்சயமாக. 'நான் அவரிடம் நெருங்கி ஜீவிக்க விரும்புகிறேன் அப்படியானால் அவர் வரும்போது என்னைக் கொண்டு செல்வாரென்று நான் அறிந்திருக்கிறேன். நான் அதை விசுவாசிக்கிறேன். அது உண்மை . மற்றவர் அதில் செல்லத்தவறினாலும், அவருடைய கிருபையால் நான் அங்கிருப்பேன். ஏனெனில் அவர் எனக்கு அவ்விதம் வாக்களித்துள்ளார். நான் அங்கிருப்பேன் என்று அறிந்திருக்கிறேன். அவர் ஒருபோதும் பொய்யுரையார். நான் தினந்தோறும் அவர் இன்று வருவாரென்று கருதி அவருக்குகந்த விதத்தில் ஜீவிக்கிறேன் என்பதை என் ஆத்துமாவும் ஜீவனும் சாட்சி கொடுக்கின்றன. ஆகவே எடுக்கப்படுதலில் நான் நிச்சயமாக இருப் பேன். எட்டு பேர் எடுக்கப்பட்டால், நான் எட்டுப்பேரில் ஒருவனா யிருப்பேன். ஐந்நூறு பேர் எடுக்கப்பட்டால் நான் ஐந்நூறு பேரில் ஒரு வனாக இருப்பேன்' என்று நீங்கள் விசுவாசிக்கவேண்டும். மற்ற நபரைப் பற்றி நான் அறியேன், ஆனால் நான் அந்த ஐந்நூறு பேரில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன்,'' பாருங்கள்? நீங்கள் அவ்விதம்தான் ஞாபகங்கொள்ள வேண்டியவராய் இருக்கிறீர்கள். பாருங்கள்? நீங்கள் அவ்விதம் விசுவாசிக்காவிடில், நீங்கள் கொண்டிருக்கும் விசுவாசத்தில் ஏதோ தவறுண்டு. பாருங்கள்? அவ்வாறாயின் இரட்சிக் கப்பட்டதன் நிச்சயம் உங்களுக்கு ஏற்படவில்லை. இரட்சிக்கப்பட்ட தாக நீங்கள் ஊகித்துக்கொள்கின்றீர்கள். அவ்விதம் செய்யவேண் டாம். சரி. 34நாம் இம்முத்திரைக்குள் வரமுடியாமல் இருக்கிறோம் அல்லவா? சரி. நான் விரும்புவது, ஒவ்வொரு இரவும்... நான் உங்கள் நேரத்தை எடுத்துக்கொள்வதைக் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்பதை நான் அறியேன். நாம் சிறிது சீக்கிரமாகவே போகக்கூடும். அவ்விதம் அதிகமாக இந்த முத்திரைகள் வெளிப்படுதலில், ஒவ்வொரு முத்திரையைப் பற்றி விவரணமும் ஒரே வசனத்தில் அடங்கியுள்ளது என்பதை ஞாபகங் கொள்ளுங்கள். முதல் வசனம், அதனைக் குறித்து அறிவிக்கின்றது. அதன்பின் இரண்டாம் வசனம். நான் மற்றவர்களின் வர்ணனைகளையும், அவர்கள் சிந்தனைகளையும் நான் படித்தபோது, வெள்ளைக் குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் ஆதி சபையென்று அவர்களைப் போல் நானும் நினைத்திருந்தேன். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அதன் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தினபோது, அது முற்றிலும் அதற்கு மாறுபட்டதாயிருந்தது. ஆகவே, அது? செய்வதெல்லாம், அது என்ன என்பதையே காண்பிக்கின்றது. அதன்பின் நான் முயற்சிக்கிறேன்... 35இப்பொழுது, இது எனக்கு மிகவும் புனிதமானதாய் உள்ளது. அதன் காரணமாகவே, நான் அந்த கேள்விகளுக்கு பதிலளிப்பேன். நாம் ஒவ்வொருவரும், ஒலிநாடாக்களைக் கேட்பவரும் கூட அதைச் சரி யாகப் புரிந்துகொள்ளும்படியாக, நாம் அதை இப்பொழுது பெற்றுக் கொள்வோமாக. பாருங்கள்? நான் ஒவ்வொரு இரவும், ஜனங்கள் பெற் றுக்கொள்ள... முன்னுள்ளவைகளைப் பேச சிறிது நேரம் முயற்சிக் கிறேன். நீங்கள் தள்ளிக்கொண்டு உள்ளே வருவது... நீங்கள் அவ்விதம் செய்யக்கூடாது. பாருங்கள்? ஆனால் நாம் அவ்வாறு செய்யும்போது, அது மனித இயல்பாயுள்ளது. இங்கே மிகவும் உஷ்ணமாயுள்ளது, நீங் களும் தவித்துவிடுகிறீர்கள். 36ஆனால் நீங்கள் மிகமிக அருமையாகவே இருந்து வருகிறீர்கள். நீங்கள் அமைதியாக அமர்ந்திருப்பதும், தாய்மார்கள் தங்கள் குழந் தைகள் அழத் துவங்கும்போது அவர்களைக் குழந்தைகள் அறைக்கு எடுத்துச் செல்வதும், இவ்வாறு மக்கள் செயல்படுவதை, இந்தக் கூட்டங் களில்தான் மிகச்சிறப்பாக இருந்து வருகின்றது. நான் வேறு எப் பொழுதும் இவ்வாறு இக்கூடாரத்தில் கண்டதில்லை. ஒவ்வொன்றும் மிகவும் அருமையாகவே இருந்துவருகிறது. எனக்கு வெளிப்படுத்தப்பட்டது எதுவோ அந்த வார்த்தைகளை நான் சொல்லும்படியாக, பரிசுத்தாவியின் அபிஷேகம் என் மேல் வரு வதை நான் உணரும் வரையிலும், நான் முன்பு பேசியவைகளைப் பேச முயற்சிக்கிறேன். நான் அவ்வாறு செய்கையில், நான் இங்கே தவறு செய்திருப்பேனாகில், எல்லா மக்களுக்கும் முன்பாக நிச்சயமாக அவர் அதை எனக்காக திருத்துவார். நான் அதை விரும்புகிறேன். அது... நான் அதை உண்மையாக விரும்புகிறேன். நாம் என்ன கற்பனை செய்கிறோமோ அதை எடுக்கவேண்டிய அவசியமில்லை. சரியானது ஒன்று உண்டு, நாம் அதையே விரும்புகிறோம். எது சரியோ, தேவன் நமக்கு அதையே அளிக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். 37ஆகவே, நாம் இப்பொழுது, குதிரையின் மேல் சவாரி செய்கிற இவர்களை ஒவ்வொன்றாய் நாம் பார்த்தோம். வெள்ளைக் குதிரையின் மேல் புறப்பட்டுச் சென்றவன் அந்திக்கிறிஸ்து என்று நாம் பார்த்தோம். அந்திக்கிறிஸ்துவாக புறப்பட்டுச் சென்ற அதே ஆள் சிவப்பு குதிரையின் மேலேறி சவாரி செய்து, கையிலுள்ள பட்டயத்தினால் ஜனங்களைக் கொல்வதாக நாம் சென்ற இரவு அறிந்துகொண்டோம். இப்பொழுது, இப்பொழுது, மாம்சப் பிரகாரமான ஒன்று எப்பொழு துமே ஆவிக்குரிய ஒன்றுக்கு நிழலாய் உள்ளது. மூன்றாம் முத்திரை யைக் குறித்து சிந்திக்கும் முன்பு சபையின் நிமித்தமாக நான் இந்த உதாரணங்களை (type), தேவன் எனக்கு அருளியவைகளை இந்த சபைக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன். தேவன் அவைகளை எனக்குக் கொடுத்தார். அதைக் குறித்த வேத வாக்கியங்களை நான் எழுதிக்கொண்டு வந்திருக்கிறேன். அநேக வேத வசனங்களை நான் இங்கே வைத்துள்ளேன். அவை ஏழு அல்லது எட்டு பக்கங்கள் உள்ளன. நான் அந்த குறிப்புகளைக் கொண்டு பேசுவேன். 38கவனியுங்கள். நான் சபையைக் குறித்த உதாரணங்களைக் கொடுத்து, நீங்கள் அவைகளை கட்டாயமாகக் காணும்விதத்தில், மிகவும் தெளிவாக்க விரும்புகிறேன். இவ்வித உதாரணங்களை அளிக் கும்போது, நீங்கள் நன்றாக புரிந்துகொள்ள ஏதுவாகும். இப்பொழுது, ஏதேன் தோட்டத்தில் மாம்சப் பிரகாரமான மண வாட்டி இருந்தாள். நேற்று இரவு (கூறினது... தமிழாக்கியோன்) ஞாபகம் உள்ளதா? மாம்சப் பிரகாரமான மணவாட்டியான அவள் ஆதாமினு டைய இருதயத்தின் இனிமையானவளாக (Sweet heart) இருந்தாள். அவள் ஆதாமுக்கென்று நியமிக்கப்பட்டவளாயிருந்தாள். அவள் அப் பொழுது அவன் மனைவியாகவில்லை. ஆதாம் அப்பொழுது அவளை மனைவியாக அறிந்திருக்கவில்லை. 39அது மரியாளும், யோசேப்பும் போல. யோசேப்பு தன் மனைவி யாகிய மரியாளை அறியும் முன்பே, 'அவளுக்குப் பிள்ளை உண்டா யிருந்தது.'' பாருங்கள்? இப்பொழுது, ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறியும் முன்பு அவள் அவனுடைய மணவாட்டியாக மட்டுமே இருந்தாள். சரி. நாம் காண்கிறோம். தேவன்... அவள், அவள் தேவனுடைய வார்த்தையில் நிலை நிற்கத் தவறியதால், ஏதேன் தோட்டத்தில் விழுந்துபோனாள். இப்பொழுது, சாத்தான் அவர்கள் மத்தியில் அவிழ்த்து விடப்படு வான் என்பதைக் கர்த்தர் அறிந்திருந்தார், ஆகவே, அவர்கள் மறைந்து தங்கியிருக்க அரணாக ஒரு ஸ்தலத்தை அளித்திருந்தார். நல்லது. தேவன் தம் பிள்ளைகளைப் பாதுகாக்க முன் வரும்போது, தேவனைத் தவிர வேறு யார் சிறந்த அரண் ஒன்றை அமைத்து தர முடியும்? 40என் மகன் ஜோசப்பை உயிர்போகும் ஆபத்தினின்று காக்க வேண்டுமென்று நான் விரும்பினால், நல்லது சகோதரனே, அதற்கு நாற்பது அடி கான்கிரீட் அமைப்பு போதுமானதாயிருந்தாலும், அதிக பாதுகாப்பு அளிக்க நான் தொண்ணூறு அடி கான்கிரீட் அமைப்பைக் கட்டுவதற்கு முயல்வேன். ஏதாவது ஒருநாள் இறக்கவேண்டிய என் சிறு பையனைக் குறித்து (குழந்தையும் இரட்சிக்கப்படக்கூடும் என்று நான் விசுவாசிக் கிறேன்) நான் இவ்வளவு அக்கரை கொள்வேனானால், அதைக் காட்டிலும் எவ்வளவு அதிகமாக தேவன், தம் பிள்ளை நித்தியத்தை இழக்கக் கூடாதென்று பாதுகாப்பளிப்பார்! அவர் எதற்குப் பின்னால் ஆதாமை மறைத்திருந்தார்? தம் சொந்த வார்த்தையின் பின்னால் அவனை வைத்திருந்தார். நீங்கள் அவ்வார்த்தையில் நிலைநிற்கும் வரை, பாதுகாப்பாய் இருக்கின்றீர்கள், ''நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.'' அதுதான் வார்த்தையின் முக்கியத்துவம். 41ஆகவே, ஏவாள் ஏதேன் தோட்டத்தில் உலாவிக்கொண்டிருந்த சமயம் சர்ப்பத்தைச் சந்திக்க நேர்ந்தது. அவன் மிகவும் நாகரீகமும் பெருமையும் கொண்டவன். அவள்... அவன் ஆரம்பித்தான். தேவன் எளிமையில் வாழ்ந்து கிரியை செய்பவர் ஆவார். - வேறு எந்த விதத்திலும் அல்ல. பாருங்கள்? அதற்கு மாறான தன்மைகளைச் சாத்தான் கொண்டிருந்தான். தாழ்மையுள்ள அந்த சிறிய ஸ்திரீ அங்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, புத்தியும் நாகரீகமும் கொண்ட சாத்தான் அங்கு வந்து, அவன் தீட்டியிருந்த திட்டத்தை அவளுக்கு விற்க முற் பட்டான். சாத்தான் எவ்வளவாக அவளைச் சூழ்ந்து இருந்தாலும், வார்த் தையை அவள் அரணாகக் கொண்டிருந்தால் எல்லாம் சரிவர அமைந்தி ருக்கும். (சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய வேதாகமத்தை மெது வாகத் தட்டுகிறார் - ஆசி) பாருங்கள்? சாத்தான் அவன் விருப்பப்படி எதை வேண்டுமானாலும் செய்யட்டும்; நீங்கள் வார்த்தையில் மாத்திரம் நிலைநில்லுங்கள். எந்த விதத்திலும் அதில் சிறிதளவு வித்தியாசமும் வேண்டாம். அவன், 'நீ ஏன் வியாதிப்பட்டிருக்கிறாய்?' என்று கேட்டால், 'அவருடைய தழும்புகளால் நான் குணமானேன்' என்று பதில ளியுங்கள். அவன், 'நீ மரிக்கும் தருவாயிலிருக்கிறாய்' என்றால், 'அவர் என்னை உயிரோடெழுப்புவார்; அவர் அதை வாக்களித் துள்ளார்' என்று பதிலளியுங்கள். 42பாருங்கள்? வார்த்தையை அரணாகக் கொண்டு அதன் பின்னால் மறைந்திருங்கள்- அவ்வளவுதான். கிறிஸ்துவும்கூட ''எழுதியிருக் கிறதே'' என்று கூறி வார்த்தையின் பின்னால் ஒதுங்கியிருந்தார். பாருங்கள்? இப்பொழுது, வார்த்தையின் பின்னால் மறைந்திருங்கள். ஆனால் ஏவாளோ வார்த்தையைத் தளரவிட்டாள். வார்த்தை முழு வதையும் அவள் விட்டுவிடவில்லை. அதில் ஒரு சிறிய பதத்தை மாத்திரம் அவள் விட்டுவிட்டாள். சாத்தானும் அவள் அதையே செய்ய வேண்டுமென்று விரும்பினான். ஞானத்தின் காரணத்தால் அவள் தேவனுடைய வாக்குத்தத்தத்தை விட்டு அகன்றாள். தேவனுடைய வார்த்தையை நீங்கள் விவேகிக்கத் தலைப்பட வேண்டாம். அதை அப்படியே விசுவாசியுங்கள். பாருங்கள்? 43ஆகவே, அவள் அங்கிருந்து அடியெடுத்து வைத்தாள். ஆதாம் ஏவாளை மனைவியாக அறியும் முன்பே அவள் சாத்தானால் ஏற்கனவே கறைபட்டுப்போனாள். அவள்... நம்மை மீட்பதற்காக கிறிஸ்துவும் சரியாக அவ்வாறே செய்தார் என்று தெரியுமா? இப்பொழுது, நாம் மீட்கப்படுவதற்கு நமக்கு தேவன் அவசியம். நீங்கள் அதைக் கவனித்தீர்களா? ஆகையால் யோசேப்பு மரியாளை அறியுமுன்பு, பரிசுத்த ஆவியானவர் அவளை நிழலிட்டார். ஆமென். பாருங்கள்? அதன் விளைவாக மீட்பர் தோன்றினார். இப்பொழுது, இப்பொழுது கவனியுங்கள். மாம்சப் பிரகாரமான ஸ்திரீ பாவத்தில் விழுந்தபோது, அவளை மீட்டெடுக்க தேவன் ஒரு வழியை வகுத்தார். அவள் விழுந்துவிட்டபோதிலும், அவர் ஒரு வழியை ஏற்படுத்தினார். இப்பொழுது, உலகத்தின் முதல் மணவாட்டி, அவள் ஆதாமின் மனைவியாக வாழ்க்கைப்படுமுன்பு, வார்த்தையில் நிலை நிற்பதற்குப் பதிலாக விவேகத்தை உபயோகித்து, அவள் விழுந்தாள். மரணத்தை -நித்திய பிரிவினையை - ஏற்றாள். அவளுடன் அவன் கணவனும் பூமி யிலுள்ள மற்றெல்லாமே விழுந்து போயின. அவள் விழுந்தாள்! இப்பொழுது, ஆனால் இரக்கம் நிறைந்த தேவன் ஸ்திரீ மீட்கப் படுவதற்கு ஒரு வழியை வகுத்தார். உண்மையான வார்த்தை அவளி டத்தில் மறுபடியும் தோன்றுமென்று அவர் வாக்களித்தார். உண்மை யான வார்த்தை அவளுக்கு அறிவிக்கப்படும். கிறிஸ்து ஸ்திரீயின் மூலம் தோன்றுவார் என்று அவர் வாக்குத்தத்தம் செய்தார் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். ஆகவே கிறிஸ்துதான் வார்த்தை . யோவான் 1:1 “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாய் இருந்தது, அந்த வார்த்தை மாம்ச மாகி... நமக்குள்ளே வாசம் பண்ணினார்,'' தேவன் நம் மத்தியில் மாம்சத்தில் வாசம் செய்தார். அவர் வார்த்தையாயிருந்தார். 44அது வார்த்தையாகு முன்பு சிந்தையாயிருக்கும். ஒரு சிந்தை என்பது உருவாக்கப்பட வேண்டும். சரி. ஆகவே, தேவனுடைய சிந்தனைகள் ஒரு வார்த்தையினால் பேசப்படும்பொழுது, அது சிருஷ்டிப் பாகிறது. அதாவது, அவர் ஒரு சிந்தையை, தம்முடைய சிந்தையை உங்களிடத்தில் கொடுக்கும்பொழுது, அது உங்களுக்கு வெளிப் படுத்தப்படுகின்றது. நீங்கள் அதைப் பேசுகின்ற வரையில், அது இன்னும் சிந்தையாகவே இருக்கின்றது. அதன் காரணமாகவே... 45மோசே ஜெபிக்கச் சென்றான். மோசேயைச் சுற்றி அக்கினி ஸ்தம்பம் இருந்தது. அவர் அவனிடம் “உன் கோலை கீழ்த்திசைக்கு நேராக நீட்டி வண்டுகளை வரவழைப்பாயாக'' என்றார். அப்பொழுது வண்டுகள் அங்கு இல்லை. ஆனால் அவன் போய் தன் கோலை நீட்டி, ''வண்டுகள் உண்டாகட்டும்'' என்று கட்டளை யிட்டான். இன்னும், வண்டுகள் என்பதே அங்கு இல்லை. அவனோ கடந்து சென்றான். தேவனுடைய சிந்தையானது வார்த்தையாக பேசப் பட்டு, அது வண்டுகளை சிருஷ்டித்தது. அது தேவனுடைய வார்த்தை யாயிருப்பதால், அதன் சொற்படி நிகழவேண்டும். இயேசுவும், “நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம் போ என்று சொல்ல; நான் (இயேசு - தமிழாக்கியோன்) சொல்லும்போதல்ல, ஆனால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து சொல்லும்போது, அது போகும்'' என்றார் என்பதை நீங்கள் காண வில்லையா? 46மோசே வண்டுகள் உண்டாகக் கட்டளையிட்டபோது, முதலில் சில பச்சை வண்டுகள் ரீங்காரம் செய்து பறந்திருக்கும். பின்னர் ஒரு கெஜம் நிலத்திற்கு ஐந்து பவுண்டு எடையுள்ள வண்டுகள் உண்டாயி ருந்தன. பாருங்கள்? அவை எங்கிருந்து வந்தன? அவர்... தேவன் அவை களைச் சிருஷ்டித்தார். எவ்விதம்... நீங்கள் காணவில்லையா? தேவன் விரும்பினால், இவ்வுலகை இன்றிரவே சிறிய கொசுக்க ளால் (Gnats) அழிக்க முடியும். நல்லது. ஏன், அவர் சந்திரன் வரை யுள்ள உயரத்திற்கு கொசுக்களைக் குவியலாகக் குவிக்க முடியும். அவர் ''சந்திரன் வரை கொசுக்கள் உண்டாகட்டும்“ என்று சொன்னால் மாத்திரம் போதும். இரசாயனங்களோ, வேறொன்றோ அல்ல, அவை உயர்ந்து, உயர்ந்து, உயர்ந்து கொண்டே சென்று சந்திரனையடையும். பாருங்கள்? தேவன் சிருஷ்டி கர்த்தராயிருப்பதால் அவர் விரும்பும் எதையும் சிருஷ்டிக்கலாம். அதை சிருஷ்டிக்க அவர் பேசினால் போதும். (சகோதரன் பிரான்ஹாம் தன் விரல்களை ஒருமுறை சொடுக்குகிறார் - ஆசி) அது உண்மை . அவர் சிருஷ்டிகர். இப்பொழுது, அவர் எவ்வளவு மகத் தானவர் என்பதை மட்டும் நாம் அறிந்து கொள்வோமானால்! பாருங்கள்? அவர் தம் விருப்பம் எதுவோ அதை மட்டும் செய்கிறார். அத்தகைய மகத்தான தேவன் பரலோகத்தில் வீற்றிருந்து, “தேவன் இல்லை'' என்று சொல்லிக்கொண்டிருக்கும் இச்சிறு கல்விமான்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஊம்! மறுபடியும் பாபேல் காலத் தைப் போன்று இப்பொழுதுள்ளது. 47இப்பொழுது கவனியுங்கள், 'வெகுகாலம் கழித்து வார்த்தை உன்னிடத்தில் திரும்பவும் வரும்' என்று தேவன் ஏவாளிடம் கூறினார். இப்பொழுது, அவள் எவ்விதம் விழுந்தாள்? என்னுடைய வகுப்பு அதைச் சொல்லவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவள் எதினின்று விழுந்தாள்? ஏவாள் எதினின்று விழுந்தாள்? வார்த்தை. அது உண்மையா? (சபையார், “வார்த்தை'' - ஆசி) வார்த்தை. எனவே, தேவன், அவளை மீட்டெடுத்து வார்த்தைக்குக் கொண்டு வர ஒரு வழியை உண்டாக்குவேன் என்று சொன்னார். சரி. வெகு காலம் கழித்து அவள் வார்த்தையை அறிந்து கொள்வாள். சரி. ஒரு நோக்கத்திற்காக வார்த்தை இப்பொழுது அவளிடம் வரும். நான் கூறுவதை இறுகப் பற்றிக்கொள் ளுங்கள். ஒரு முக்கிய நோக்கத்திற்காக வார்த்தை அவளிடம் வரும்மீட்பிற்காக. சரி. ஆனால் அந்த மூல வார்த்தை வரும்வரை, ஒரு ஈடு (Substitute) அவளுக்கு அளிக்கப்பட்டது. இப்பொழுது, நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்கிறீர்களா? (சபையார், 'ஆமென்'' என்கின்றனர் - ஆசி ) பாருங்கள்? அவர் அவளிடம் வார்த்தையானது மறுபடியும் அவளிடத்திற்கு வரும் என்று கூறினார். அது வரும்வரையிலும் அவளுக்கு ஒரு ஈடு அளித்தார். ஆகவே, அந்த இரத்தத்திற்காக அவள் ஒரு பலியைச் செலுத்தும்படி ஒரு ஈடை அவர் அவளுக்கு அளித்தார். 48இப்பொழுது, அதாவது காளை, செம்மறியாடு, வெள்ளாட்டுக் கடா, இவைகளின் இரத்தத்தைச் செலுத்தலாமென்று அவளுக்குக் கூறப் பட்டது. ஆனால் அது பாவத்தைப் போக்கவில்லை. பாருங்கள்? அது அவளுடைய பாவத்தை மூடினது. அது பாவத்தை ஒருபோதும் போக்க வில்லை. அது அதை மூடினது. ஏனெனில் அது மிருகத்தின் இரத்தம். மிருகத்தின் இரத்தத்தில் மிருகத்தின் ஜீவன்தான் உள்ளது. நிஜமானது வரும்வரையில் அது ஒரு ஈடாக இருந்தது. இப்பொழுது... (now get your coats on.) அது மனித ஜீவனுக்கு ஈடாக முடியாது. மனித இரத்தத்தில் மனித ஜீவன் உண்டு. தேவன் இனச் சேர்க்கையின்றி கன்னியின் வயிற்றில் அவதரிக்கும் வரை, மிருகத்தின் இரத்தம் ஈடாக அளிக்கப் பட்டது. இப்பொழுது தேவன் வாக்குத்தத்தம் செய்த வார்த்தையானது இரத்தமாகி, இயேசுகிறிஸ்து என்னும் நம் இரட்சகரில் குடிகொண்டது. ''காளை வெள்ளாட்டுக்கடா மற்றவைகளின் இரத்தம்...'' ஆனால் இப்பொழுது பொறுத்திருங்கள். ஸ்திரீயின் வித்து வரும் போது “அது சர்ப்பத்தின் தலையை நசுக்குமென்று'' இங்கே தேவன் வாக்கருளியிருந்தார். இப்பொழுது, அவளுடைய வித்து ஆதாமிலிருந்ததைப் போலவோ அல்லது சர்ப்பத்திலிருந்ததைப் போலவோ, அவ்வழி யில் தோன்றியிருந்தால் அது இன்னும் பாவத்தில் பிறந்த வித்தா யிருக்கும். 49அதன் காரணமாகத்தான் யோவான் அழுதான். ஒரு மனிதனும் பாத்திரவானாகக் காணப்படவில்லை. எல்லோரும் பிளவின் மற்றைய பாகத்தில்தான் இருந்தனர். ஆனால் தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டு அவருடைய இரத்தம் சிந்தப்படும்போது, அதற்கு ஈடாக அளிக்கப்பட் டிருந்த காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தம் செலுத்தப் படுதல் முடிவடையும். தேவன், மாம்சமும் இரத்தமும் ஆகுதல். தேவன் அவ்விதம் ஆனார் என்று வேதம் கூறுகின்றது. 1 தீமோ.3:16 ''அன்றி யும் தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்கிற படியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப் பட்டார்....'' அது உண்மை . ஆம் கன்னி வயிற்றில் பிறத்தல் அதைச்செய்தது. இப்பொழுது, காளை, வெள்ளாட்டுக்கடா, இவைகளின் இரத்தம் பாவத்தை மூடினதேயன்றி அதைப் போக்கவில்லை. ஏனெனில் அது மிருகத்தின் இரத்தமாயிருந்தது. அது ஒரு ஈடாக மாத்திரமே அளிக்கப் பட்டிருந்தது. அது சரியாக இருக்கவேண்டியதாயிருந்தது. ஆகவே ஈடாக அளிக்கப்பட்ட இப்பழக்கத்தை அவர்கள் செய் தனர். ஆகவே இப்பழக்கம் தொடர்ந்து அனுசரிக்கப்பட்டு வந்தது. 50நிஜமான வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையானது இயேசு கிறிஸ்துவுக்குள் வெளிப்பட்டது. அவர் மகத்தான சிருஷ்டிகராகிய தேவனின் குமாரனாகத் தோன்றினார். அவர் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தையென்பதை தாமே உறுதிப்படுத்தினார். வ்யூ! என்னே! அவர் தான் அவர் என்று நிரூபித்தார். அவர் தம் சொற்களால் சிருஷ்டித்தார். தேவனேயன்றி வேறு எந்த மனிதனும் சிருஷ்டிக்கமுடியாது. தேவனைத் தவிர, பூமியிலுள்ள ஒன்றும் சிருஷ்டிக்கமுடியாது. சாத்தான் ஒன்றையும் சிருஷ்டிக்கமுடியாது. ஏற்கனவே சிருஷ்டிக்கப்பட்டதை அவன் வழி தவறச் செய்வானேயன்றி (Pervert) அவனால் சிருஷ்டிக்க முடியாது. நீதி, பாதை தவறினால் அது பாவமாகிறது. நான் என்ன கருது கிறேன் என்று நீங்கள் அறிவீர்கள். பொய் என்பது என்ன? உண்மை திரித்துக் கூறப்படுதலே பொய்யாகும். பாருங்கள்? அவ்வாறே விபச்சா ரம் எனப்படுவது தேவனளித்த ஒரு சட்டப்பூர்வமானச் செயலைத் தாறு மாறாக்குவது. ஒவ்வொன்றும் பாவத்திலுள்ளது, பொய்யென்பது சத்தியம் திரித்துக் கூறப்படுதலேயாகும். சாத்தான் சிருஷ்டிக்க முடிய வில்லை. ஆனால் கிறிஸ்து வந்தபொழுது அவர் சிருஷ்டி கர்த்தர் என்பதை நிரூபித்தார். நம்முடைய பாவங்களுக்காக சிந்தப்படுமென்று வாக்களிக் கப்பட்ட அந்த இரத்தம் அவருக்குள் இருந்தது. இப்பொழுது நீங்கள் அதைப்படிக்க விரும்பினால்... ஒரு நிமிடம் திருப்புவோம். எப்படியாயினும், இன்றிரவு நாம் சிறிது நேரம் எடுத்துக்கொள்வோம். நான்... அது என்னை தளர்ச்சிக்குள்ளாக்குகிறது. ஒவ்வொருவரும் வீட் டிற்குச் செல்லவேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்று நான் நினைக் கிறேன். ஆகவே அது ஒரு... (சபையார், ''இல்லை'' என்கின்றனர் - ஆசி) நாம் இப்பொழுது அப்போஸ்தலர் 2ஐப் பார்ப்போம். உங்களுக்கு நன்றி. நாம் சற்று... 51இயேசு தேவனென்று நிரூபிக்கப்பட்டாரென்பது சரி அல்லது தவறா என்பதை அப்போஸ்தலர் 2:22ல் காணலாம். சரி. பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு இவ்விதம் பேசுகின்றான். இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், நடப்பித்து, அவை களினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார். (ஆங்கிலத்தில் 'மெய்ப்பித்துக் காட்டினார்' (approved) என் றுள்ளது- தமிழாக்கியோன்) 52''ஒரு மனிதன் மெய்ப்பித்துக் காட்டப்பட்டதினாலே, அது தேவன் உங்கள் மத்தியில் இருக்கிறார் என்பதை நிரூபித்தது. அது அவர்தான் என்பதை அவர் செய்த கிரியைகளே நிரூபித்தன. பேதுரு ஆலோசனைச் சங்கத்துக்கு முன்பாக இதைச் சொல்லுகிறான். நிக்கொதேமுவும் இதை அறிந்திருந்தான். அவன், ''ரபீ, நீர் தேவ னிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவன் தேவனிடத்திலிருந்து வராவிட்டால் நீர் செய்கிற இப்படிப் பட்ட கிரியைகளைச் செய்யமாட்டான்'' என்றான். பாருங்கள்? அவர்கள் அதை அறிந்திருந்தார்கள். ஆனால் ஏன்? இப்பொழுது கவனியுங்கள். ஏவாளுக்கு இது வாக்களிக்கப் பட்டது. ஆனால் உண்மையான வார்த்தை வந்தபொழுது, அந்த ஸ்திரீ, எபிரெய மணவாட்டி - அதை அவள் அடையாளம் காண மறுத்ததால், தேவன் அவளைத் தள்ளிவிட எத்தனித்தார். ஏனெனில், அவள் தேவனுடைய மணவாட்டியாயிருந்தாள். அது உண்மையா? அவள் தேவ னுடைய மணவாட்டியாய் இருந்தாள். 53நீங்கள் கூறலாம், 'நல்லது, அவர்கள் இன்னும் விவாகம் ஆகவில்லையே' என்று. அது உண்மை . அதைத்தான் யோசேப்பு செய்யவேண்டுமென்று எத்தனித்தான். அவர்களுக்கு விவாகம் ஆகு முன்பே, அவளைத் தள்ளிவிட எத்தனித்தான். பாருங்கள்? அவளுக்கு அவன் நிச்சயிக்கப்பட்டிருந்தான். ஆகவே அவர் வந்தபோது, அவர் வாக்குத்தத்தம் செய்த வார்த் தையானது விவாகம் செய்துகொள்வதற்கென வரும்போது, மணவாட்டி தேவனுடைய உண்மையான வாக்குத்தத்தமான வார்த்தையாகிய கிறிஸ்து என்னும் போர்வையினால் சுற்றப்படுவதற்குப் பதிலாக, ஸ்தா பன தத்துவங்களினால் சுற்றப்பட்டிருப்பதை அவர் காண்கிறார். இதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையென்று நினைக்கிறேன். அதை மறுபடியும் சொல்லுகின்றேன். நீங்கள் இதை அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பாருங்கள்? 54மீட்பர் ஒருவர் வருவாரென்று மணவாட்டியாகிய ஏவாளுக்கு வாக்களிக்கப்பட்டது. அந்த மீட்பர் வார்த்தையாயிருப்பார். அந்த வார்த்தை மாம்சமாகி வந்தபோது, அவள் அதை ஏற்க மறுத்தாள். அவளுக்கு ஈடுகள் அளிக்கப்பட்டன. இப்பொழுது, ''ஈடு'' என்பதை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். மீட்பர் வரும்வரை, அதற்குப் பதிலாக அவளுக்கு ஈடுகள் (Substitutes) அளிக்கப்பட்டன. ஆனால் மீட்பர் வந்த பிறகும், அவள் அந்த உண்மையான வார்த்தையை ஏற்றுக் கொள்ள மறுத்து, அவளுக்கு அளிக்கப்பட்டிருந்த ஈடுகளில் நிலைத் திருக்க விரும்பினாள். அதைக் காண்கிறீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி) அதுதான் எபிரெய மணவாட்டி. 55ஆகவே அவர் செய்தார். அவள் இரண்டாம் ஏவாளாகிய மண வாட்டி, அவள் ஆவிக்குரிய ஜீவனுள்ளோருக்கும் தாயானவள். பாருங்கள். ஏவாள் என்பதற்கு 'ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயான வள்'' என்பது அர்த்தம். அதாவது “ஜீவனுள்ளோர் அனைவருக்கும்...'' இப்பொழுது அவர் எபிரெய மணவாட்டியினிடத்தில், ஜீவனுள் ளோருக்கெல்லாம் தாயான அவளிடத்தில் வந்தபோது, அவள் அவ ரைப் புறக்கணித்தாள். மாம்சத்துக்குரிய ஏவாள் தேவனுடைய வார்த்தைக்கு விரோத மான சாத்தானின் விவேகத்திற்கு செவிசாய்த்து, ஏதேன் தோட்டத்தில் விழுந்துபோனாள். அவள் அவ்விதமாகத்தான் விழுந்துபோனாள். சரி, ஐயா. அவள் அதைச் செய்ததால் விழுந்துபோனாள். ஆனால் ஆவிக்குரிய ஏவாள் - கிறிஸ்துவின் மணவாட்டி சபை-ஏதேனில் விழவில்லை; ரோமாபுரியில் விழுந்தாள். நிசாயா மாநாட்டில் அவள் உண்மையான பெந்தெகொஸ்தே சபையைப் புறக் கணித்து, வார்த்தையில் நிலைநிற்பதற்கு பதிலாக ரோமாபுரியின் விவேகத்துக்குச் செவி கொடுத்தாள். அவளும் அவளைச் சூழ்ந்தவரும் ஆவிக்குரிய மரணம் எய்தினர். மாம்சப் பிரகாரமான ஏவாள் விழுந்தது போன்று, ஆவிக்குரிய ஏவாளும் விழுந்தாள். தேவனுடைய மணவாட்டி ஏதேன் தோட்டத்தில் விழுந்தாள். கிறிஸ்துவின் மணவாட்டி ரோமாபுரி யில் விழுந்தாள். பாருங்கள்? 56கவனியுங்கள், இருவரும் தேவனுடைய வார்த்தைக்கு விரோத மான சாத்தானின் விவேகத்தை ஏற்றுக்கொண்டு தங்கள் கற்பை சாத்தானுக்கு விற்றுப்போட்டனர். முத்திரைகள் உடைக்கப்பட்டபோது, அது சாத்தான் என்றும் இன்று வரையிலும் அவன்தான் என்றும் நாம் பார்த்தோம். ரோமாபுரி சாத்தானின் சிங்காசனமிருக்கிற இடம் என்று வேதம் உரைக்கிறது. ஏவாள் தன் கற்பை ஏதேன் தோட்டத்தில் சாத்தானுக்கு அளித்தாள், கிறிஸ்துவின் மணவாட்டியும் அதையே செய்து ரோமாபுரி யில் வேதத்திற்குப் பதிலாக ரோம தத்துவங்களையும் விவேகத்தையும் ஏற்றுக்கொண்டாள். அந்த உதாரணத்தை நீங்கள் கவனித்தீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). பழைய ஏற்பாட்டில் முன்னடையாளங்களை புதிய ஏற்பாட்டின் சம்பவங்களுடன் பொருத்தி நோக்கினால், நீங்கள் ஒருக்காலும் தவறு செய்யவே முடியாது. என்னுடைய கை இவ்விதம் இருக்குமானால்... நான் என்னையே பாராதிருந்து, என் நிழல் வருவதை நான் காணும் போது, காண்பதற்கு நான் எவ்விதம் இருக்கிறேன் என்பதை நான் அறிந்துகொள்வேன். பாருங்கள்? அது போன்று என்ன வரப்போகின் றது என்பதை நீங்கள் அறியவேண்டுமானால், என்ன நிகழ்ந்தது என் பதை நீங்கள் முதலில் கவனியுங்கள். முன்பு நடந்த யாவும் இனி நடக்கப்போவதற்கு நிழலாயிருப்பதாக வேதம் கூறுகிறது. சரி. 57கிறிஸ்துவின் மணவாட்டி வேதத்தை விற்றுப்போட்டதால், கற்புள்ள தேவனுடைய வார்த்தையை இழந்து, எல்லாவற்றையும் மாற்றி அமைப்பதற்கு சபைக்கு அதிகாரமுண்டு என்று சொல்லும் ஒரு மனி தனை ஏற்படுத்தினாள். அவர்கள் அதைச் செய்துவிட்டனர். ஏவாள் தன் கற்பை சாத்தானுக்கு ஏதேன் தோட்டத்தில் விற்றுப் போட்டது போன்று, கிறிஸ்துவின் மணவாட்டி- பெந்தெகொஸ்தே மணவாட்டி- அவள் கற்பை நிசாயாவில் விற்றுப்போட்டாள் சரியாக. சரி. ஏவாளுக்கு தேவன் வாக்குத்தத்தம் செய்திருந்ததுபோல, இந்த சபையும் அதையே செய்யும் என்பதை அறிந்தவராய், பெந்தெகொஸ்தே சபைக்கும் அவர் வாக்களித்துள்ளார்... அவள், பெந்தெகொஸ்தே சபையானவள் மனைவியாவதற்கு முன்பு தன் பிறப்புரிமையை விற்றுப்போட்டாள் என்பதை நீங்கள் விசு வாசிக்கிறீர்களா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) ஆம், அவள் அதை நிச்சயமாகவே செய்தாள். வேதத்தை ஆதாரமாகக் கொண் டிராத பிரமாணங்களினால் (Creed) என்ன பயன்? அப்போஸ்தலரு டைய விசுவாசப் பிரமாணம் என்னப்படுவதில் ஒரு வார்த்தையாவது வேதத்தில் காணப்படுகின்றதா என்பதை நீங்கள் கண்டறிய விரும்பு கிறேன். அது கத்தோலிக்க பிரமாணம், அப்போஸ்தலருடைய பிரமா ணம் அல்ல. 58அப். 2:38ஐப் படியுங்கள். அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38-தான் உண்மையான அப்போஸ்தலருடைய பிரமாணம். ஆம். பாருங்கள்? அதைத்தான் அவர்கள் எப்பொழுதும் உபயோகித்தனர். ஆகவே, உங்களால்... பாருங்கள்? ஆகவே, அவர்கள் தங்கள் பிறப்புரிமையை விற்றுப்போட்டனர். அவர்கள் மாத்திரமல்ல. மெதோடிஸ்டுகளும், பாப்டிஸ்டுகளும், பிரெஸ் பிடேரியன்களும், பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தாரும், ஏனையோரும் அவ்வாறே செய்தனர். அவள் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டாள்-ரோமாபுரிதான் அவளை ஸ்தாபனம் உண்டாக்கச் செய்தது. அவள் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கி, ஒரு மனிதனை அதன் தலை வனாக ஏற்படுத்தினாள். மெதோடிஸ்டுகளும், பாப்டிஸ்டுகளும், பெந்தெ கொஸ்தே ஸ்தாபனத்தாரும் அதையே செய்தனர்-ஒரு குழுவை ஸ்தாப னத்தின் தலைவராக ஏற்படுத்திக்கொண்டனர். தேவன் கூறியது எதுவா யிருப்பினும், அவர்கள் கூறுவதை மாத்திரமே ஒருவன் செய்யவேண் டும். 59நல்லது, அது என்ன? அது ஆவிக்குரிய வேசித்தனமேயன்றி வேறல்ல-தவறான ஸ்திரீ, அவள் மனிதனால் உண்டாக்கப்பட்ட பொய் யான பிரமாணங்களை நுழைத்தாள். ஆம், ஐயா. அவள் அதைச் செய்த போது, அப்பொழுது அவள்... இப்பொழுது, நான் இதை நிரூபிப்பேன். அதன் மூலம் தேவனுடைய பார்வையில் அவள் வேசியாகக் கருதப்பட் டாள். வேதம் அவ்விதம் அவளை அழைக்கிறதென்று நீங்கள் நம்பு கிறீர்களா? ஆம், ஐயா, அவள் குமாரத்திகளும் அதையே செய்துள்ளனர். இப்பொழுது வெளிப்படுத்தல் 17-ம் அதிகாரத்தில் (வேண்டுமா னால் குறித்துக் கொள்ளுங்கள்) யோவான் ஆவிக்குள்ளாகி, ''ஒரு வேசி உட்கார்ந்திருப்பதைக் காண்கிறான்.'' கடந்த இரவு அதைப் படித்தோம். அங்கே ஏழு மலைகள் இருந்தன. அவள் உலகத்துக்கு தன் அசுத்த முள்ள வேசித்தனத்தைக் கொடுத்தாள். அவள் சரியாக அதையே செய்தாள். அது சரியா? 'பூமியின் ராஜாக்கள் அவளுடன் வேசித்தனம் பண்ணினார்கள்.'' ஏமாற்றுதல், திருடுதல், பொய் சொல்லுதல், ஆத்துமா இரட்சிக்கப்பட காசு வசூலித்தல் போன்றவைகள் அவர்களுடைய செய் கைகளாயிருக்கின்றன. 60நல்லது .இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். அந்த வேசிக்கு குமாரத்திகள் இருந்தனர். நல்லது. அவள் ஸ்தாபன முறைமைகளை உண்டாக்கிக்கொண்டாள். அதனால் அவள் ஒரு சரீரமானாள். அது (ஸ்தாபன முறைமைகள்) முற்றிலும் தவறாகும். ஏவாள் தேவனுக்குக் கீழ்ப்படியாமல், அவளுக்குப் பின் வந்த எல்லாரையும் மரணத்தினுள் ஆழ்த்தியது போன்று, ஸ்தாபனமுண்டாக்கிக்கொண்ட ஒவ்வொரு சபை யும் அவளைச் சேர்ந்தவர்களை மரணத்தில் ஆழ்த்துகின்றது. சரியாக. எல்லாம் போய்விட்டது. நான் கூறுவது வேத பூர்வமானது. வெளிப் படுத்தல் 17-ம் அதிகாரத்தைப் படியுங்கள். “அது அவளும் அவளு டைய குமாரத்திகளும் நெருப்பினால் சுட்டெரிக்கப்படுவார்களென்று” வேதம் கூறுகிறது. சரி அப்படியானால், ஒவ்வொரு ஸ்தாபனமும் அந்த வேசியுடன்கூட அக்கினியால் சுட்டெரிக்கப்படும். வேதம் அவ்வாறு கூறுகிறது. ஆகையால் அது நிச்சயம் சம்பவிக்கும். 61இப்பொழுது, அது கடினமானதாக ஒலிக்கலாம்; நீங்கள் அதிலி ருந்து கேட்பீர்கள், நானும் அதைக் கேட்க விரும்புகிறேன். இருந் தாலும், அது உண்மையாகும். வேதம் அவ்விதம் கூறுகின்றது. ஆகவே அதை அது உண்மையாக்குகிறது. அவள் ஒரு “வேசியாயிருக்கிறாள்.'' நீங்கள் அதை வெளி. 17-ம் அதிகாரத்தில் படிக்கலாம். அவள் என்ன செய்தாள்? அவள் தன் சொந்த கணவனுக்கு விரோதமாக வேசித்தனம் செய்தாள். நீங்கள், ”நல்லது, இல்லை, அது வேதாகமம்'' என்று சொல்கிறீர்கள். வார்த்தை தேவனா யிருக்கிறது. அதிலிருந்து ஒன்றைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது. உங்கள் மனைவி வேறொருவனை முத்தம் செய்ய நீங்கள் விரும்பு வீர்களா? இல்லவே இல்லை. அவள் அப்படிச் செய்தால், அவளுடைய உண்மையற்ற தன்மையை நிரூபிக்கிறாள். அதை நீங்கள் விரும்பா விடில், சபையானது ஒரு வார்த்தையைக் கூட்டுவதையும் குறைப்ப தையும் நீங்கள் விரும்பக்கூடாது. “ஒருவன் அதிலிருந்து ஒரு வார்த்தையைக் குறைத்தால் அல்லது கூட்டினால்.....' (வெளி. 22:18, 19). அல்லேலூயா! (சகோ. பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை நான்கு முறை தட்டுகிறார்-ஆசி). கிறிஸ்து தம் மனைவி வார்த்தையில் சுத்தமானவளாய் நிலைத்திருக்க விரும்புகிறார். அவள் அப்படித்தான் இருக்கவேண்டும். 62ஏனெனில் நியாயப் பிரமாணமாகிய புத்தகத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும் அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது. “வானமும் பூமியும் ஒழிந்துபோகும். என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை” என்று இயேசு கூறியுள்ளார். தேவனுடைய வார்த்தைக்கு உங்கள் சொந்த விளக்கத்தைக் கொடுக்கவேண்டாம். சுத்தமான - கலப்படமில்லாத ஒருவர் அவருக் குத் தேவை - வேறொருவனுடன் சரசம் செய்யும் ஒருவர் அல்ல. என் மனைவி வேறொருவனுடன் சரசம் செய்வதை நான் விரும்பமாட்டேன். தேவனுடைய வார்த்தைக்கு அப்பாற்பட்ட விவேகத்திற்கு நீங்கள் செவி சாய்த்தால், சாத்தானுடன் நீங்கள் சரசம் செய்கின்றீர்கள் என்று அர்த்தமாகிறது. ஆமென்! உங்களுக்கு அது பக்தி பரவசமூட்டுகின்றதல்லவா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி) நீங்கள் கலப்படமற்றவ ராய் இருக்க தேவன் விரும்புகிறார். தேவனுடைய வார்த்தையில் நிலை நில்லுங்கள். அதனுடன் நிலை நில்லுங்கள். சரி. தேவன் ஏதேனில் ஏவாளுக்கு வாக்குத்தத்தம் செய்தது போல இந்த ஏவாளுக்கும் செய்தார். இந்த பெந்தெகொஸ்தே சபையேதான் முதல் சபையாகும். அவர்கள் அங்கு சென்றவரையிலும் அதுவே ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயாக இருந்தது. ஆனால், அவர்கள் அவள் பாவங்களுக்கு உடன்பட்டபோது, அவளுடன் மரிக்கின்றனர். நீங்கள் பாருங்கள். 63இங்கே ஒருவன் வந்து, ''நான் தேவனை சேவிக்க விரும்புகிறேன்'' என்கிறன். அவர்கள், ''நல்லது, நீ செய்ய வேண்டியது இதுதான். நீ மனந்திரும்பு“ என்கின்றனர். “சரி, நான் அதைச் செய்வேன். தேவனுக்கே மகிமை உண்டா வதாக.'' அவன் சென்று மனந்திரும்புகிறான். “இப்பொழுது, நீ எங்களிடம் வந்து சேர்ந்துகொள்,'' என்கின் றனர். அவர்கள் அவ்விதமாகவே இருக்கின்றனர். ஊம்... பாருங்கள்? ஸ்தாபனத்தைச் சேர்ந்த மாத்திரத்தில் அவன் ஆவிக்குரிய மரணம் அடைகிறான். அது உண்மை . பாருங்கள்? பாருங்கள்? அது... நான் இவ்வாறு கூறவில்லை. வேத புத்தகம் அவ்வாறே போதிக்கின்றது. இது இங்கே இவ்விதம் கூறுகின்றது. சரி. இப்பொழுது தேவன் ஏவாளுக்கு வாக்குத்தத்தம் செய்தது போன்று சபைக்கும் வாக்குத்தத்தம் செய்திருந்தார். அவளிடம் வார்த்தை திரும்பவும் வருமென்று தேவன் ஏவாளிடம் கூறியிருந்தார். நீங்கள் ஞாபகங்கொள்கிறீர்களா? அவள் எதை இழந்தாளோ அதையே அவள் திரும்பவும் பெற்று பழைய நிலைமையை அடையவேண்டும். அவ் வாறு செய்யக் கூடியது ஒன்றே ஒன்று மாத்திரமே. அதுதான் தேவனு டைய வார்த்தை . சரியாக 64நான் உங்களுக்கு முன்னே கூறியது போன்று, துப்பாக்கியைச் சுடும்போது குறி தவறினால், அதன் காரணம் என்னவென்று கண்டு பிடித்து, முன்பிருந்த நிலைமைக்குத் துப்பாக்கியைக் கொண்டுவந்து மறுபடியும் சுடவேண்டும். பாருங்கள்? அவ்வாறு முன்பிருந்த நிலைமை என்னவென்று ஆலோசனை செய் தால், நீங்கள் நிசாயாவை (Nicaea) அடைவீர்கள். அங்கிருந்து நீங்கள் மறுபடியும் தொடங்கி, ஸ்தாபனங்களை விட்டு அகன்றால்... எல்லா சபைகளையும் விட்டு அகன்றால்... இவைகளை நாம் இப்பொழுது முத்திரை களைக் குறித்து சிந்திக்கும்போது முழுமையாய் பார்த்துக்கொண்டு வரு கிறோம். ஸ்தாபனங்கள் கொண்டுள்ள முறைமைகளுக்கு நான் எதிரியா யிருப்பதன் காரணமென்னவென்று என் வாழ்நாள் முழுவதும் நான் வியந்ததுண்டு. ஸ்தாபனத்திலுள்ள மக்களுக்கு நான் விரோதியல்ல, ஏனெனில் அவர்கள் நம்மைப் போன்று மனிதர்கள்தாம். ஆனால் ஸ்தா பனங்கள் கையாளும் முறைமைகளை நான் எதிர்க்கிறேன். முத்திரை களின் இரகசியம் இப்பொழுது வெளிப்படுவதனால் அதன் காரண மென்னவென்பது நன்கு புரிகின்றது. இதுவரையிலும் நான் அதை ஒருபோதும் அறிந்ததில்லை. அது சரி. 65மாம்சப் பிரகாரமான ஏவாளுக்கு தேவன் வாக்களித்தது போன்று, ஆவிக்குரிய ஏவாளுக்கும் கடைசி காலத்தில் தேவனுடைய வார்த்தை அவளுக்குத் திரும்பவும் அளிக்கப்படுமென்ற உறுதியை அவர் அளித்தார். அவர் சபையை மூல வார்த்தைக்கு அப்பொழுது திருப்புவார். இப்பொழுது நன்றாகக் கவனியுங்கள். இதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளவேண்டுமென்று நான் விரும்புகிறேன். தேவனுடைய வார்த்தையானது ஏவாளின் வித்தின் மூலம் திரும்பவும் அளிக்கப்படு மென்னும் உறுதியை தேவன் ஏவாளுக்கு அளித்திருந்தார். அவ்வமயம் தேவனுடைய இந்த வார்த்தையே அவள் வித்தாகத் தோன்றும். ஆனால் அதற்குப் பதிலாக கொடுக்கப்பட்டிருந்த ஈடுகளை (Substitutes) அவள் இறுகப் பற்றி, தேவனுடைய வார்த்தை அவளிடத்தில் வந்தபோது அதை நிராகரித்தாள். ஏனெனில் வார்த்தை மிகவும் தாழ்மையுள்ள விதத்தில் தோன்றியது. அது அவளுக்கு உண்மையானதாய்த் தோன்ற வில்லை. அது பகட்டாய்க் காணப்படவில்லை. “ஒரு மாட்டுத் தொழுவமா? ஓ, என்னே! அதில் பிறந்தவனையா ஏற்றுக்கொள்வது? பள்ளிக்கூடத் தில் அவர் ஒருநாள்கூட படிக்கவில்லையே? அவரை எப்படி நான் ஏற் றுக்கொள்ள முடியும்? அவர் மேசியா அல்ல. ஜனங்களால் உதறித் தள்ளப்படும் ஒரு மனிதன் எவ்வாறு மேசியாவாக இருக்கமுடியும்? ஒரு கந்தைத் துணியை அவர் முகத்திலே போர்த்தி அவர் தலையில் குட்டினார்களே? அப்படிப்பட்டவர் ஒரு உண்மையான தீர்க்கதரிசி எழும்பி யிருக்கிறார் என்று தம்மையே தீர்க்கதரிசி அழைத்துக்கொண்டாரே'' என் றெல்லாம் அவர்கள் சிந்தனை செய்தனர். 66உண்மையாகவே, அவர்கள் தீர்க்கதரிசிகளை அறியாதவராயிருந்தனர். இயேசுவும் 'தீர்க்கதரிசிகளை நீங்கள் அறிவீர்களானால் என் னையும் அறிவீர்கள்'' என்றார். அது உண்மை . இப்பொழுது கவனியுங்கள். எபிரெய மணவாட்டியினிடம் தேவ னுடைய வார்த்தை தோன்றினபோது, அது எவ்வகையில் தோன்று மென்று தேவன் கூறியிருந்தாரோ, முற்றிலும் அவ்வாறே அது தோன்றியது. ஆனால் அவளோ அதை வேறு விதமாகக் கற்பனை செய்திருந்தாள். நான் யூத மணவாட்டி - எபிரெய மணவாட்டியைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன். அவள் ஆரம்பத்திலேயே ஏவாள் ஆகும். ஆனால் அது அவளிடத்தில் வந்தபோது அவள் அதை நிராகரித்து அதற்குப் பதிலாக அளிக்கப்பட்டிருந்த ஈடுகளில் நிலைகொண்டிருக்க விரும்பினாள். இப்பொழுது, தேவன் ஆவிக்குரிய ஏவாளுக்குப் பெந்தெ கொஸ்தே ஆவியைத் தருவதாக வாக்கருளியிருந்தார். ஆனால் அவள் விழுந்து போவாளென்றும், அப்பொழுது அவள் என்னென்ன கிரியைகள் செய்வாளென்றும், அவள் விழுவதற்கு 400 வருடங்களுக்கு முன்னமே அவர் முன்னறிவித்திருந்தார். ஆனால் கடைசி நாட்களில் வார்த்தை யைத் திரும்பவும் அனுப்புவதாக அவர் வாக்களித்துள்ளார். 67இயேசுவும் பூமியிலிருந்தபோது அதையே கூறினார். அவர் அதை மறுபடியும் அளிப்பதாகச் சொல்லியிருந்தார். ஆனால் அது வரும்போது என்ன காணப்படுகிறது? ஆதியிலே அது வந்தபோது எதைக் கண்டதோ, அதையே அது காணும். சரி. அவர்கள் பெற்றுள்ளது. அவர்கள் அதன் ஈடுகளாகிய ஸ்தாபனங்களையும் அவைகள் உண்டாக்கின பிரமாணங்களையும் விரும்பி ஏற்றுக்கொண்டு, தங்கள் விருப்பப்படி வாழத் தலைப்படுவார்கள். அவர்கள், ''நல்லது, நான் இன்னார் - இன்னார் ஆவேன், நான் இன்னார் - இன்னாரைச் சேர்ந்தவன் என்று அழைத்து, தங்களைப் பற்றி பெருமிதம் கொள்வார்கள். தேவன் அவர்கள் மத்தியில் மரித்தோரை உயிரோடெழுப்பினாலும், இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினாலும், அவர் திரும்ப வார்த்தையை சபைக்கு அளிக்கும் போது என்னென்ன செய்வாரென்று வேதத்தில் கூறப்பட்டுள்ள யாவை யும் அவர் செய்தாலும், அவையெல்லாம் அவர்களுக்கு ஒன்றுமில்லை. ''அது என்னுடைய ஸ்தாபனத்துடன் சம்பந்தப்படாதவரை அதற்கும் எனக்கும் எவ்வித தொடர்புமில்லை'' என்று அவர்கள் கூறுகின்றனர். பாருங்கள்? அவர்கள், எபிரெய மணவாட்டியும் அதையே செய்தாள். சரி, பாருங்கள். அவர்கள் தங்களுடைய ஈடுகளுக்கு செவிகொடுத்தார்கள். தேவன் அவர்களுக்கு உண்மையானதை வாக்களித்தார். அந்த உண்மை யானது வந்தபோதோ, அதை அவர்கள் விரும்பவில்லை. ஏனெனில், அது மிகவும் தாழ்மையுள்ளதாயிருந்தது. இப்பொழுது அது காட்சியில் எழும்புகிறபொழுது, இந்நாளில் அதே காரியம்தான் உள்ளது. இப்பொழுது கடைசி காலத்தில் தேவன் ஒரு செய்தியை அனுப்பி ஜனங்களின் இருதயத்தை திருப்புவாரென்று மல்கியா 4-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. யோவேலும், 'பூச்சிகள் பட்சித்த வருஷங்களின் விளைவைத் திரும்பவும் அளிப்பதாக தேவன் வாக்குத்தத்தம் செய்துள்ளதாகக் குறிப்பிடுகிறான். மூல பெந்தெ கொஸ்தே கிளையிலிருந்து ரோமபுரி தின்று மீதிவிட்டதை மெதோடிஸ் டுகள், பாப்டிஸ்டுகள் இவர்கள் தின்றனர். ''கடைசி நாட்களில் அவை யாவையும் திரும்ப அளிப்பதாக தேவன் உறுதியளித்துள்ளார்.'' அது உண்மை . 68அவர் அவ்விதமான நபரை நமக்கு அனுப்பக்கூடும். தேவனு டைய வார்த்தை எப்பொழுதும் தீர்க்கதரிசியினிடத்தில் தான் வரும்சீர்திருத்தக்காரரிடமல்ல; தீர்க்கதரிசிகளிடத்தில் அது வருவதற்கு அப் பொழுது தருணமாகவில்லை. ஆனால் இப்பொழுது அந்தத் தருணம் வந்துவிட்டது. எனவே, அது வருவதை நாம் எதிர்பார்த்துக்கொண்டி ருக்கிறோம். ஆனால் அது மிகவும் தாழ்மையாகவும், சாதுவானதாகவும் இருக்கும்... ஓ, என்னே ! அதை மேம்பட்ட மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பி டேரியன்கள், பெந்தெகொஸ்தேகாரர் இதை ஏற்றுக்கொள்வார்களென்று நினைக்கிறீர்களா? ''ஓ 'பெந்தெகொஸ்தரை நீங்கள் ஏன் சொல்லுகிறீர்கள்?'' என்று நீங்கள் கேட்கலாம். பெந்தெகொஸ்தேயினர் தாம் லவோதிக்கேயா சபை - தாங்கள் ஐசுவரியவான்களென்றும் அவர்களுக்கு ஒரு குறைவுமில்லையெனவும் எண்ணுகின்றனர். ஆனால் 'நீங்கள் தரித்திரராயிருப்பதை அறியாமலிருக்கிறீர்கள்' என்று வேதம் அவர்களிடம் கூறுகின்றது. கோடிக்கணக்கான டாலர்கள் செலவழித்து நீங்கள் பிரம்மாண்டமான கட்டிடங்களைக் கட்டிக் கொள்ளலாம். ஆனால் ஆவிக்குரிய விதத்தில் நீங்கள் இன்னும் தரித்திரரே. நாங்கள் எல்லாவற்றையும் காண்கிறோம்' என்கின்றனர். “இல்லை நீங்கள் குருடர்.'' 'தேவனுக்கு ஸ்தோத்திரம், நாங்கள் ஆடையுடுத்தியுள்ளோம்' என்கின்றனர். “இல்லை, நீங்கள் நிர்வாணிகள்.'' 'எங்களுக்கு வேதப் பள்ளிகள் உண்டு' என்கின்றனர். 69''நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.'' அவர்கள் எண்ணியிருப்பதற்கு மாறாக அவர்கள் நிலைமையுள்ளதைக் கவனியுங்கள். லவோதிக்கேயா சபை இத்தகைய நிலையில் காணப்படும் என்று வேதம் கூறுகின்றது. இது கடைசி காலமென்பது எவரும் மறுக்கமுடியாத உண்மை யாகும். ஏனெனில் லவோதிக்கேயா சபையின் காலம்தான் ஏழாம் சபை யின் காலம். நாம் அக்காலத்தில் வாழ்கிறோம். இரண்டாயிரம் வருடங் களானது அதை முடிவடையச் செய்கின்றது. சபையின் காலங்கள் முடி வடையும். இனி வேறு சபையின் காலங்கள் உண்டாவதில்லை. ஆகவே தான் பின்மாரி பெற்றுள்ள சகோதரராகிய நீங்கள் வேறு ஸ்தாபனத் தைத் தொடங்க முடியாது. ஏனெனில் வேறொரு சபையின் காலம் இருக்கப்போவதில்லை. அது உண்மை . நாம் அவை முடிவடையும் தரு ணத்தில் இருக்கிறோம். ஆமென்! வேறு சபைக் காலங்கள் கிடையாது. எல்லாம் முடிந்து விட்டது. பெந்தெகொஸ்தே சபையினர் அளித்த செய்திதான் கடைசி செய் தியாயிருக்குமானால்... நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரி சுத்த ஆவியின் அபிஷேகம் என்னும் கடைசி மூன்று சபை காலங்களில் அளிக்கப்பட்டுள்ள மூன்று செய்திகள், மறுபிறப்பை முற்றுப் பெறச் செய்கின்றன. ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் முன்பு, முதலில் வெளி வருவது தண்ணீ ர்; அடுத்தப்படியாக இரத்தம், முடிவில் ஜீவன். இயேசுவை அவர்கள் சிலுவையில் கொன்றபோது, மறுபிறப்பை முற்றுப்பெறச் செய்ய அவர் விலாவிலிருந்து தண்ணீரும், இரத்தமும், ஆவியும் வெளிவந்தன. 'பிதாவே, உம்முடைய கரங்களில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்' என்று இயேசு கூறினார். அவருடைய சரீரத்திலிருந்து வெளி வந்தது என்ன? தண்ணீர், இரத்தம், ஆவி. 70“பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை (அது கிறிஸ்துவாகும்) பரிசுத்தாவி ஆகும். இம்மூவரும் ஒருமைப்பட் டிருக்கிறார்கள், ஒன்றாயிருப்பதல்ல. ஆனால் ஒருமைப்பட்டிருக்கிறார்கள். ... சாட்சியிடுகிறவைகள் மூன்று... அல்ல ''அவர்கள் மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் என்பதை, நான் அங்கு தவறாகக் கருதிவிட்டேன். (பூலோ கத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஜலம், இரத்தம், ஆவி என்ப வைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.' 1 யோவான் 5:7 இதை உரைக்கிறது. நீங்கள் பரிசுத்தமாக்கப்படாமல் நீதிமானாக்கப்பட முடியும், (Justified). நீங்கள் நீதிமானாக்கப்படாமல் பரிசுத்தமாக முடியும் (Sanctified). பரிசுத்த ஆவியைப் பெறாமலும் நீங்கள் பரிசுத்தமாக முடியும். அது சரியாகும். யோவான் 17:17ல், - சீஷர்கள் பரிசுத்தமாக்கப்பட்டு, பிசாசு களைத் துரத்துவதற்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் அப்பொழுது பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவில்லை. பாருங்கள்? நிச்சயமாக. அவர்கள் பெந்தெகொஸ்தே வரை சென்று பரிசுத்த ஆவிக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. அங்கு தான் யூதாஸும் தன் உண்மை சொரூபத்தைக் காண்பித் தான். அந்த ஆவி நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல் என் பவைகளின் மூலம் எவ்விதம் கிரியை செய்தது என்று பாருங்கள். ஆனால் அது முடிவில் வந்தபோது யூதாஸின் உண்மை சுபாவம் வெளிய ரங்கமானது (அவன் பெந்தெகொஸ்தே நாள் வரை வரவில்லை). பாருங்கள்? அது உண்மை . நாம் இப்பொழுது கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக் கிறோம் என்பதை இப்பொழுது கவனியுங்கள். மாம்சப்பிரகாரமான ஏவாளுக்கு, எபிரெய ஏவாளுக்கு எவ்விதம் வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டதோ... வார்த்தையானது திரும்ப வரும் என்று எபிரெய மணவாட் டிக்கும் வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டது. ஆவிக்குரிய மணவாட்டி நிசாயாவில் விழுந்தபோது கடைசி நாட்களில் அவளிடம் வார்த்தை திரும்பவும் வரும் என்பதாக வாக்களிக்கப்பட்டது. இப்பொழுது நீங்கள் கூறுவது, அப்பொழுது.... 71நீங்கள் வேறொரு வசனம் விரும்பினால்... “ஏழாம் தூதனுடைய (ஏழாம் செய்தியாளன்) சத்தத்தின் மணி நேரத்தில், நேரத்தில், அவன் எக்காளம் ஊதப் போகிறபோது தேவரகசியம் நிறைவேறும்'' என்று வெளிப்படுத்தல் 10-ம் அதிகாரம் உரைக்கிறது. பாருங்கள்? மறுபடியும் வார்த்தைக்கு திருப்புதல்! இந்தக் கடைசி நாட்களின் செய்தியாளன். ”அவர்களைப் பிதாக்களின் விசுவாசத்திற்கு, மூல விசுவாசத்திற்குத் திருப்புவான்'' என்று வேதம் கூறுகின்றது. ஆனால் ஸ்தாபனங்கள் அதை ஏற்றுக்கொள்ளுமென்று நினைக்கிறீர்களா? இல்லை, ஐயா, மல்கியா 4-ம் அதிகாரத்தில் கூறியுள்ளவாறு, “அவன் மூல வார்த்தை யைத் திரும்பவும் அளிப்பான்.'' ஏவாள், ஏதேன் தோட்டத்தில் வார்த்தையைப் புறக்கணித்தாள். யூத மணவாட்டி கல்வாரியில் அதைப் புறக்கணித்தாள். நிசாயா குழு வினர் வார்த்தையை இந்தக் கடைசி நாட்களில் நிராகரிக்கின்றனர். என்ன? அதே விதத்தில் வார்த்தை மாம்சமாக வெளிப்பட்டபோது, ஏவாள், எபிரெய சபை ஆவிக்குரிய ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயான அவள் கைக்கொண்டிருந்த பாரம்பரியங்களிலும், கொள்கைகளிலும் லயித்துப் போய், வார்த்தையை நிராகரித்தாள், அதைத் தவறவிட்டாள். இப்பொழுதும் அதுவே சரியாக சம்பவிக்கிறது. அது சரி. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையாம் மாம்சத்தில் வெளிப்பட்ட ஜீவிக்கிற வார்த்தையாகிய அவரை, அவர்கள் காணத் தவறுகின்றனர். இவைகளைச் செய்யும்படியாக வார்த்தையானது வாக்குத் தத்தம் செய்துள்ளது. கடைசி நாட்களில் இது இவ்வாறு இருக்கும் என்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது. “சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வருகையிலும் நடக்கும்.'' சோதோமில் அப்பொழுது என்ன நிகழ்ந்தது என்பதை இப்பொழுது கவனியுங்கள். ”நோவாவின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வரும் நாட்களில் நடக்கும்.'' பாருங்கள்? அப்பொழுது என்ன சம்பவித்தது என்பதைக் கவனியுங்கள். பாருங்கள்? இப்பொழுது, அது அவ்விதமா கவே இருக்கும் என்று அவர் கூறினார். நாம் அக்காலத்தில்தான் வாழ்கிறோம். அவ்விதம் நிகழுமென்று வேதத்தில் கூறப்பட்டுள்ள அறுநூறு வாக்குத்தத்தங்களை நான் உங்களுக்கு எடுத்துக் காண்பிக்க முடியும்.... பாருங்கள்? ஆனால் அவர்கள் அதை நிராகரித்தனர். 72அவள் தன் பாரம்பரியங்களின் ஈடுகளில் நிலை கொண்டிருந் தாள். இயேசுவாகிய வார்த்தை தோன்றியபோது, உண்மையான அவரு டைய இரத்தத்தை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அதற்கு ஈடாகக் கொடுக்கப்பட்டிருந்த மிருகங்களின் இரத்தத்தில் அவள் திருப்தி கொண் டிருந்தாள். எனவே வார்த்தையாகிய இயேசு மாம்சத்தில் வெளிப்பட்ட எபிரெய மணவாட்டியைப் பார்த்து, 'நீங்கள் உங்கள் பாரம்பரியங் களில் நிலைகொண்டுள்ளதால், தேவனுடைய வார்த்தையை அவமாக்கு கிறீர்கள்' என்றார். பாரம்பரியம் நற்பயனளிக்க முடியாது. இப்பொழுது, இன்றைக்கு அதுதான் காரணமாகும், அதாவது, நாம் பெற்றிருப்பதாக எண்ணப்படும் எழுப்புதல்கள் யாவும் ஸ்தாபன எழுப்புதல்கள் ஆகும். ஆனால் உண்மையில் அவை இருதய உணர்ச்சி களை எழுப்புவதாக அமைந்திருக்கவில்லை. இல்லை, இல்லை, இல்லை, இல்லை ஐயா. நம்மிடையே எழுப்புதல்கள் உண்டாவதாகக் கருதவேண் டாம். அது நம்மிடம் இல்லை. ஓ, ஸ்தாபனங்களில் அவர்களுக்குக் கோடிக்கணக்கான அங்கத்தினர்கள் உண்டு. ஆனால் உண்மையான எழுப்புதல் எங்கேயும் காணப்படுவதில்லை. இல்லை. இல்லை. 73மணவாட்டிக்கும் உண்மையாக எழுப்புதல் இன்னும் நிகழ வில்லை. பாருங்கள்? அவளுடைய உணர்ச்சியைத் தூண்டுவதற்குத் தேவனுடைய தோற்றம் இன்னும் வரவில்லை. பாருங்கள்? இதை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை இரகசியமாயுள்ள அந்த ஏழு இடிகள் தான் அவளை மறுபடியுமாக எழுப்பும். பாருங்கள், ஆம். அவர் அதை அனுப்புவார். அவர் அதை அனுப்புவதாக வாக்களித்துள்ளார். இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது - அவள் மரித்துவிட்டாள். இன்றைய ஸ்தாபனங்கள் தங்கள் பிரமாணங்களையும் கொள்கைகளையும் மறந்து, வேதத்தை எடுத்துக்கொண்டு, அதில் அளிக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தத்தை ஆதாரமாகக் கொண்டு தேவனிடம் மன்றாடினால், அப்பொழுது அந்த வார்த்தை சக்தி வாய்ந்ததாக இருக்கும். இயேசு, “உங்கள் பாரம்பரியத்தினால் நீங்கள் தேவனுடைய வார்த்தையை அவமாக்குகிறீர்கள்'' என்றார். இன்றைக்கும் அதுவே சம்பவிக்கிறது. ஆவிக்குரிய ஏவாளாகிய, ஆவிக்குரிய மணவாட்டி என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இன்றைய ஸ்தாபனங்கள் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவைகள் உண்டாக்கிக்கொண்ட கோட்பாடுகளை ஏற்றிருக்கின்றன. தேவனுடைய வார்த்தையினுள் ஸ்தாபனங்களின் பிரமாணங்களை அவள் புகுத்த முனைவதால், தேவனுடைய வார்த்தை சக்தியற்றுப் போகின்றது. நமது இன்றைய தேவை என்னவென்றால்... 74'வருகையின் தூதன்' (Herald of His Coming) என்னும் பத்தி ரிகையின் தலைப்பில், 'ஒரு தீர்க்கதரிசி திரும்பவும் வருவது அவசியம்' என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் அந்த தீர்க்கதரிசி உண்மை யாக வரும்போது, அவர்கள் அதைக் குறித்து ஒன்றுமே அறியாமற் போவார்கள் என்று நினைக்கிறேன். அது உண்மை. ஒவ்வொரு காலத்திலும் அவ்விதமாகவே சம்பவித்து வருகிறது. “கர்த்தருடைய வார்த்தையைத் தைரியமாக நமக்குக் கொண்டு வரும் ஒரு தீர்க்கதரிசி நம் மிடையே தோன்றுவது அவசியம்; வேதம் அவ்வாறு வாக்களித் துள்ளது'' என்றெல்லாம் நாம் பேசலாம். இப்பொழுது, அப்பத்திரிகையின் பதிப்பாசிரியராகிய சகோ. மூர் (Bro. Moore) என்பவரை நான் அறிவேன். அவர் வீட்டில் நான் உண வருந்தி இருக்கிறேன். அவர் மிகவும் சிறந்தவர். ஆனால் பாருங்கள். நாம் அதைப் பெற்றவராயிருக்கவேண்டும் என்பதை அவர் அறிவார். சகோதரி மூரும் மிகவும் நல்லவர்கள். அவர்கள் எல்லாவற்றையும் ஊழியத்திற்கென்று தியாகம் செய்துள்ளனர். வருகையின் தூதன்' இன்று காணப்படும் மிகச் சிறந்த பத்திரி கைகளில் ஒன்றாகும் என்பதே என் கருத்தாகும். ஆனால் அவர்கள் 'நமக்கு ஒரு தீர்க்கதரிசி அவசியம்' 'நமக்கு ஒரு தீர்க்கதரிசி அவசியம்' என்று முழங்கிக் கொண்டிருக்கின்றனர். பாருங்கள்? என்னே! அவர்கள் அதைக் குறித்துதான் பேசுகின்றனர். 75வானொலியில் பாப்டிஸ்ட் சபைகள், நாம் கத்தோலிக்க சபை யுடன் சேர வேண்டிய அவசியமில்லையென்றும், ஆனால் அவர்களுடன் ஒரு வித ஐக்கியங்கொள்ளுதல் அவசியமென்றும் நேற்றும், இன்றும் பிரசங்கங்கள் நிகழ்த்தின. பாருங்கள்? ஆனால் அதே நேரத்தில் அந்த விஷத்தினின்று நாம் விலக வேண்டுமென்ற செய்தி இவ்விடமிருந்து செல்கின்றது. பாருங்கள்? பாருங்கள்?. “இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ?'' ஒளியும் இருளும் ஒன்றாக ஐக்கியங்கொள்ள முடியாது. ஒளி உட்பிரவேசிக்கும்போது, இருள் தானாகவே அகன்று விடும். பாருங்கள்? அதனால் முடியாது. மிகுந்த வல்லமையுள்ளது. இருளினால் ஒளியை அணைக்க முடியாது. ஆனால் ஒளியினால் இருளை அணைக்க முடியும். அது உண்மை . தேவன் ஒளியாயிருக்கிறார். அவரே வார்த்தை . பாருங்கள்? இப்பொழுது, சரியாக... மறுபடியும் நேராக... அது (வார்த்தை) பொய்யுரைக்கவும் அல்லது ஏதாவது தவறிழைக்கவுஞ் செய்ய உன்னால் முடியாது. மறுபடியுமாக அது அதே ஸ்தலத்திற்கு சரியாகத் திரும்ப வருகிறது. ஆம், ஐயா. ஒரு மனிதன் உங்களிடம் தவறான போதகங்களைக் கொண்டு வரும்போது, அவன் என்ன விசுவாசிக்கிறான் என்று நீங்கள் அறிந்து கொள்ளுவீர்கள். நீங்கள் எங்கு நிலைகொள்ளவேண்டுமென்று அறிந் திருந்தால்... 76ஒரு முயலை அதன் பட்டியில் அவிழ்த்துவிட்டு, எல்லா துவாரங் களையும் அடைத்து, பட்டியின் வாசலருகில் நின்றால், அது மறுபடியும் வாசலிடம் தான் வரவேண்டும். அதற்கு அதைத் தவிர வேறொன்றும் இல்லை. பாருங்கள்? ஏனெனில் அது வாசலின் வழியாகத்தான் வெளி யேற முடியும். அது தன் தலையை உடைத்துக் கொண்ட பிறகு அங்கு மிங்கும் நுழைத்து வெளியேற முயலுவதை நீங்கள் கவனித்துக் கொண்டே இருக்கலாம். முடிவில் அது வாசலிடம்தான் வரவேண்டும். பாருங்கள்? அவ்வளவுதான். . அவ்வாறே நீங்களும் எவ்வளவாக உங்கள் தலைகளை ஸ்தாப னங்களின் பிரமாணங்களிலும் கோட்பாடுகளிலும் நுழைக்க முயன்றலும், முடிவில் நீங்கள் தேவனுடைய வார்த்தைக்குத்தான் வரவேண்டும். ஆகவே, தேவனுடைய இந்த வார்த்தையில் நிலைநில்லுங்கள். பாருங்கள். ஆம் ஐயா. அனைத்தும் அதனுடையதாகவே உள்ளது. 77இப்பொழுது, பாருங்கள், அவர்களுக்கு அது தேவையில்லை. அவர்களுக்கு தேவனுடைய வார்த்தை தேவையில்லை. ஏனெனில், அவள் தன்னுடைய பாரம்பரியத்தைப் பற்றிக்கொண்டதால், தேவனுடைய வார்த்தை பலனளிக்காதபடி செய்தாள். ஆவிக்குரிய ஏவாளும் அதையே செய்தாள். அவள் அதை விரும்பவில்லை. அவள் தன்னுடைய பாரம்பரியங்களைப் பற்றிக் கொண்டு, தேவனுடைய வார்த்தையினின்று விலக விரும்புகிறாள். தேவனுடைய வார்த்தையை எடுப்பதற்குப் பதிலாக, அவள் மறுபடியும் மாக ஸ்தாபனங்களையும், அவைகளின் பிரமாணங்களையும், அவளு டைய மூப்பர்களின் பாரம்பரியங்களையும் பற்றிக்கொள்கிறாள். வாக்களிக்கப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தை கடைசி நாட் களில் வரும்போது, ஸ்தாபனங்கள் தங்கள் பாரம்பரியத்தில் மூழ்கியுள்ள காரணத்தால், அந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ளமாட்டா. எபிரெய மணவாட்டியும், உண்மையான வார்த்தை அவளிடம் தோன்றி, அநேக அற்புதங்களினால் அது உறுதிபடுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்ட போதி லும், அவள் அதை நிராகரித்தாள். அதுபோன்றே இன்றும் சம் பவிக்கிறது. ஏன்? இன்றைய ஸ்தாபனங்கள் அதைப் புறக்கணிக்கும் என்ப தற்கு எபிரெய மணவாட்டி ஒரு உதாரணமாயிருக்கிறாள். அது சரி. அந்த உதாரணம் ஒருபோதும் தவறாது. பாருங்கள்? அவள் இவ்விதம் செய்வாள் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர்களால் அதினின்று விலகமுடியாது. ஆகையால் நீங்கள் செய்யவேண்டிய ஒன்றே ஒன்று, நீங்கள் தேவனுடைய வார்த்தைக்குள் இருப்பதற்காக சந்தோஷம் கொள்வதே யாகும். அவ்வளவுதான். அதற்காக காத்திருங்கள். சரி. 78கடைசி நாட்களில் தேவன் தோற்றமளித்து அவருடைய வார்த் தையை உறுதிப்படுத்துவதாக வாக்களித்துள்ளார். என்றாலும், ஸ்தாபனங்கள் அதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. தேவன் தம்முடைய ஊழியக்காரரகிய தீர்க்கதரிசிகளில் இவை யாவையும் வாக்குத்தத்தம் செய்தார். இயேசுகிறிஸ்து, யோவேல், பவுல், மல்கியா, திவ்யவாசகனாகிய யோவான், தீர்க்கதரிசிகள் இவர்கள் மூலமாய் கடைசி காலத்தில் அவளுக்கு அளிக்கப்படவிருக்கும் கடைசி செய்தியைக் குறித்து தேவன் முன்னறிவித்திருக்கிறார், நீங்கள் வேண்டுமானால் இவ்வசனங்களைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இவை ஏற்கனவே உங்களுக்குத் தெரியும். பாருங்கள்? இப்பொழுது சரியாக என்ன சம்பவிக்கும் என்று முன்னறிவிக்கப்பட்டது! சபைக்கு அது என்னவாயுள்ளது? இயேசு : யோவான் 14:12; யோவேல்: யோவேல்: 2:38; பவுல் : 2 தீமோ. 3; மல்கியா : மல்கியா. 4; யோவான்: வெளி. 10:1-7. இன்றைய சபைக் காக, வார்த்தையானது மறுபடியும் மாம்சத்தில் அவருடைய மக்களி டையே தோன்றியுள்ளது. பாருங்கள்? ஆனாலும் அவர்கள் அதை விசு வாசிப்பதில்லை. 79இயேசுகிறிஸ்து ஜனங்களுக்கு முன்னால் அற்புதங்களைச் செய்து அவர் தேவனென்று நிரூபித்தபோது என்ன கூறினார் தெரியுமா? அவர் என்ன செய்தார் என்பதை நிரூபித்தார். அவர் அப்படியே செய்தார். அவர், “ஓ, வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே... உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமில் செய்யப்பட்டிருந்த தானால், அது இந்நாள்வரைக்கும் நிலைத்திருக்கும்'' என்றார். அது உண்மை . கப்பர்நகூமில் அவர் ஒரு சிலரை மாத்திரம் சொஸ்தப்படுத்தி, அவர்கள் இருதயங்களின் இரகசியங்களை அறிந்து அவைகளை வெளிப் படையாகக் கூறிவிட்டு, வெளிநடந்தார். ஊம்... அவ்வளவுதான். பாருங்கள்? பலத்த செய்கைகள் என்னவென்பதை அவர்கள் புரிந்துக்கொள்ள வில்லை. (இயேசு செய்த மேற்கூறிய காரியங்களே பலத்த செய்கைகள் -தமிழாக்கியோன்) அவர்கள் பெரிய திட்டங்களை அமைப்பது அவசிய மென்று எண்ணுகின்றனர். எல்லாரும் எழுந்து நிற்க நீதிபதி ஒரு சொற் பொழிவு ஆற்றுவார். அப்பொழுது வாத்தியங்கள் முழங்கி, கொடிகள் பறந்து ஆடம்பர ஆடைகளணிந்துள்ள பெண்மணிகள் காத்திருக்க, பெரிய பெரிய பட்டங்கள், பெறவேண்டுவோர் பெரிய உயரமான குல்லாய்களைப் போட்டுக்கொண்டு, பி.எச்.டி., எல்.எல்.டி., (Ph.D., LL.D's) பட்டதாரிகள். கழுத்துப்பட்டைகளைத் தூக்கி விட்டுக்கொண்டு உள்ளே நடந்து செல்வர் (வேத பள்ளிகளில் படித்து தேர்வு பெற்ற வர்களுக்குப் பட்டம் வழங்கும் விழாவை விஸ்தரித்து சகோ. பிரான் ஹாம் கூறுகின்றார் - தமிழாக்கியோன்). ''அது மிகவும் மகத்தானது' என்று ஜனங்கள் கருதுகின்றனர். ஆனால் தேவனோ “அது மூடத்தனம்” என்கிறார். 80ABCக்களுக்கிடையே வித்தியாசம் என்னவென்று அறியாத படிப் பறியாத பேதையர் மூலமாய் தேவன் அநேக காரியங்களைச் செய்து உண்மையான சபைக்கு அனல் மூட்டுகிறார். ஆனால் ஜனங்கள் அவர் களைப் பார்த்து, 'பரிசுத்த உருளர்களின் குழு' (holy rollers) என்று பரி கசிக்கின்றனர். ஆனால் தேவனோ அதை மகத்தான ஒன்றாய்க் கருது கிறார். ஆனால் ஜனங்களோ அதை மூடத்தனம் என்று கருதுகின்றனர். ஜனங்கள் மகத்தானதாகக் கருதுபவைகளை தேவன் மூடத்தனமெனக் கருதுகிறார். மறுதலையாக (vice versa) இருப்பதைப் பார்த்தீர்களா? தேவன் தாம் வாக்களித்துள்ளவைகளை நிச்சயம் நிறைவேற்றுவார். அவர் ஏற்கனவே அவைகளை நிறைவேற்றியிருக்கிறார். பாருங்கள்? நாம் இங்கே இருக்கிறோம். 81எபிரெய மணவாட்டி பாரம்பரியங்களிலேயே நிலைகொண்டிருந் தாள். இன்னும், அவ்வாறே இருக்கிறாள். அதை மட்டும் அவளால் செய்ய முடியவில்லை. இயேசு மரித்தோரை எழுப்பினார். தேவனுடைய ஆவியை அவரில் காண முடிந்தது. அவர் தேவகுமாரன் என்பதை அடையாளங்களினால் உறுதிப்படுத்திக் காண்பித்தார். முதலில் அவர் பிரசங்கம் செய்யத் தொடங்கினார். “இவன் ஒரு விந்தையான மனிதன், இவன் யார்?'' என்று ஜனங்கள் கேட்கத் தொடங்கினர். நல்லது, முதலாவது நீங்கள் அறிவது என்னவெனில், ஜனங்கள் சொல்ல ஆரம் பிப்பது.... அவருக்கு முன்னோடியாக யோவான் ஸ்நானன் வந்தபோது, அவர்கள் அவனிடம், 'நீ மேசியாவா?' என்று கேட்டனர். அவன், ''நானில்லை, ஆனால் அவர் உங்கள் மத்தியில் எங்கேயோ இருக்கிறார்'' என்றான், ஊம். பாருங்கள்? ஏன்? அவனுடைய செய்தி வந்தபோது, தான் என்ன செய்யவேண்டும் என்பதை யோவான் அறிந்திருந்தான். அவன்தான் என்ன செய்யப் போகின்றான் என்பதை அறிந்திருந்தான். 82உதாரணமாக, நோவா ஏனோக்கை கவனித்துக்கொண்டே வந் தான். ஏனோக்கு மேலே சென்றவுடன் நோவா, 'நாம் பேழையின் அரு காமையில் செல்லவேண்டிய சமயம் வந்துவிட்டது' என்றான். நோவா ஏனோக்கை கவனித்துக்கொண்டே வந்தான். பாருங்கள்? அவ்வாறே, யோவானும் இயேசு கூறியதை அல்லது தேவன் அவனைக் கவனிக்கக் கூறிய அடையாளம் நிகழ எதிர்பார்த்துக் கொண் டிருந்தான். அவன் ஜனங்களிடம், ''அவர் உங்கள் மத்தியில் எங்கேயோ நின்று கொண்டிருக்கிறார். இதுவரை நானும் யார் அவர் என்பதை அறி யேன். ஆனால் அவரை நான் அறிந்து கொள்வேன்'' என்றான். அவர்கள் யோவானிடம் வந்து, 'நீ மேசியாவா? நாங்கள் தலைமை ஸ்தலத்திலிருந்து (headquarters) அனுப்பப்பட்டுள்ளோம், “ஊ ஊம். அங்குள்ள மூப்பர்கள் அனைவரும் எங்களை அனுப்பினர். நீ மேசியாவானால், இங்குள்ள தாழ்ந்தவரிடத்தில் உன்னை வெளிப்படுத்துவதைக் காட்டிலும், அங்கு ஏன் வந்து உன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளக் கூடாது? நீ அங்கே வந்து உன்னை அறிமுகப்படுத்திக்கொள்'' என்றனர். அதற்கு யோவான், ''நான் மேசியாவல்ல. நான் வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம்“ என்று பதிலுரைத்தான். அது அவர்கள் தலைகளுக்கு மேல் சென்றது பாருங்கள். அதை கிரகித்துக்கொள்ள முடியாமற்போயினர். ஆயினும், அவர்களெல்லாரும் அவன் வருகையை எதிர்நோக்கியிருந்தனர். ஆனால் அவன் வந்த போது, அவனது தோற்றத்தையும் சூழ்நிலையையும் கண்டு, அது அவ னாயிருக்க முடியாது என்னும் தீர்மானம் கொண்டனர். 'நீ எந்த வேத பள்ளியில் படித்தாய்?' 'எந்தப் பள்ளியிலுமில்லை' அவர்கள் 'உன்னிடம் ஐக்கியச் சீட்டு (Fellowship card) உள்ளதா?' 'அப்படியென்றால் என்ன?' என்று அவர்களையே கேட்டிருப்பான். பாருங்கள்? 83அவன் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவனாய் இருந்தான். அவன் அவர்களுக்குப் பிரதியுத்திரமாக, ''என்னிடம் ஒரு செய்தி மாத் திரமேயுண்டு. அதாவது, கோடாரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது'' என்றான். இப்பொழுது, அவன் பெற்றிருந் ததும் அதுவே. ஒரு போதகனைப் போல் போதியாமல், மரம் வெட்டு பவன் ஒருவனைப் போன்று அவன் போதித்தான் - விரியன் பாம்பு, கோடாரி, மரங்கள் போன்ற சொற்களை அவன் உபயோகித்தான். அவன் மத சம்பந்தமான (ecclesiastical) சொற்கள் எவையும் பேசவில்லை . “அவனுக்கு நிகரான தீர்க்கதரிசி யாருமில்லை'' என்று இயேசு கூறினார். ''ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் அவனுடைய நாட்கள் வரையிலும் (till his day) எழும்பவில்லை.'' அது சரி. 'அவன் தீர்க்கதரிசியைக் காட்டிலும் மேலானவனாயிருந்தான்.'' அவன் உடன்படிக்கையின் செய்தியாளன், இரண்டு யுகங்களுக்கிடையே நின்றவன். பாருங்கள்? ”அவன் தீர்க்க தரிசியைக் காட்டிலும் மேலானவன். 84ஆகவே அப்பொழுது, அவர்கள் அவனை அறிந்துகொள்ள முடிய வில்லை. அவனை அவர்களால் புரிந்துகொள்ள முடியாமற்போயிற்று. அவன் விநோதமான ஒருவனாய் இருந்தபடியால், அவர்கள் அவனைத் தள்ளிவிட்டனர். அப்பொழுது, இயேசு தோன்றினபோது, தச்சனுடைய குமாரனாகப் பிறந்த அவரை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர், நிச்சயமாக. மேலும், அவர் முறைதவறிப் பிறந்தாரென்னும் மோசமான பெயர் அவருக்கு உண்டாயிருந்தது. அத்தகைய ஒருவரை அவர்கள் காணச் செல் லவில்லை . ஆனால் தேவன் என்ன செய்தாரென்று பாருங்கள். அவர் படிப்பறியாதவரையும், ஏழை, செம்படவர்களையும், மரம் வெட்டுபவரையும், குடியானவரையும், வேசிகளையும் தமது ஊழியத்திற்கென்று தெரிந்து கொண்டு, கெளரவம் மிகுந்தவர்களைச் சும்மா விட்டுவிட்டார். ஏன்? என்ன? ஏன் அதைச் செய்தார்? அவர் ஏன் அங்ஙனம் செய்தார்? உங்க ளால் கற்பனை செய்ய முடிகிறதா? ஏனெனில் அவரே வார்த்தை என் பதை அந்தப் படிப்பறியாதவர்கள் அறிந்து கொண்டனர். படிப்பறியாத இவர்களைச் சற்று கவனிப்போம். 85பேதையான மீன் பிடிப்பவன் ஒருவன் இருக்கிறான், பேதுரு. அவனுடைய பெயரை எழுதவும் கூட அவனால் முடியாது. “அவன் படிப்பறியாதவனென்றும் பேதமையுள்ளவனென்றும்'' வேதம் கூறு கின்றது. அவன் மீன் பிடித்து, மீன்களைக் கொண்டுவந்து வைத்து விட்டு, மறுபடியும் சென்று என்ன சத்தம் கேட்கின்றது என்று பார்க் கிறான். ஆயினும் அவன் இருதயத்தின் ஆழத்தில் மேசியா வருவா ரென்று வேதம் உரைத்திருப்பதை அறிந்திருந்தான். எல்லா எபிரெயர்க ளும், மேசியா வருவாரென்று எதிர் நோக்கியிருந்தனர். ஏனெனில் அவர் வரும்போது ஒரு வேதப் பூர்வமான காரியம் சம்பவிக்கவேண்டியதா யிருந்தது. 86மேசியாவென்று தங்களைக் கூறிக் கொண்டவர் அநேகர் எழும்பி நூற்றுக்கணக்கானவரை வனாந்தரத்திலும் மற்றவிடங்களிலும் வழி நடத்திச் சென்றனர். ஆனால் அவர்களெல்லாம் மாண்டுபோயினர். உண்மையான மேசியா வரும்போது அவரைத் தூக்கியெறிவதற்கென இத்தகைய சம்பவங்கள் நிகழுகின்றன. அவ்விதமாக, தற்போதும் நம்மிடையே எலியாவின் சால்வைக ளும் அங்கிகளும் காணப்படுகின்றன. உண்மையான ஒன்று வரும் போது அதை அப்புறப்படுத்துவதற்கென இவையாவும் சம்பவிக் கின்றன. பாருங்கள்? அது உண்மை . இவ்விதமான அங்கிகளையும் சால்வைகளையும் தரித்துக்கொண்டு, எல்லாவிதமான அடையாளச் சின் னங்களுக்குள்ளும் (hoods) மற்றவற்றிலும், தங்களை அமிழ்த்துக் கொண்டவர்கள். ஆனால் இத்தகைய போலிச் செயல்கள் ஏதோ ஒன்று சம்பவிக்கவிருக்கிறது என்பதைக் காண்பிக்கின்றன. ஒரு போலி டாலர் நோட்டை காணும்போது, உண்மையான ஒரு டாலர் நோட்டு இருக்கிறது என்பதை நாமறிந்துகொள்ளலாம். பாருங்கள்? ஆகவே கெளரவம் மிகுந்தவர்கள், அவர்கள் தங்கள் ஈடுகளில் (substitutes) இருந்தவர்கள் ''மேசியா வருவாரானால், அவர் காய்பா வினிடத்தில்தான் வரவேண்டும். அவர் நம்முடைய ஸ்தாபனங்களுக்கு வருவார்'' என்றெல்லாம் கூறினர். உடனே சதுசேயர் அதற்கு ஆட்சேபம் தெரிவித்து, “இல்லை, அவர் எங்களிடம்தான் வருவார்” என்றும் கூறியிருக்க வகையுண்டு. இன்றும் அதுபோன்றே நிகழ்ந்து கொண்டு வருகின்றது. 87அவருடைய வருகையோ விந்தையாய் இருந்தது. ஓ அவரோ அவர்களுடைய சிந்தனைகளுக்கு முரண்பட்ட விதத்தில் வந்தார். ஆனால் அவர் தேவனுடைய வார்த்தையின்படியே வந்தார். ஆனால் அவர்களோ வார்த்தையை அறியாமலிருந்தனர். உங்கள் சிந்தனையில் பதியவேண்டுமென்று இதை நான் கூறு கிறேன். இன்றைக்கு உங்களிடமும் அதே தவறுதான் காணப்படுகின் றது. நீங்கள் தேவனுடைய வார்த்தையை அறியாமல் இருக்கிறீர்கள்! பாருங்கள். இயேசு, “வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் முடியவில்லையா?'' என்றார். அவர்களோ, 'எங்களுக்கு மோசே போன்ற தீர்க்கதரிசிகள் உள்ளனர்' என்றனர். அதற்கு இயேசு, 'மோசேயை அறிந்திருப்பீர்களானால் என்னையும் அறிந்திருப்பீர்கள்' என்று பதிலுரைத்தார். அவர்கள் மோசேயை அறிய வில்லை. ஆகவேதான் அவர்கள் அவரையும் அறிந்து கொள்ள முடிய வில்லை. தாங்கள் குஞ்சு பொரித்த (hatched) கோட்பாடுகளை மாத்திரமே அவர்கள் அறிந்திருந்தனர். 88இப்பொழுது இந்த வயோதிப மீனவனை எடுத்துக்கொள்வோம். அவன் தன் கூடையைக் கீழே வைத்து, நரைத்திருந்த தன் தாடியை வருடிக் கொண்டே, ''அவர் யாரென்பதை நான் அறிந்துகொள்வேன்'' என்று முழு தீர்மானத்தோடு காணப்பட்டான். அப்பொழுது அவன் சகோதரன் அவனிடம் வந்து, ''சீக்கிரம் வா; நாம் அங்கே போகலாம்.'' அவர்கள் அந்த நாளில் சென்றார்கள். அந்த ஆள் (Guy) அவர்தான். 'சென்ற இரவு முழுவதும் நான் அவருடன் கழித் தேன்' நீ யோவானை அறிவாயா; நான் உன்னிடம் அதைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேனே? என்று சொன்னான். அதற்கு சீமோன், ''யார், அந்த காட்டு மனிதனா? இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன் அவன் பிரசங்கத்தை நான் கேட்டிருக் கிறேன்'' என்றான். யோவான் அங்கு ஒருநாள் நின்று கொண்டிருந்தான். அப்பொழுது அவன், 'உங்களுக்குத் தெரியுமா, இப்பொழுது இங்கே அவர் வருகிறார்' என்று விநோதமான ஒன்றைச் சொன்னான். அதற்கு அவர்கள், 'உனக்கெப்படித் தெரியும்?' என்று கேட்டனர். இயேசு சாதாரண ஒரு மனிதனாக அங்கு நின்றிருந்தார். யோவான் அவர்களிடம், 'தேவ ஆவியானவர் அவர்மேல் புறாவைப்போல் இறங்குகிறதை நான் காண்கிறேன், அல்லாமலும்: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குள் வாசம் செய்ய நான் பிரியமாயிருக்கிறேன் என்னும் சத்தம் கேட்கிறது' என்று கூறினான். பின்பு அவன் தண்ணீருக்குள் சென்று அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். “நல்லது, யோவான் அவரை அறிந்துள்ளதாகக் கூறினான்” என்றான். சீமோன், “ஓ, எனக்கு ஒன்றும் புரியவில்லை. இதைக்குறித்து நான் அநேகமுறை கேட்டிருக்கிறேன்'' என்றான். ஆனால் அவன் அங்கே வருகிறான். அவனுடைய இருதயத்தில் முன்குறிக்கப்பட்ட வித்து ஒன்று ஆழமாகப் பதிந்திருந்தது. பாருங்கள்? இயேசு அவ்விதம் கூறினார். சரி, அவரிடம் அவன் சென்றான். நடந்தான். ''இயேசுவின் கூட்டத்திற்குச் சென்று என்ன நேரிடுகிறதென்று பார்க்கலாம்'' என்று சீமோன் கூறி விட்டு அங்கு சென்றான். 89அங்கு இயேசு நின்று கொண்டிருந்தார். அவர் ஒரு சாதாரண மனிதனாகக் காணப்பட்டார். அவன் இயேசுவையடைந்தவுடன், அவர் அவனைக் கண்ட மாத்திரத்தில், “உன் பெயர் சீமோன். உன் தகப்பனாரின் பெயர் யோனா'' என்றார். அது அவனை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. ஏன்? அப்பொழுது அவனில் பதிந்திருந்த நித்திய ஜீவனின் வித்து உணர்வடைந்தது. ஆம், ஐயா. பேதுரு அவரிடம், “ஒரு நிமிடம்... அது எப்படி? இதற்குமுன் நீர் என்னைக் கண்டதில்லையே. என் தகப்பனாரும் காலமாகி அநேக வருடங்கள் ஆகின்றதே. எங்ஙனம் எங்கள் பெயர்களை நீர் அறிந்திருக்கிறீர்?'' என்று கேட்டான். பின்பு அவன், ”வேதம் என்ன சொல்கின்ற தென்று நான் அறிந்துள்ளேன்.'' மூப்பர்கள் என்ன கூறுகிறார்கள் என்றல்ல. ''மேசியா தீர்க்கதரிசியாயிருப்பார் என்று வேதம் கூறுகிறது. அவர் இங்கே இருக்கிறார். அது அவர்தான்“ என்றான். 90ஒருநாள் இயேசு சில யூதர்களுடன் சமாரியா வழியாய் நடந்து சென்றார். சற்று பின்னர் அவர் அவர்களை விட்டு விலகிச் சென்றார். அப்பொழுது மோசமான பெயரைக் கொண்டிருந்த அந்தப் பெண் நடந்து செல்வதை அவர் கண்டார். அவள் மிகவும் அழகுள்ள இளம் பெண்ணா யிருந்திருக்கலாம். அவள் சிறு குழந்தையாயிருந்தபோது, தெருவில் விடப்பட்டவளாய் இருந்தாள். அவள் ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டே சென்றிருக்கலாம். அவள் கிணற்றினருகில் வந்து தண்ணீர் மொள்ளத் தொடங்கினவுடன் ஒரு மனிதன் அவளிடம், “குடிப்பதற்கு தா'' என்று கூறுவதை அவள் கேட்டாள். அவள் திரும்பிப்பார்த்து நடுத்தரமான வயதுள்ள ஒரு யூதன் அங்கு உட்கார்ந்திருப்பதைக் கண் டாள். அவள், ''நீர் யூதனல்லவா? நீர் அவ்விதம் செய்யக்கூடாது. நான் ஒரு சமாரிய ஸ்திரீ. நீர் என்னுடன் பேசக்கூடாதே'' என்றாள். அதற்கு அவர், ''உன்னிடம் பேசுபவர் யாரென்று நீ அறிந்தி ருந்தால், நீயே என்னிடம் தண்ணீர் கேட்டிருப்பாய்'' என்றார். அதற்கு அவள், “உம்முடைய வாளியும் கயிறும் எங்கே?'' என்று கேட்டாள். பாருங்கள்? அவரோ, 'நான் கொடுக்கும் தண்ணீர் ஜீவ தண்ணீராகும்' என்றார். உடனே அவள், ''என்ன அது?'' பாருங்கள்? நீங்களெல்லாம் தேவனை எருசலேமில் தொழுதுகொள்ள வேண்டும் என்கிறீர்களே, எங்கள் பிதாக்கள் இங்கல்லவா தொழுதுகொண்டு வந்தார்கள்?' என்று கேட்டாள். பாருங்கள்? அவர், “அது சரியே. ஆனால் யூதர்களாகிய நாங்கள் யாரை வழி படவேண்டுமென்பதை அறிந்திருக்கிறோம். ஆனால் மனிதன் எருசலேமிலும் இந்த மலையிலும் மாத்திரமல்ல. எங்கும் தேவனைத் தொழுது கொள்ளும் காலம் வரப்போகிறது. தேவன் ஆவியாயிருப்பதால் அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்வார்கள்” என்றார். இதைக் கேட்ட அவள் அவர் யாரென்பதை ஆராயத் தொடங்கினாள். அவர் அவளை நோக்கி, 'உன் புருஷனை அழைத்து வா' என்றார். அதற்கு அவள் ''என் புருஷனா? எனக்கு புருஷன் இல்லை'' என்றாள். அதற்கு அவர், “என்ன நீ கூறுவது உண்மையே. இதற்கு முன்பு ஐந்து பேருடன் வாழ்ந்திருக்கிறாய். இப்பொழுது உனக்குள்ளது ஆற வது ஆள்'' என்றார். ”உனக்கு ஐந்து புருஷர் இருந்தனர். நீ அதை அறிவாய். நீ உண்மையையே கூறினாய்,'' என்றார். 91கவனியுங்கள்! அது என்ன? அந்த வெளிச்சம் வித்தின்மேல் விழுந்தது. தேவனால் பேசப்பட்ட வித்தானது அங்கு புதைந்திருந்தது. ஆம் ஐயா! வித்து பூமிக்குள் புதைந்து இருந்தது. தேவன் தண்ணீரை விலக் கிய பின்னர் சூரிய வெளிச்சம் அதன்மேல் பட்டவுடன் அது முளைக்கத் தொடங்கினது அது சரி. பாருங்கள்? வித்து முளைப்பதற்கு சூரியன், வெளிச்சம் அவசியமாயிருக்கிறது. அதற்கு வெளிச்சம் மாத்திரம் தேவையாயிருந்தது. ஆம், ஐயா. அவ்வாறே இயேசுவுக்குள்ளிருந்த பரிசுத்த ஆவியானவர் அவ ளுடைய முன்னாள் வாழ்க்கையைக் குறித்து அவளிடம் உரைத்தபோது, அந்த வெளிச்சம் வித்தின்மேல் பட்டது. அவள் 'நீர் தீர்க்கதரிசியென்று காண்கிறேன்'' என்றாள். மேலும் அவள், “மேசியா வரும்போது அவர் எவ்விதம் இருப்பாரென்பதை நானறிவேன். நாங்கள் அறிவோம். தீர்க்க தரிசி, உண்மையான தீர்க்கதரிசி எங்கள் மத்தியில் தோன்றி நூற்றுக் கணக்கான வருடங்களாகின்றன' என்றாள். அவள், ''என் புருஷனைக் குறித்து - எனக்கு எத்தனை பேர் இருந்தனர் என்பதை நீர் அறிவித்தீர், எவ் விதம் அதைச் செய்தீர் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் மேசியா வரும்போது அதையே செய்வார். அப்படியானால் நீர் யார்?'' என்று அவள் வினவினாள். 'நான்தான் அவர்' என்று அவர் பதிலுரைத்தார். ஒரு வேசி அதைக் கண்டுகொண்டாள். பாருங்கள்? ஆசாரியர்கள் அவர்கள் சபையாருக்கு பதிலளிக்க வேண்டிய தாயிருந்தனர். “அந்த மனிதனுடன் எவ்வித தொடர்பும் கொள்ளவேண் டாம். அவனுக்குப் பிசாசு பிடித்துள்ளது. அவ்வளவே'' என்று எச்சரித் தனர். இப்பொழுது, அதுதான் வித்தியாசம். இன்றைக்கும் அதுவே சம்ப விக்கின்றது. பாருங்கள்? அது சரியாக அவ்விதமே பொருந்துகின்றது. ஆம். ஆம், ஐயா. 92ஒளி வித்தின்மேல் விழுந்ததால் அவள் அவரை அறிந்துகொள்ள முடிந்தது. மீனவர்கள், மரம் வெட்டுபவர்கள், குடியானவர்கள், சுங்கம் வசூலிப்பவர்கள், வேசிகள் அனைவரும், அவர் செய்யப்போவது என்ன வென்று எளிமையான வேதவாக்கியங்கள் கூறிய அனைத்தும் அவரில் நிறைவேறியதை அறிந்துகொண்டனர். அதே சமயத்தில் பரிசேயர் அவர் களுடைய பாரம்பரியங்களின் காரணத்தால் அவரைக் கண்டு கொள்ள முடியவில்லை. (சகோதரன் பிரான்ஹாம் சிறிது நிறுத்தி, ஒரு குறிப்பிட்ட விதத்தில் சமிக்ஞை செய்கிறார். சபையார் சம்மதம் தெரிவிக்கும் விதத்தில் பதிலளிக்கிறார்கள்- ஆசி). அவர்கள் பாரம்பரியத்தினால், அவர்களால் காண முடியவில்லை. ஆனால் வேசிகள், குடியானவர்கள் போன்றவர்கள் முன்குறிக்கப்பட்டதனால், அவர்களுடைய சந்தேகங்கள் நிவிர்த்தியாகி, அவர்களிலிருந்த வித்து முளைக்கத் தொடங்கினது. அது உண்மை. அவள் என்ன செய்தாள்? அந்த சமாரிய ஸ்திரீ, “நான் மேசியா வைக் கண்டதனால் மகிழ்ச்சியுறுகிறேன்'' என்று கூறியதுடன் நின்று விடவில்லை. இல்லை, இல்லை சகோதரனே. அவள் தண்ணீர் குடத்தையும் மறந்துவிட்டு பட்டிணத்திற்குள் சென்று, 'நான் செய்த எல்லாவற்றை யும் கூறிய மனுஷனை வந்து பாருங்கள். மேசியா இவைகளைச் செய்வார் என்று வேதவாக்கியங்கள் கூறுகின்றதல்லவா?' என்றாள். அந்த ஜனங்களும் அதே காரியத்தைத்தான் காணமுடிந்தது. 93இயேசுகிறிஸ்து யோவான் 14:12-ல் கூறியது மறுபடியும் இக் காலத்தில் நிகழும் என்று கூறினார். ''நோவாவின் நாட்களில் நடந்தது போல...'' என்று லூக்காவிலும் கூறியுள்ளார். தேவன் எங்ஙனம் ஒரு மனிதனில் வெளிப்பட்டு, அவருடைய பின்புறத்தில் நடந்ததை-அதாவது சாராள் கூடாரத்திலிருந்து சிரிப்பதை - பகுத்தறிந்து கூறினார்! இந்தக் கடைசி நாட்களைக் குறித்து மல்கியா, மற்றும் எல்லா வேதவாக்கியங்களும் முன்னுரைத்துள்ளன. எபிரெயர் 4- “வார்த்தை'' திரும்ப வரும்பொழுது என்று கூறுகின்றது. மல்கியா 4 - ”அது ஒரு மனிதன் மூலம் திரும்ப வரும்'' என்று கூறுகின்றது. எபிரெயர் 4, “தேவனுடைய வார்த்தை இருதயத்திலுள்ள சிந்தனைகளைப் பகுத்தறிகின்றது,'' என்று கூறுகின்றது. ஆகவே, தற்போது நிறைவேறுகிறதை அவர்கள் கண்கூடாகக் கண்டும், அதனின்று அகன்று போகின்றனர். அவர்களுடைய பாரம்பரியம் அதை மறைத்து அவமாக்குகின்றது. நல்லது. நாம் இங்கேதான் இருக்கின்றோம். அவ்வளவுதான். ஊம். அவர் இன்றைக்கும் அதையே செய்யமுடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் தான் செய்வேன் என்று கூறியதைப்போல சரியாக காட்சியில் வந்து, அன்று செய்ததுபோலவே இன்றைக்கும் செய்வார். பாருங்கள்? அவர் இவ்விதம் செய்வதாக வாக்களித்துள்ளார். அவர் அதைச் செய்வதாக வாக்களித்துள்ளார். அவர் அதே காரியத்தைச் செய்வாரானால், லவோதிக்கேயா (செய்தியாளனும்) அதைச் செய்யவேண்டிய வராயிருக்கிறார். லவோதிக்கேயா சபை அதைக் கண்டபோதிலும், எபிரெய சபை அதை நிராகரித்தது போன்று அவர்களும் அதை நிராகரிக்கின்றனர். அது எவ்வளவாய் நிரூபிக்கப்பட்டாலும், ஓ, அவர்கள் அதை எவ்விதத் திலாகிலும் நிராகரிப்பார்கள். ஓ, என்னே . 94இப்பொழுது, அது அதைச் செய்யும் என்று கூறுகின்றது. அவர் இக்காலத்தில் வெளிப்பட்டு, மூல வார்த்தைக்கும் மூல விசுவாசத்திற்கும் ஜனங்களைத் திருப்புவாரென்றும் வாக்களிக்கப்பட்டுள்ளது. அவர் தம்மை வெளிப்படுத்த வேண்டுமானால் ஜனங்களின் மத்தியில் அவர் வாசம் செய்து இக்கிரியைகளைச் செய்யவேண்டும். அவருடைய புகைப் படம் எடுக்கப்பட்டு விஞ்ஞான ரீதியாய் அது நிரூபிக்கப்படவும் அவர் அனுமதித்தார். என்றாலும் அவர்கள் அதை விசுவாசிப்பதில்லை. நேற்றும், இன்றும், என்றும் மாறாத (எபி. 13:8) அந்த அக்கினி ஸ்தம்பம் புகைப் படக் கருவி (Camera)யிலுள்ள கண்ணாடியின் (lens) வழியாக ஊடுருவிச் சென்று புகைப்படத்தில் விழுந்து, ஆவிக்குரிய பரிமாணங்கள் விஞ்ஞான ரீதியாகவும் மற்ற எல்லா வழியிலும் நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆயினும் அன்று செய்ததுபோன்று இன்றும் அவர்கள் அதை விசுவாசியாமலிருக்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் அதைவிட்டு அகன்று சென்று, அவர்கள் அன்று செய்ததைப் போலவே இன்றும் செய்வார்கள். ஓ, இவைகளை நாம் அறிந்துகொள்வதற்கு தேவன் தாமே உதவி செய்வாராக என்பதே என் பிரார்த்தனையாகும். இத்துடன் இதை நிறுத்திக் கொள்ளலாம். ஏனெனில் உங்களை அதிக நேரம் தாமதிப்பதற்கு நான் விரும்பவில்லை. நாம் அதைக் காணும்படி தேவன் நமக்கு உதவி செய்வாராக. பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் இப்பொழுது நம் மேல் இருப்பதால் முத்திரையைத் திறக்க அவர் நமக்கு உதவி செய்வா ரென்று நம்புகிறேன். 95இன்றைய சபையின் நிலையை நாம் அறிந்துகொண்டவர்களாய், வேத வாக்கியங்களை இப்பொழுது நாம் படிக்கலாம். சபை ஆதியில் எங்கிருந்தது என்றும், என்ன செய்ததென்றும், அது எங்கு வரவேண்டும் என்றும் கடைசி காலத்தில் அவர்கள் என்ன செய்வார்கள் என்றும் தீர்க்க தரிசனம் உரைக்கக்கப்பட்டிருப்பதையும் நீங்கள் தற்போதுள்ள சபை யின் நிலையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்கள் அதைத்தான் செய்தார்கள். இப்பொழுது, நாம் எங்கே இருக்கிறோம் என்பதைக் காண்கிறீர்களா? நீங்களே தீர்ப்பு கூறுங்கள். நான் தீர்ப்பு கூற முடியாது. தேவனுடைய வார்த்தையை உங்களுக்குக் கொண்டு வருவதற்கு மாத்திரமே நான் உத்திரவாதி. அது எனக்கு அளிக்கப்பட்ட பிரகாரம் தான் உங்களுக்கு அறிவிக்கிறேன். எனக்கு அது அளிக்கபடும்வரை, நானோ அல்லது வேறுயாரும் அதை உங்களுக்கு அறிவிக்கமுடியாது. அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது; நீ வந்து பார் என்று சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக் குதிரையைக் கண்டேன்; அதின் மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். அப்பொழுது: ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென் றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். 96இப்பொழுது, ஆட்டுக்குட்டியானவர் தம் கரத்திலுள்ள புஸ்தகத் தின் முத்திரைகளை ஒவ்வொன்றாக உடைக்கிறார். முதலாம், இரண்டாம் முத்திரைகளை உடைத்த பிறகு இப்பொழுது மூன்றாம் முத்திரையை அவர் உடைக்கிறார். அவர், ஆட்டுக்குட்டியானவர் மூன்றாம் முத் திரையை உடைக்கையில், மூன்றாம் ஜீவனானது.... இப்பொழுது, மூன்றாம் ஜீவன் காண்பதற்கு எவ்விதமிருந்தது என்று எத்தனை பேருக்குத் தெரியும்? அது மனுஷமுகம் போன்ற முகத்தை உடையதாயிருந்தது. முதல் இரண்டு ஜீவன்களும் முறையே சிங்கத்திற் கொப்பாகவும், காளைக்கொப்பாகவும் இருந்தன. மூன்றாம் ஜீவன் மனித முகத்திற்கொப்பாய் இருந்தது. மனித முகம் போன்ற முகம் கொண்ட இந்த ஜீவன் யோவா னிடம், மறைக்கப்பட்டிருந்த இரகசியம் 'இது என்னவென்று வந்து பார்' என்றது. இந்த மீட்பின் வருடங்கள் முழுவதுமாக என்ன சம்பவிக்கும் என்பது, உலகம் தோன்றுவதற்கு முன்பாகவே இந்த முத்திரையின் கீழ் மறைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது, 'இது என்னவென்று வந்து பார்'' என்றது. 97ஆகவே, அவர் அதை திறக்கிறார். ஒரு இடி முழங்குகிறது, ஆட் டுக்குட்டியானவர் முத்திரைகளை திறக்கின்றார். இப்பொழுது, அது என்னவென்பதைக் காண யோவான் செல்கிறான். அவன் என்ன கண்டான்? அவன் ஒரு கறுப்பு குதிரையையும், அதின்மேல் ஏறியிருக்கிறவன் ஒரு தராசைக் கையில் பிடித்திருப்பதையும் காண்கிறான். இப்பொழுது அதைத்தான் அவன் முதலில் கண் டான். ஆட்டுக்குட்டியானவர் முத்திரையை உடைத்தார். அந்த ஜீவன் அறிவிக்கின்றது. ஒவ்வொரு ஜீவனும் அதன் முறை வரும்போது, வந்து பார்' என்று அறிவிக்கின்றது. ஒருவேளை இவ்விதம் நின்றிருந்த யோவான், ஆட்டுக்குட்டியானவர் முத்திரையை உடைத்தவுடன் நடந்து செல்கிறான். சாதாரணமாக... அவர் முதலாம் முத்திரையைத் திறந்தபோது நாம் பார்த்தபடி, இடிமுழங்கினது. அங்கு என்ன சம்பவிக்கின்றது என்பதை யோவான் கவனிக்கிறான். முதலில் வெள்ளைக் குதிரையின் மேல் ஒருவன் சவாரி செய்து வருவதை அவன் காண்கிறான். அவன் இவ்விதம் கடைசி வரைக் கும் சவாரி செய்துகொண்டே செல்வதை யோவான் கவனிக்கிறான். சவாரி செய்பவனின் கையில் ஒரு வில் காணப்படுகின்றது. ஆனால் அவனிடம் அம்புகள் இல்லை. அடுத்தப்படியாக அவன் ஒரு கிரீடம் பெற்றுக் கொண்டு சவாரி செய்துகொண்டு செல்கிறான். 98பிறகு, ஆட்டுக்குட்டியானவர் முன்வந்து, மற்றொரு முத்திரையை உடைப்பதை நாம் காண்கிறோம். யோவான் அதை கவனிக்கிறான். இப்பொழுது, யோவான் ஒரு சிவப்பு குதிரையைக் காண்கிறான். அதன் மேல் ஏறியிருந்தவன் கையில் ஒரு பட்டயம் இருந்தது. அவன் பட்ட யத்துடன் வேதத்தின் முழுவதும் சவாரி செய்துகொண்டு செல்கிறான். பாருங்கள்? ஜனங்களைக் கொன்றுபோடவும் சமாதானத்தைப் பூமியிலி ருந்து எடுத்துப்போடவும் அவனுக்கு அதிகாரம் கொடுக்கப்படுகின்றது. இப்பொழுது, ஆட்டுக்குட்டியானவர் வேறொரு முத்திரையை உடைக்கிறார். அப்பொழுது மனிதனைப் போன்று ஜீவன் யோவானிடம், ''வந்து பார்'' என்று சொல்ல, அவனும் அது என்னவென்று காணச் செல்கிறான். அப்பொழுது கறுப்பு குதிரையின் மேல் சவாரி செய்யும் ஒருவனை அவன் காண்கிறான். 99இப்பொழுது வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்தவனே சிவப்புக் குதிரையின்மேல் சவாரி செய்தானென்று நாம் சென்ற இரவு பார்த்தோம். நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து ஒரு சத்தம் உண்டானது. நீங்கள் பாருங்கள். அது என்னவென்று காணும்படி யோவான் சென் றான். அவர் இந்த நான்கு ஜீவன்களிலிருந்தார். யோவான் இந்தக் கறுப்புக் குதிரையைக் காண்கிறான். 'ஒரு பணத்துக்கு ஒரு படி கோதுமையென்றும் ஒரு பணத்துக்கு மூன்று படி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே.' என்றும் நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். (பாருங்கள்?) 100கறுப்புக் குதிரையின்மேல் சவாரி செய்யும் இவனைச் சற்று கவனிப் போம். முதலாம் குதிரையின் மேல் சவாரி செய்தவனே, குதிரையை மாத் திரம் மாற்றிக்கொண்டு இரண்டாம் குதிரையின்மேல் சவாரி செய்கிறான் என்று நேற்று இரவு வேதபூர்வமாகப் பார்த்தோம். என்ன சம்பவித்தது? அவன் தன் ஊழியத்தை மாத்திரம் மாற்றிக்கொண்டான். பாருங்கள்? சரி. அவன் அந்திக்கிறிஸ்து என்றும் அவன் வேறொரு உத்தியோகத்தை ஏற்கிறான் என்றும் நாம் அறிந்துகொண்டோம். முதலாவதாக, அவன் வெள்ளைக் குதிரையின் மேலிருந்தபோது, ஒரு போதகத்தை நுழைக்கிறான் என்று நாம் பார்த்தோம். இப்பொழுது நாம் இவை ஒவ்வொன்றையும் சரியாக வேத வசனத்திற்குக் கொண்டு சென்றோம். பாருங்கள்? 101இப்பொழுது நாம் மூன்றாம் சபையின் காலத்திற்கு வந்துள் ளோம். பாருங்கள்? மூன்றாம் குதிரையை நாம் சிந்திக்கும்போது, அது சரியாக மூன்றாம் சபையின் காலத்துடன் சம்பந்தப்பட்டது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். பாருங்கள்? இப்பொழுது, முதலாம் சபையின் காலம், அது என்ன? முதலாவதாக, நிக்கொலாய் மதஸ்தனரிடம் ஒரு போதகம் இருந்தது. அது சரி. முதலாம் சபையின் காலத்தில் நிக்கொலாய் மதஸ்தரின் கிரியை கள் தொடங்கி, அவை சபையின் அங்கீகாரம் பெற்று செயல்பட ஆரம் பித்தன. அது சரி. ஆகவே அவர் இந்த ஆளிற்கு கிரீடம் சூட்டினார்கள். பிறகு இந்த அந்திக்கிறிஸ்துவின் ஆவி ஒரு மனிதனில் வாசம் செய்கி றது. பாருங்கள்? அதன் பின்னர் பிசாசே அந்த மனிதனுக்குள் குடி கொள்வதாக நாம் பார்த்தோம். அசுத்த ஆவி வெளியில் சென்று பிசாசே, உட்புகுகிறான். 102அந்திக்கிறிஸ்துவின் சபை இவ்விதம் வளர்ச்சியடைந்து கொண்டு வந்த அதே சமயத்தில் மணவாட்டியும் அபிவிருத்தியடைந்து, நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபி ஷேகம் மூலம் வளர்ச்சியடைகிறாள். பாருங்கள்? அவர்களின் எழுப்புதல் முதலிலும், சபையின் எழுப்புதல் கடைசியிலும் உண்டாகிறது. சபையின் காலங்களில் முதல் மூன்று கட்டங்கள் இருளின் காலங்களில் நிகழ்கின்றன. அடுத்த மூன்று கட்டங்களில் நீதிமானாக்கப்படுதல், பரி சுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பவைகளால் சபை வெளியே வருகின்றது. பின்பு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம் தேவன் மனிதனுக்குள் வாசம் செய்து நம்மிடையே வெளிப்படு கிறார். அவன் அந்திக்கிறிஸ்துவாகவும் கள்ளத்தீர்க்கதரிசியாகவும், மிரு கமாகவும் இருளின் காலங்களில் இருந்து வந்து, இவ்விதம் அவன் நிலை தாழ்ந்து கொண்டே போகின்றது. ஆனால் உண்மையான சபையைச் சேர்ந்த விசுவாசியோ இருளின் காலங்களிலிருந்து வெளிவந்து, நீதிமா னாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பவைகளின் வழியாக கடந்துசென்று, வார்த்தை அவனுக்குள் குடி கொண்டவனாய் வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறான். ஊ. ஊம். நீங்கள் அதைக் காண்கிறீர்களா? அவன் கீழே செல்கிறான். சபை மேலே செல்கிறது. பாருங்கள்? ஓ, இது மிகவும் பூரணமாயும் அழகாகவும் இருக்கிறதல்லவா? இது எனக்கு அதிகப் பிரியம். 103குதிரை சவாரி செய்பவன் ஒரே ஒருவன்தான். ஆனால் அவன் ஊழியம் வித்தியாசமான கட்டங்களை அடைகின்றன. முதலாம் கட்டத்தில் அவன் வெள்ளைக்குதிரையின் மேலிருக் கிறான். அப்பொழுது அவன் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாயிருக்கும் அந்திக்கிறிஸ்துவின் போதனைகளைப் போதிக்கிறவனாக மாத்திரம் இருக்கிறான். இப்பொழுது, முதலாம் கட்டத்தில் அவன் அந்திக்கிறிஸ்துவின் ஆவியாக அதன் தன்மையுடன் வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்து, தன் போதனைகளை சபைக்குப் போதிக்கிறான். அது குற்றமற்ற தீங்கற்ற ஒன்றாய் காணப்படுகிறது. அவ்விதமாகவே சாத்தான் நுழை வான். ஓ, அவன் தந்திரமுள்ள ஒருவன். 104அவன் ஏவாளிடம், 'நீ ஞானத்தைத் தேடிக் கொண்டிருக்கிறாய். நன்மை தீமை எதுவென்று அறியாமல் நீ இருக்கிறாய்' என்றான். மேலும் அவன், “உன் கண்கள் திறக்கப்பட்டால், இவைகளை நீ அறிந்துகொள்ள முடியும். இந்தக் கனி இன்பமானதாய் இருக்கிறது. இது நல்லது. இது பார்வைக்கு மிகவும் அருமையானதாயிருக்கிறது. அதை இப்பொழுது நீ புசிக்கவேண்டும். அது அருமையானதா, அல்லவா என்று உனக்குத் தெரியாது அல்லவா?'' என்றான். அவன் ஏவாளிடம், 'நீ ஞானத்தைத் தேடிக் கொண்டிருக்கிறாய். நன்மை தீமை எதுவென்று அறியாமல் நீ இருக்கிறாய்' என்றான். மேலும் அவன், “உன் கண்கள் திறக்கப்பட்டால், இவைகளை நீ அறிந்துகொள்ள முடியும். இந்தக் கனி இன்பமானதாய் இருக்கிறது. இது நல்லது. இது பார்வைக்கு மிகவும் அருமையானதாயிருக்கிறது. அதை இப்பொழுது நீ புசிக்கவேண்டும். அது அருமையானதா, அல்லவா என்று உனக்குத் தெரியாது அல்லவா?'' என்றான். “அவள், இல்லை என்னால் முடியாது.'' தேவன் அதைப் புசிக்க வேண்டாமென்று கட்டளையிட்டிருக்கிறார். “ஆனால், ஓ, அப்படியா, எனக்குத் தெரியும், ஆனால்...'' ''தேவன் சொன்னார். நாங்கள் மரித்துப்போவோம்'' ஆனால் “அவர் நிச்சயமாக அவ்விதம் செய்ய மாட்டார்'' என்று சாத்தான் கூறினான். பாருங்கள்? அவன் மிகவும் இனிமையாக ஏவாளிடம் பேசினான். அது என்ன விளைவித்தது என்று பாருங்கள். அதேப்போன்று, ஆதிகால சபையில், அந்திக்கிறிஸ்துவின் ஆவி எழும்பி, நிக்கொலாய் போதனைகளை அளித்தது என்பதை கவனியுங்கள். நிக்கொலாய் என்பதற்கு 'சபையார் மேல் ஜெயங்கொள்ளுதல்' என்று அர்த்தம். 'பரிசுத்த மனிதன்' என்னும் ஒருவனைச் சபையின் தலைவனாக ஏற்படுத்துதல். ''நல்லது, நமக்கு ஐக்கியம் மிகவும் அவசியமாயுள்ளது. நாமெல்லாரும் சிதறியிருக்கிறோம். யார் யார் எங்கெங்கே இருக்கிறார் கள் என்று நாம் அறிந்துகொள்ள முடிவதில்லை. எனவே, நாம் ஒன்றாக இணைந்து ஒரு ஸ்தாபனம் ஏற்படுத்தி வித்தியாசமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். பாருங்கள், நாம் சென்று, இணைந்து, அதன் மூலம் நாம் ஒரு விடுதியை (lodge) உண்டாக்கி கொள்ள வேண்டும்.'' அது அவ்வித மாகத்தான் இருக்கிறது. அது மிகவும் உண்மையாகும். மெதோடிஸ்ட் சபை என்னும் ஒரு கிறிஸ்தவ சபை இருக்க முடியாது. அது சபையல்ல. அது ஒரு விடுதி. அவ்விதமாகவே பாப்டிஸ்ட் சபை என்று அழைக்கப்படுவது ஒரு சபையன்று, அது ஒரு விடுதி. 105ஒரே ஒரு சபைதான் உண்டு. அது இயேசு கிறிஸ்துவின் மறைவான (mystical) சரீரமாயிருக்கிறது. அதில் நீங்கள் முன்குறித்தலினால் பிறக்கவேண்டும். அது சரி. ''பிதாவானவர் எனக்குக் கொடுத்த யாவும் என்னிடத்தில் வரும். பிதாவானவர் ஒருவனை அழைக்காவிட்டால் அவன் வர முடியாது. பிதாவானவர் கொடுத்த எல்லாம் என்னிடத்தில் வரும்'' என்று இயேசு கூறியுள்ளார். ஆகவே, அது அவ்விதமாகும். கடைசி நபர் உட்பிரவேசிக்கும் வரை ஆட்டுக்குட்டியானவர் அங்கு பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். கடைசி நபர் உட்பிரவேசித்து விட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு, அவர் புறப்பட்டு சென்று தம் உடமைகளைப் பெற்றுக்கொள்கிறார். பாருங்கள்? அது அவ்வளவே. அவர் தமது சபையை தமது பிரஜைகளை வீட்டிற்கு அழைத்து வந்து, சத்துருவையும் அவனுடைய பிரஜைகளையும் அக்கினிக் கடலில் தள்ளுகிறார். பின்பு நாம் ஆயிரம் வருஷ அரசாட்சியில் பங்கு கொள்கிறோம். 106குதிரை சவாரி செய்பவன் ஒரே மனிதன் தான். முதலாம் கட்டத்தில் அவன் களங்கமற்றவனைப்போல காணப்படுகிறான். இரண் டாம் கட்டத்தில் இன்னும் சற்று முன்னேறுகிறான். பின்னர் அவனுக்குக் ''கிரீடம் சூட்டப்படுகிறது'' என்பதாக வேதம் உரைக்கிறது. அவர்கள் ஒரு பராக்கிரமசாலிக்கு (Superman) கிரீடம் சூட்டுகின்றனர். பாருங்கள்? அவனுக்கு கிரீடம் சூட்டினர். அவனைப் 'போப்பாண்டவர்' என்று வேதம் அழைப்பதில்லை. 'கள்ளத் தீர்க்கதரிசி'யென்றுதான் வேதம் அழைக்கிறது. ஏன்? ஆம். அவன் அந்திக்கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டவனாய் தேவனுடைய மூல வார்த்தைக்கு விரோதமாய்ப் பிரசங்கிப்பதனால் அவன் கள்ளத் தீர்க்கதரிசியாகத்தான் இருக்கவேண்டும். மூல வார்த்தைக்கு விரோதமாய்ப் பிரசங்கிக்கிற எவனும் அந்திக்கிறிஸ்துவே. அது அவ்வித மாகவே இருந்தது. ஏனெனில் வார்த்தை தேவனாயிருக்கிறது. பாருங்கள், கிறிஸ்து. அது சரி. அதன் பின்னர் அவனுக்குக் கிரீடம் சூட்டப்படுகி றது என்று நாம் பார்க்கிறோம். தொடக்கத்தில் அவன் களங்கமற்றவனாக எவ்வித உதவியுமற்ற ஒரு சிறு ஆளாகக் காணப்படுகிறான். 107இப்பொழுது, ஆனால் நிசாயா மகாநாட்டில் கான்ஸ்டன்டைன் (Constantine) அரசன் அவனுக்கு எல்லா சொத்துக்களையும் கொடுத் தான். அதன் பின்பு அவன் என்ன செய்தான்? சாத்தான் தன் சிங்கா சனத்தையும் அதிகாரத்தையும் அவனுக்கு அளிக்கிறான். வேதம் அவ் வாறு கூறுவதை நாம் முன்பே படித்திருக்கிறோம். இப்பொழுது, இதற்கு முன்பிருந்ததும் இனி இருக்கப்போவதுமான அரசியல் எல்லாவற்றின்மேலும் பிசாசு ஆதிக்கம் வகிக்கிறான் என்று நாம் மத்தேயு 4:11-ல் பார்க்கிறோம். அரசியல் ஆதிக்கம் கொண்டிருக்கும் இவன் பின்பு சபையில் நுழையப் பார்க்கிறான். ஆகவே, சபையை ஏமாற்ற அவன் முனைகிறான். அவன் தன் பராக்கிரமசாலியை ஸ்தாபனத்திற்குள் நுழையச் செய்து, அவனைப் பிரதி குருவாக (Vicar) 'கிறிஸ்துவுக்குப் பதிலாக' என்று அர்த்தம் கொள்ளும் பட்டத்தால் - முடி சூட்டுகிறான். கிறிஸ்து தேவனுக்குப் பதிலாக கிரியை செய்தார். பாருங்கள்? இந்த மனிதன் தேவனுக்குப் பதிலாக இருப்பவனாகக் கருதப்படுகிறான். பாருங்கள்? அவன் கிறிஸ்துவின் கீழ் பிரதிகுருவாக நியமிக்கப்பட்டுள்ளதாக எண்ணப் படுகிறான். 108இப்பொழுது, இப்பொழுது, அவன் அதன்பின் என்ன செய்கிறான்? சாத்தான், அவன் ஏற்கனவே கொண்டிருந்த அரசியல் ஆதிக்கத்தையும், முடி சூட்டப்பட்டதினால் பெற்ற மதசம்பந்தமான ஆதிக்கத்தையும் ஒன் றாக இணைக்கிறான். ஆகவே பிறகு நரகத்தின் மேலும் அவன் ஆதிக்கம் கொண்டிருப் பதற்காக மற்றொரு கிரீடத்தை உண்டாக்கிக் கொண்டான், ஜனங்கள் போதிய பணம் கொடுத்தால், அவர்களை அவன் நரகத்திலிருந்து விடுவிப்பானாம். பாருங்கள்? இப்பொழுது அவள் பரலோகத்தின்மேலும் அவன் அழைக்கப்பட விரும்புவதின்படியே பாவ விமோசன ஸ்தானத்தின் மேலும் (Purgatory) பிரதிகுருவாகக் கருதப்படுகிறான். பாவ விமோசன ஸ்தானம் என்பது வேதத்தில் காணப்படுவதில்லை. அவனாக அதை உண்டாக்கிக் கொண்டான். பாருங்கள்? அவன் முடிவில்லாத பாதாளத்தி லிருந்து ஏறிவருவதாக வேதம் சொல்லுகிறது. அவன் அதே வழியில் மறுபடியும் சென்று நாசமடைவான். ஆனால் இப்பொழுது அவன் பூலோகத்தில் ஆளுகை செய்கிறான். 109இப்பொழுது, அவனுக்குக் கொடுக்கப்பட்டது என்ன? முதலில் அவனிடம் ஒரு வில் இருந்தது. ஆனால் அவனிடம் அம்புகள் இல்லை. இப்பொழுது அவன் கையில் ஒரு பெரிய பட்டயம் இருப்பதால் அவன் ஏதாவது ஒன்றைச் செய்ய முடியும். அவன் வெள்ளைக் குதிரையிலிருந்து இறங்கி ஒரு சிவப்பு குதிரையின் மேலேறுகிறான்.- இரத்தம். இரத்த சிவப்பு நிறமுள்ள குதிரையின்மேல் அவன் சவாரி செய்து செல்கிறான். ஓ, நிச்சயமாக. கொல்வதற்கென்று அவனுக்கு மிகுந்த வல்லமையும், பெரிய பட்டயமும் கொடுக்கப்பட்டது. அப்பொழுது அவன் இரத்த சிவப்பு நிறமுள்ள குதிரையின் மேல் சவாரி செய்கிறான். நேற்று இரவு உடைக்கப்பட்ட இரண்டாம் முத்திரையில் அவன் பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துப் போட்டானென்றும், ஜனங்கள் ஒருவரையொருவர் கொன்றனர் என்றும் நாம் பார்த்தோம். ஹிப்போ நாட்டைச்சேர்ந்த பரி. அகஸ்டின் நாட்கள் முதற்கொண்டு 1580ம் வரு டம் வரை 6,80,00,000 பிராடெஸ்டெண்டுகள் இரத்த சாட்சிகளாக மரித்துள்ளனர் என்று ரோமன் கத்தோலிக்க சபையின் இரத்த சாட்சிகளின் பட்டியலே கூறுகின்றது. ஸ்மக்கர் (Schmucker) என்பவர் எழுதிய 'மகிமையுள்ள சீர்திருத்தம்' (Glorious Reform) என்றும் புத்தகத்தில் இது காணப்படுகின்றது. இப்பொழுது, இரத்த சாட்சிகளின் பட்டியலில் 6, 80,00,000. அவர்களுடைய பரிசுத்தவான்கள் என்று அழைக்கப்பட் டவர்களில் ஒருவன், ரோம சபையின் கொள்கைகளுடன் இணங்காதவன் - மதத்துரோகியாகக் கருதப்பட்டு கொலை செய்யப்படவேண்டு மென்ற வெளிப்பாட்டைப் பெற்றபோது, அவர்கள் ஜனங்களைக் கொல்லத் தொடங்கினர். அவன் சிவப்பு குதிரையின் மேலேறி, இரத்தம் சிந்திக் கொண்டே சவாரி செய்தான். ஓ! 110இப்பொழுது அவனுக்கு மிகுந்த வல்லமை வருகின்றது. அவன் ஆதிக்கம் பெற்று, பரலோகத்தின் பிரதிகுருவாக நியமிக்கப்பட்டு, தேவனைப்போல் ஆராதிக்கப்பட்டான். அவனுக்கு ஒரு கிரீடம் அளிக்கப் பட்டு, சபையையும் அரசாங்கத்தையும் அவன் ஒன்றாக இணைத்து, பூமியின் மேல் ஆளுகை செய்தான். பாவ விமோசன ஸ்தானத்திலிருந்து தன் ஜெபத்தினால் ஆத்துமாக்களை விடுவிப்பானாம். பூமியில் அவன் தேவனுக்குப் பதிலாக தேவனைப் போலவே இருந்தான். அவன் கட்டளைக்குக் கீழ்ப்படியாத எவரையும் கொல்வதற்கு அவன் மிகுந்த வல்லமை பெற்றிருந்தான். யார் அவனுக்கு விரோதமாக ஏதாவதொன்றைக் கூற முடியும்? அவன் சபைக்குத் தலைவனாக இருக்கிறபடியால், சபை அவனுக்கு விரோதமாக ஒன்றும் கூற முடியாது. அவ்வாறே, அரசாங்கத்தின் தலைவனாக அவன் இருக்கும் காரணத்தால், அரசாங்கமும் ஒன்றும் கூற முடியாது. ஆகவே, அவர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர். சகோதரனே, சிறு சிறு சபைகள் யாவும் உடைக்கப்பட்டு, அவர்கள் கொல்லப்பட்டனர், பாருங்கள்? சிங்கங்களுக்கு இரையாயினர். வலுசர்ப்பமாகிய ரோமாபுரி அவனுக்குத் தன் சிங்காசனத்தையும் அதிகாரத் தையும் கொடுத்ததாக வேதம் கூறுகிறது. பாருங்கள்? ஆகவே, அவன் குதிரையை இரத்த வெள்ளத்தின் வழியாக ஓட்டினதன் காரணத்தால் அதன் நிறம் சிவப்பாக மாறியது. 111இப்பொழுது யோவான் அவனை கறுப்புக் குதிரையின்மேல் காண் கிறான். அவன் வேறொன்றிற்கு மாற்றிக்கொண்டான். எனக்கு வெளிப்பாடு அளிக்கப்பட்ட விதத்தில் நான் அதை உங் களுக்கு எடுத்துக் கூறவேண்டும். இது வேத வாக்கியங்களுடன் பொருந் தாவிடில் இந்த வெளிப்பாட்டை தேவன் எனக்களிக்கவில்லையென்று அர்த்தம். பாருங்கள்? வேதவாக்கியங்கள் யாவும், சிறப்பான ஒன்றாய் உள்ளன. வேத வாக்கியங்கள் மற்ற வேதவாக்கியங்களுடன் இணங்க வேண்டும். வேதவாக்கியத்திற்கு முரணான ஏதாவதொன்று இருக்கிற தென்றால்... கர்த்தருடைய தூதன் வேத ஆதாரமாக என்னிடம் ஒன்றைக் கூறாவிடில், நான் அவனை நம்பவே மாட்டேன். அன்று சிக்காகோவில் நூற்றுக்கணக்கான போதகர்கள் மத்தியில் நான் நின்று கொண்டிருந்தேன்..... யாராவது அந்தக் கூட்டத்தில் இருந் தீர்களா? நிச்சயமாக. அப்பொழுது நான் அவர்களிடம், “இப்பொழுது, ஏதோ உள்ளதுபோல நீங்கள் அனைவரும் பேசுகிறீர்கள். ஏதேனும் ஒன்றைக் குறித்து, என்னை குறுக்கு விசாரணை செய்ய நினைத்தீர்கள்.'' என்றேன். ஏறக்குறைய இப்பொழுதுள்ள இந்த அறையைப் போல அது இருந்தது. நான், ”அது என்ன? எனக்கு விரோதமாக நீங்கள் பெற் றிருப்பது என்ன? நீங்கள் ஒவ்வொருவரும் எந்தெந்த இடத்தில் நிற் பீர்கள் என்றும், நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த அறையில் அந்தக் கூட்டம் நடைப்பெறப் போவதில்லையென்றும் மூன்று நாட்களுக்கு முன்னமே பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தினார்'' என்றேன். 'அது சரியா என்று இங்குள்ள கார்ல் அவர்களைக் கேளுங்கள்,'' என்றேன். சகோதரன் ஹாங்க், மற்றையோரும் அங்கிருந்தனர். “அது உண்மை ''. அதைக் கேட்பதற்காக, அவர்கள் அனைவரும் அங்கே யிருந்தனர். 112நான், 'என் போதனைகளுக்கு முரண்பட்ட கருத்துக்களை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். கேள்விகள் பல கேட்டு என்னை மடக்கவேண்டு மென்று நீங்கள் மனதில் எண்ணம் கொண்டிருக்கிறீர்கள். உங்களில் யாராவது ஒருவர் வேதாகமத்துடன் என் பக்கத்தில் வந்து என் போதகம் தவறென்று நிரூபிக்க உங்களை அழைக்கிறேன்' என்றேன். அப்பொழுது எல்லோரும் மிகவும் அமைதியாயிருந்தனர். அப்பொழுது நான், 'உங்களுக்கு என்ன நேரிட்டது? தேவனுடைய வார்த்தைக்கு விரோத மாய் உங்களால் நிற்க முடியாதென்று நீங்கள் அறிந்துகொண்டீர்களென்றால், எனக்குப் பின்னால் சென்றுவிடுங்கள்' என்று சொன்னேன். 'வேத படிப்பில் டாக்டர் பட்டம் பெற்று ஒருவரையொருவர் டாக்டர், டாக்டர் என்று அறிமுகப்படுத்திக் கொள்பவர்களே, நான் எந்த வேதபள்ளியிலும் படித்தது கிடையாது. உங்கள் வேதாகமத்துடன் என்பக்கத்தில் வந்து, சர்ப்பத்தின் வித்து, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் இன்னும் நான் போதிக்கின்ற மற்றவற்றையும் தவறென்று நிரூபியுங்கள்' என்றேன். அவர்களில் ஒருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நான் இதுவரை கண்டதிலேயே மிகவும் அமைதியான குழுவாக அது இருந்தது. உங்களில் அநேகருக்கு அச்சம்பவம் நினை விருக்கும். 113எனக்கு ஒன்றும் தெரியாதென்று அவர்கள் காகத்தைப்போல கரைகின்றனர் (crow). நான் யாருடைய விவகாரத்திலும் தலையிடுவது கிடையாது. ஆனால் ஏதாவது ஒரு தர்க்கத்தில் அவர்கள் என்னை சிக்க வைக்க விரும்பினால்... நானாகவே அங்கு சென்றிருக்கமாட்டேன். ஆனால் பரிசுத்த ஆவியானவர் என்னிடம், 'அங்கே போ. நான் உன்னோடு கூட இருப்பேன்' என்றார். அந்தக் கூட்டம் நிகழும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்னரே சகோ. கார்ல்ஸன், சகோ. டாமிஹிக்ஸ் இவர்கள் நான் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் அங்கே அமர்ந்துள்ளனர். நான் அவர்களிடம் சென்று, “கூட்டத்திற்கென்று நீங்கள் ஆயத்தம் செய்துள்ள அந்த ஸ்தலத்தை ரத்து செய்ய நேரிடும்'' என்று கூறினேன். புயல் அடித்துக் கொண்டிருந்த ஓர் இரவு. அன்று, நான் அப் பொழுது கூட்டங்கள் நடத்திக்கொண்டிருந்த தருணம், அவர் என்னிடம், “அந்த மூன்றாம் வரிசை கட்டிடத்திலுள்ள ஜன்னலின் அருகே நின்று கொள்” என்று கூறினார். நானும் அவ்விதமே செய்தேன். நான் இவ்விதமாகப் பார்த்தேன். 114அப்பொழுது அவர் என்னிடம் அவர்கள் உனக்கு கண்ணியை அமைத்திருக்கிறார்கள். சிக்காகோவின் போதகக் குழுவில் உன்னைப் பேச அழைப்பார்கள். நீ போதித்த என் வார்த்தையின் போதனைகளில் உன் பேரில் குற்றம் கண்டுபிடிக்க உனக்குக் கண்ணிவைக்க வேண்டுமென்று அவர்கள் எண்ணம் கொண்டுள்ளனர்' என்றார். மேலும் அவர், 'கூட்டத்தை நடத்துவதற்கென்று ஏற்பாடு செய் யப்பட்டிருக்கும் அந்த ஸ்தலம் அவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. அவர்கள் பழுப்பு நிறமான' வேறொரு ஸ்தலத்தை ஆயத்தம் செய்ய நேரிடும்' என்று சொல்லி, 'அந்த ஸ்தலத்தைப் பார்' என்று அதை தரிசனத்தில் எனக்குக் காண்பித்தார். அந்தக் கூட்டம் நடைபெறுவதை நான் தரிசனத்தில் முன்கூட்டியே கண்டேன். ஒரு மூலையில் நான் அமர்ந்திருந்தேன். அப்போதகர்கள் கூட்டத்தில் எங்ஙனம் உட்கார்ந்திருந்தனரோ அதேவிதமாக உட்கார்ந்திருப்பதை நான் தரிசனத்தில் கண்டேன். அவர் சொன்னார்... 115அப்பொழுது நான் கர்த்தரிடம், 'அவர்கள் எனக்குக் கண்ணி வைக்க விருப்பங் கொண்டிருந்தால், நான் அங்கு போகாமலிருப்பது நல்லது. ஏனெனில் நான் அவர்கள் மனதைப் புண்படுத்தவோ அல்லது தவறிழைக்கவோ விரும்பவில்லை' என்று சொன்னேன். அவரோ, 'நீ அங்கு செல், நான் உன்னுடனே கூட இருப்பேன்' என்றார், அவர் அந்த வார்த்தையை நிறைவேற்றினார். அது உண்மை . இப்பொழுது இங்கு உட்கார்ந்திருப்பவரில் சிலர் அந்தக் கூட்டத்தில் என்ன நேர்ந்ததென்பதற்கு சாட்சிகளாயிருக்கிறீர்கள். அது உண்மையென்று அவர்கள் அறிவார்கள். அது சரி. நல்லது. அந்த சம்பவம் பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாக்களும் இங்கேயும்கூட இருக் கின்றன. 116இப்பொழுது, இந்த மூன்றாம் முத்திரையின் இரகசியம் இதுவே. இன்று விடியற்காலையில் அது எனக்கு வெளியானபோது நான் துரித மாக வேதவாக்கியங்களை ஆராயத் தொடங்கினேன். அது உண்மையா கவே இருந்தது. எனவே, இதுவரை மூன்று முத்திரைகளும் முற்றிலுமாக இயற்கைக்கு மேம்பட்ட விதத்தில் வெளிப்படுத்தப்பட்டன. ஆம். கறுப்புக் குதிரை இரகசியத்தைக் குறித்து எனக்குக் கிடைத்த வெளிப்பாடு இதுவேயாகும். அவன் இருளின் காலங்களில் சவாரி செய்து கொண்டு செல்கி றான். கறுப்பு குதிரை இருளின் காலங்களுக்கு அறிகுறியாகும். மீதமாக விடப்பட்டிருந்த உண்மையான விசுவாசிகளுக்கு அது நள்ளிரவு போன்ற காலம். இருளின் காலங்களில் உண்டாயிருந்த இடையிலுள்ள சபைக் காலமாகிய சபையைப் பார்த்து அவர், 'உனக்குக் கொஞ்சம் பெலனிருக்கிறது'' என்கிறார் என்பதைக் கவனியுங்கள். உண்மையான விசுவாசிக்கு அது நள்ளிரவாயிருந்தது. இப்பொழுது கவனியுங்கள். உண்மையான சபை அப்பொழுது நம்பிக்கையற்ற நிலையில் இருந்தது, ஏனெனில் இவன் சபையின் மேலும் அரசாங்கத்தின் மேலும் அதிகாரம் பெற்றிருந்தான். அவர்களால் என்ன செய்ய முடியும்! கத்தோலிக்க மார்க்கம் இவ்வாறு சபையின் பேரிலும் அரசாங்கத்தின் பேரிலும் அதிகாரம் கொண்டிருந்ததால், அந்த மார்க்கத்துடன் இணங்காதவர் அனைவரும் கொலை செய்யப்பட்டனர். ஆகவே தான் அவன் கறுப்பு குதிரையின்மேல் காணப்பட்டான். அவன் செய்த அந்தகாரக் காரியத்தைக் கவனியுங்கள். பாருங்கள்? அப்பொழுது உங்களால் புரிந்து கொள்ள முடியும். சபையின் சரித்திரத்தை நீங்கள் அறிந் திருந்தால் அவன் செய்த அந்தகாரக் கிரியைகள் அனைத்தையும் நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள். அதை அறிந்து கொள்வதற்கு சரித்திரம் அறிய வேண்டுமென்னும் அவசியமும் கிடையாது. இப்பொழுது கவனியுங்கள், சபை எல்லா நம்பிக்கையும் அற்ற நிலையில் இருந்தது - அது தான் அவன் ஏறியிருந்த கறுப்புக் குதிரையை எடுத்துக்காட்டுகின்றது. இப்பொழுது அவன் முதலில் வெள்ளைக் குதிரையின் மேலேறி யிருந்தான். தந்திரமுள்ளவன். 117அதன் பின்பு சமாதானத்தை எடுத்துப்போட அவனுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு லட்சக்கணக்கானவரை அவன் கொன்று போட் டான். அவன் கடைசி வரையிலும் அதையே செய்யும்படியாக இருந்தான். அவன் இப்பொழுதும் அதைச் செய்து கொண்டு வருகிறான். பாருங்கள்? இப்பொழுது அவன் கறுப்பு குதிரையின் மேலேறி சவாரி செய் கிறான். இருளின் காலங்கள்? சபை அதிகாரம் பெற்றவுடன், நூற்றுக்கணக்கான வருடங்களாக அது அடக்கு முறையைக் கையாண்டு எல்லாவற்றையும் நசுக்கிப் போட்டது, அதைத்தான் கறுப்பு குதிரை குறிக்கின்றது. உங்களில் எத்தனைபேர் அதை அறிவீர்கள்? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி) நிச்சயமாக, அதுதான் இருளின் காலங்களாகும். அதுதான், இருளின் காலத்திற்கு அடையாளமாக இருந்த கறுப்புக் குதிரையாகும். இப்பொழுது, எல்லா நம்பிக்கையும் போயிற்று. அச்சிறு விசுவாசிகளுக்கு எல்லாம் இருளாய்க் காணப்பட்டது. இப்பொழுது, அதன் காரணமாகவே, கறுப்புக்குதிரை என்று அடையாளமாக அழைக்கப்பட்டது. 118“அவன் கையில் தராசு இருந்தது' என்பதை நீங்கள் பாருங்கள்? ''ஒரு பணத்துக்கு ஒரு படி கோதுமை, ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற் கோதுமை” என்னும் சத்தம் அப்பொழுது உண்டானது. பாருங்கள்? கோதுமையும் வாற்கோதுமையும் நாம் உயிர் வாழ்வதற்கு அவசிய மான பொருட்களாம். அவற்றிலிருந்துதான் ரொட்டியும், உணவுப் பொருள்களும் செய்யப்படுகின்றன. ஆனால் அவன் காசுக்கு அதை விற்கிறான். அதன் அர்த்தம் என்னவெனில், அவன் தன்னுடைய பிரஜை களுக்கு தான் அனுப்பிக் கொண்டிருக்கும் ஜீவனின் நம்பிக்கை யானதற்கு பணம் வசூலிப்பவன் என்பதாகும். அவன் அந்த காலத் திலேயே அவனுடைய பிரஜைகளிடமிருந்து ஜெபம் ஏறெடுப்பதற்கும் கூட அவன் காசு வாங்குகிறான், இன்றைக்கும் அவர்கள் மரித்த வர்களின் ஆத்துமாக்களுக்காக நொவினா (Novena) என்பதை ஏறெடுத்து அதற்குக்காசு வாங்குகின்றனர். ஏனெனில் அவன் என்ன செய்துக்கொண்டிருக்கிறான்? அவன் உலகத்தின் செல்வமனைத்தையும் கைப்பற்றி, “ஒரு பணத்துக்கு ஒரு படி கோதுமையும் ஒரு பணத்துக்கு மூன்று படி வாற்கோதுமையும்'' தராசில் நிறுத்தித் தருகிறான். கறுப்புக் குதிரையின் மேலிருக்கிறவன் தன் பிரஜைகளிடமிருந்து பணத்தை அபகரிக்கிறான். உலகத்தின் செல் வமனைத்தையும் அவன் பெற்றிருப்பதாக வேதம் கூறுகின்றது. நேற்று இரவு நான் ருஷியா, மற்றெல்லாவற்றையும் குறித்து பேசியதுபோன்று, அவர்கள் ஜனங்களிலிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக் கொள்கின்றனர். 119இப்பொழுது கவனியுங்கள், இன்றைய சபைகளில் காணப்படும் பணம் எங்கிருந்து வந்தது என்பதை இப்பொழுது அறிகிறீர்களா? அதனின்று விலகியோடுங்கள். லட்சக்கணக்கான டாலர்கள் செலவழித்து ஒரு பெரிய ஸ்தாபனம் உண்டாக்குதல்.... அவள் தாய் யாரென்பதை அறிந்துகொண்டீர்களா? கர்த்தாவே, உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஓ, என்னே! நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆம் ஐயா, அது உண்மை . அது தேவனுடைய பெரிய கிருபை. அது அவ்வளவே. சரி. சரி. அது நள்ளிரவின் காலமாயிருந்தது. இப்பொழுது உங்களுக்குப் புரிகின்றதா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் -ஆசி) அவன் அவ்விதமான ஜீவியத்திற்கு காசு வாங்குகின்றான், அதுதான் அவனுடைய பார்லியும், மற்றவையும். பார்லியும் வாற்கோதுமையும் இயற்கையாக வளரும் தானியங்கள். அவர்கள் ஆவிக்குரிய ஜீவியத்தைக் கடை பிடிக்கவில்லை. அது பார்லி ஆகும், பாருங்கள், பார்லி ரொட்டியும், வாற்கோதுமை ரொட்டியுமாகும். அவன் தன் பிரஜைகளுக்கு அளித்திருந்த ஜீவியத்திற்குப் பணத்தை வசூலிக்கிறான், ஜனங்கள் பாவவிமோ சன ஸ்தானத்திலிருந்து (Purgatory) வெளியேறுவதற்கு குருக்கள் ஏறெடுக்கும் ஜெபத்திற்கு அவன் ஜனங்களிடம் காசு வசூலிக்கிறான். இதை நான் சபையின் சரித்திரத்தில் வாசித்தேன். மரித்தவர்களின் ஆத்துமாக் களுக்காக நொவினா (Novena) என்று ஒரு வகை தவசு ஏறெடுக்கின் றனர். அதற்கென பணம் செலுத்தப்பட வேண்டும். உலகத்தின் செல்வத்தை அவனுக்காக அவன் சபைக்குள் கொண்டு வருகிறான். அவன் இன்னும் சவாரி செய்து கொண்டிருக்கிறான். ஓ, நிச்சயமாக. அவன் இன்னும் சவாரி செய்துகொண்டிருக்கிறான். ஆம், ஐயா. 120இந்த முத்திரையின் முக்கியமான பாகத்தை சற்று கவனியுங்கள். 'எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே.' “அதில் சிறிது மாத்திரமே விடப்பட்டுள்ளது. அதைத் தொடாதே” இப்பொழுது, எண்ணெய் பரிசுத்த ஆவிக்கு அடையாளமாயி ருக்கிறது. உங்களுக்கு வேண்டுமானால் சில வசனங்களை நான் உங்க ளுக்குத் தருகிறேன். லேவியராகமம் 8:12-ல் ஆரோன் ஆசாரிப்புக் கூடா ரத்துக்குள் பிரவேசிக்கும் முன்பு எண்ணெயால் அபிஷேகம் செய்யப் படுகிறான். சகரியா 4:12-ல் குழாய்களின் வழியாக இறங்கும் எண் ணெய் தேவனுடைய ஆவிக்கு ஒப்பிடப்படுகிறது. மத்தேயு 25:3-4-ல் புத்தியில்லாத கன்னிகைகளிடம் எண்ணெய் இல்லையென்றும் புத்தி யுள்ள கன்னிகைகளிடம் எண்ணெய் இருந்தது என்றும் கூறப்படு கிறது- பரிசுத்த ஆவியின் நிறைவு. ஆகவே எண்ணெய் பரிசுத்த ஆவிக்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறது. ஓ மகிமை! (சகோ.பிரான்ஹாம் தன் கரங்களை ஒருமுறை தட்டுகிறார் -ஆசி) உங்களுக்குப் புரிகிறதா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர்.) இப்பொழுது, எண்ணெய் ஆவிக்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறது. சரி. 121எண்ணெய் பரிசுத்த ஆவிக்கும், திராட்சரசம் வெளிப்பாடு அளிக் கும் ஊக்கத்திற்கும் (Stimulation of revelation) அடையாளமாய் உள் ளன. ஓ, எனக்கு எல்லாவிடங்களிலும் ஓடவேண்டுமென்ற உணர்ச்சி இப்பொழுது ஏற்படுகின்றது. கர்த்தர் இதை எனக்கு வெளிப்படுத்தின போது, உணர்ச்சி மிகுதியில் அக்கம் பக்கத்திலுள்ளவர்களை நான் தூக்கத்தினின்று எழுப்பாதது ஆச்சரியம்தான். பாருங்கள்? வெளிப் பாடு அளிக்கும் ஊக்கம். வேதத்தில் எண்ணெயும் திராட்சரசமும் எப்பொழுதும் ஒருங்கே கூறப்பட்டுள்ளன. வேதத்தின் ஒத்து வாக்கிய சங்கிரகத்தை (Concordance) நான் பார்த்தபோது, எண்ணெயும் திராட்சரசமும் எப் பொழுதும் ஒன்று சேர்த்து கூறப்பட்டுள்ள அநேக வரிகளை அதில் கண் டேன். பாருங்கள்? 122வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தையின் உண்மையான அர்த்தம் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றுள்ள தம் பரிசுத்தவான்களுக்கு வெளிப்படும்போது, அது அவர்களை ஊக்குவிக் கின்றது. திராட்சரத்தை ஒருவன் பானம் பண்ணினால், அது அவனுக்கு ஊக்கமளிக்கின்றது. மகிமை! இப்பொழுது நான் ஊக்குவிக்கப்பட்டு, சந்தோஷ மிகுதியினால் சத்தமிடவேண்டுமென்று எனக்குத் தோன்று கிறது. பாருங்கள்? திராட்சரசம் குடிக்கும் ஒருவன் எவ்விதம் ஊக்கம் பெற்று அசாதாரணமான விதத்தில் நடக்கின்றானோ, அதேவிதமாக தேவனுடைய ஆவியைப் பெற்ற விசுவாசிகளுக்கு தேவனுடைய சத்தி யம் வெளிப்படும்போது, அவர்களும் ஊக்குவிக்கப்பட்டு அசாதாரண விதத்தில் நடக்கத் தலைப்படுகின்றனர். சரி. மகிமை! (சபையார் களிகூறுகின்றனர் - ஆசி) பாருங்கள், இன்றைக்கும் அதுவே அவர்களி டையே சம்பவிக்கின்றது. அது சரி. அது அவர்களை அசாதாரணமான விதத்தில் நடக்கச் செய்கிறது. 123இப்பொழுது இதற்கு வேறு ஆதாரம் வேண்டுமானால் அப் போஸ்தலர் 2-ம் அதிகாரம் படியுங்கள். அவர்கள் எங்கிருந்தனர்? அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குத்தத்தம் அவர்கள் பெற்றிருந்தனர். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவி அவர்கள் மேல் ஊற்றப் பட்டு, அதைக் குறித்த வேத வாக்கியம் நிறைவேறினபோது.... இப் பொழுது பாருங்கள். “இப்பொழுது, காத்திருப்போம், நம் ஊழியத்திற்காக இங்கே நம்மைக் காத்திருக்கும்படி அவர் சொன்னார்,'' என்று அவர்கள் சொல்லியிருப்பார்களானால்... பரிசுத்த ஆவிக்காக அவர்கள் காத்திருந்து எட்டு நாள் கழித்து மாற்கு மத்தேயுவை நோக்கி, 'நாம் ஏற்கனவே அதை பெற்றுக் கொண்டு விட்டோம், நண்பர்களே அப்படித்தானே? இன்னும் நாம் ஏன் காத்துக் கொண்டிருக்கவேண்டும்? நாம் இப்பொழுதே சென்று ஊழியத்தைத் தொடங்க வேண்டும். அவர் இங்கு காத்திருக்கும்படி சொன்னார். நாம் அவ்விதம் கார்த்திருந்து எட்டு நாட்களாயிற்று' என்று சொல்லியிருந்தால் என்னவாயிருக்கும்? அவர்கள் ஒருக்கால், 'இன் னும் ஒரு நாள்கூட நாம் காத்துப் பார்ப்போம்' என்று சொல்லியிருப் பார்கள், ''நல்லது, நாம் இன்னும் ஒரு நாள் காத்திருப்போம்.'' ஒன்பது நாட்கள் கழிந்தன. அதன்பின் மாற்கு வருகிறான் அல்லது யோவான் ஒருக்கால் மற்றவர்களைப் பார்த்து, 'இனி நாம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லையென்று நினைக்கிறேன். பரிசுத்த ஆவியை நாம் ஏற்கனவே பெற்றுக் கொண்டு விட்டோம் என்று எண்ணுகிறேன்' என்று சொல்லியிருக்கக்கூடும். 124அப்பொழுது சீமோனை என்னால் காணமுடிகின்றது. ஏனெனில் அவனிடம் திறவுகோல்கள் இருந்தன என்று அறிவீர்கள். அவன் சற்று பொருங்கள், வேதவாக்கியம் என்ன சொல்கிறதென்று கவனிப்போம். இவ்வளவு நாட்கள் காத்திருக்கவேண்டுமென்று அவர் திட்டவட்டமாய் கூறவில்லை. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவி உங்களி டத்தில் வரும்வரை, யோவேலின் தீர்க்கதரிசனம் நிறைவேறும் வரை, ஏசாயாவின் தீர்க்கதரிசனம் உறுதிப்படுத்தும் வரை'' என்று கூறினார். 'பரியாச உதடுகளினாலும் அன்னிய பாஷையினாலும் இந்த ஜனத் தோடு பேசுவேன்; அதுவே அவர்கள் இளைப்பாறுதல்' என்னும் ஏசாயா வின் தீர்க்கதரிசனம் நிறைவேறும்வரை காத்திருங்கள் என்று கூறினார்.'' என்று சொல்லியிருப்பான். அதுவே அவர்கள் மேல் ஊற்றப்பட்ட திராட்சரசமாகும். வேதத்தில் திராட்சரசம் என்பது இளைப்பாறுதலைக் குறிக்கிறது. இது கர்த்தருடைய சமூகத்திலிருந்து வரும் இளைப்பாறுத லாகும். பாருங்கள்? அது இப்பொழுது வேதபூர்வமானதாக இருக்க வேண்டும். பாருங்கள்? ஆகவே, திராட்சரசமானது வெளிப்படுத்தலின் ஊக்குவிக்கப் படுதலின் அடையாளமாய் இருக்கின்றது. பரிசுத்த ஆவி அக்கினி மயமாக அவர்கள் மேல் விழுந்தபோது அது அவர்களை ஊக்குவித்து உணர்ச்சி பெறச் செய்தது. அவர்கள் குடித்து வெறித்திருக்கிறார்கள் என்று ஜனங்கள் சொல்லும் அளவிற்கு அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். ஆனால் இது வெளிப்பாட்டினால் உண்டான உணர்ச்சியாகும். தேவனால்... அது இங்கே இருக்கின்றது. தேவன் வாக்குத்தத்தம் பண் ணினது அவர்களுக்கு வெளிப்பட்டு அடையாளங்களினால் உறுதிப் படுத்தப்பட்டது. அவர்கள் அதைக் குறித்து மகிழ்ச்சி அடைந்தார்கள். தேவன் அதை வாக்குத்தத்தம் பண்ணினார். இங்கே அது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டது. ஆமென். ஆகவேதான் பேதுரு அங்கு எழுந்து நின்று, “இதற்கு இது அர்த்தம். இதை அதைக் குறிக்கிறது'' என்று தனக்குக் கிடைத்த வெளிப்பாட்டை ஜனங்களுக்கு எடுத்துரைத்தான். இன்று நாம் பெற்றுள்ள, நிரூபிக்கப்பட்டு வருகின்ற அதே அடையாளத்தைப்போல வெளிப்பாட்டினால் தூண்டப்படுதல். பாருங்கள்? அவர்கள் அதை உண்மையாக பெற்றவராய் இருந்தனர். 125ஆகையால்தான் பேதுரு அங்கு எழுந்து நின்று, 'யூதர்களே, எரு சலேமில் வாசம் பண்ணுகிற ஜனங்களே, எனக்குச் செவி கொடுங்கள், டாக்டர் பட்டம் பெற்ற மேதைகளே, நான் உங்களுக்கு சொல்லப் போவதை சற்றுக் கேளுங்கள்' என்றான். பாருங்கள்? ஓ, என்ன ஆச்சரியம்! வெளிப்பட்டது! வெளிப்பட்டது! அது உறுதிப்படுத்தப்பட்டதை அவர்கள் கண்டபோது அவர்கள் மிகவுமாய் ஊக்குவிக்கப்பட்டனர். எல்லாக் காலங்களிலும் அது போன்றே சம்பவிக்கின்றது. 126இக்காலத்திலும் தேவன் ஒன்றைச் செய்யப் போவதாக வாக்களித்துள்ளார் என்றும் இக்கடைசி நாட்களில் முத்திரைகளை உடைத்து இரகசியங்களை வெளிப்படுத்தப் போவதாக அவர் நமக்கு வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் என்பதையும் நான் காணும்போது! அந்த இரகசியங்களை அவர் வெளிப்படுத்துகையில் நான் அதைக் கண்டு, நான் அங்கு நின்று அது சம்பவிப்பதை நான் கவனிக்கும்பொழுது, அந்த மகிழ்ச்சியும், மகிமையும் உங்களால் அறிந்து கொள்ள முடியாது. அவர் கூறினது ஒன்றாகிலும் நிறைவேறாமல் இல்லையென்பதை நாம் தைரியமாக யாரிடமும் கூற முடியும். அவர் செய்வதாக வாக்குத்தத்தம் பண்ணினதைப் போலவே, கடைசி நாட்களுக்கென அளிக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தம் நிறைவேறுவதைக் காணும்போது என் இருதயம் சந்தோ ஷத்தினால் பொங்குகின்றது. அது இப்பொழுது வெளிப்பட்டு உறுதிப்படுவதை நான் காண்கிறேன். நான் அதிக பக்திவசப்படுவதாக சில சமயங்களில் உங்களிடம் கூறுவதுண்டு. அப்படியானால் வெளிப்பாட் டினால் நான் அதிக உணர்ச்சிவசப்பட்டிருக்கிறேன் என்பது அதன் அர்த்தம். வெளிப்பாட்டிலிருந்து வருகின்ற ஊக்குவித்தல்! சரி. 127அவர்கள் வெளிப்பாட்டினால் அதிகம் ஊக்குவிக்கப்பட்டு வாக்குத் தத்தம் பண்ணப்பட்டதை நிரூபித்துக் காண்பித்தனர். இப்பொழுது, ஓ, என்னே! தேவன் தம் வாக்குத்தத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தின போது, மகிழ்ச்சியினால் ஏற்பட்ட உணர்ச்சி அவர்களில் பொங்கி எழுந்ததினால், “அவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள்'' என்று ஜனங்கள் சொல்லத்தொடங்கினர், அவர் அதை வெளிப்படுத்தினது மாத்திரமல்ல, அதை நிரூபித்தும் காண்பித்தார். ஆகவேதான் நான் அடிக்கடி உங்களிடம், “ஒரு மனிதன் எதை வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அது தேவனால் நிரூபிக்கப்பட வேண்டும்” என்று கூறுவதுண்டு. இப்பொழுது “ஆவிக்குரியவன் என்றோ அல்லது தீர்க்கதரிசி என்றே சொல்லும் ஒருவன் உங்கள் நடுவில் இருந்தால், அவன் கர்த்தரின் நாமத்தினால் சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை, அவனுக்கு நீ எந்த கவனமும் செலுத்த வேண்டாம்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம். அவன் சொன்னது நிறைவேறினால், அது நான் கூறியதாகும். நான் அதில் இருக்கிறேன். அது நானே ஆகும் என்பதை நிரூபிக்கிறது'' என்று வேதம் உரைக்கிறது. 128ஆகவே, அப்பொழுது... அந்த சிறிய சமாரிய ஸ்திரீ மேசியா வரும்போது என்ன செய்வாரென்று வேதம் கூறியுள்ளதை அந்த சமாரியா ஸ்திரீ அறிந்திருந்தாள். வேதம் கூறியவாறே இயேசு செய்த போது அவள், “அவர் இங்கே இருக்கிறார். வாருங்கள். இந்த மனிதனைப் பாருங்கள். சம்பவிக்கும் என்று வேதம் கூறின காரியம் சரியாக இதுதான் அல்லவா'' என்று கூறினாள். பாருங்கள்? அவள் வெளிப்படுத்தலின் மூலம் ஊக்குவிக்கப்பட்டாள். அது உண்மையா? (சபையார் ”ஆமென்“ என்கின்றனர்- ஆசி) அது நிறைவேறினபோது அவள் வெளிப்படுத் தலின் மூலம் ஊக்குவிக்கப் பட்டாள். பாருங்கள்? அது சரி. அவள் அறிந்திருந்தாள்... அவள் “கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறி வோம். அவர் வரும்போது இவைகள் யாவையும் செய்வார்” என்றாள். அவள் அதை அறிந்து கொண்டாள். அவர், “நானே அவர்' என்று கூறினார். அப்பொழுது, அவளுக்குள் அந்த ஊக்குவித்தல் தொடங்கினது. அவள் ஊர் முழுவதும் சத்தமிட்டுக் கொண்டே சென்றாள். அவள் தண்ணீர் குடத்தை விட்டு விட்டு ஓடோடிச் சென்று ஊர் ஜனங்களிடம், “வந்து பாருங்கள்'' என்றாள். 129இப்பொழுது, கிழக்கு தேசத்து பழக்கவழக்கங்களை நீங்கள் அறி வீர்களானால் அவள் அவ்விதம் செய்தது தவறாகும். ஆம் ஐயா, அத்தகைய ஸ்திரீ கூறுவதை யாருமே கேட்கமாட்டார்கள். இல்லை ஐயா. பாருங்கள் முறைதவறி நடக்கும் ஸ்திரீ என்னும் மோசமான பெயரை அவள் கொண்டிருந்தாள். அத்தகையவள் வீதியில் சென்று இவ்விதம் சத்தமிடும்போது யாருமே அவளுக்குச் செவிகொடுக்கமாட்டார்கள். ஆனால் சகோதரனே! அவளிடம் ஜீவனுள்ள வார்த்தை இருந்தது. அவள் ஊக்குவிக்கப்பட்டதனால் தூண்டப்பட்டாள். காற்று பலமாக அடிக்கும் நாளில் எரிந்து கொண்டிருக்கும் வீட்டில் தீயை அணைப்பது கடினம். ஏனெனில் காற்று சதா அடித்துக்கொண்டேயிருக்கும். அது போன்றே அவளுடைய உணர்ச்சியை யாரும் அடக்க முடியவில்லை. ஆம். ஐயா. ஓ, ஏனெனில் தேவனுடைய அக்கினி அவளில் எரிந்து கொண்டேயிருந்தது. ஆம், அதுதான். அவள் அவர்களிடம், நான் கூறு வதை நீங்கள் நம்பாவிடில் கூட்டம் நடந்துகொண்டிருக்கும் இடத்திற்கு வாருங்கள், அப்பொழுது நான் உங்களுக்குக் காண்பிப்பேன்' என் றாள். ஆம். அதுதான். ஆம், ஆம், ஐயா. 130ஆகவே, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் சென்றனர். அவர் மேலும் ஒருமுறை அக்கிரியைகளைச் செய்யவில்லை. ஆனால் அந்த ஸ்திரீக்கு ஏதோ ஒன்று நேர்ந்துள்ளது என்பதை மாத்திரம் அவர்கள் அறிந்து கொண்டனர். அவள் முற்றிலும் மாறிவிட்டதால், ஜனங்கள் அவரை விசுவாசித்தனர், ஆம் ஐயா. அவர்கள் அவர்மேல் விசுவாசம் கொண்டனர். 131ஏனெனில், 'விசுவாசம் கேள்வினால் - தேவனுடைய வார்த்தை யாகிய - தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் கேட்பதனால் வரும். தேவனுடைய வார்த்தை நிறைவேறுவதை அவர்கள் கண்கூடாகக் கண்ட னர். அது ஒரு வித்தாயிருப்பதால், அது விதைக்கப்பட்டபின் உயிரடை கிறது. (முளைக்கத் தொடங்குகிறது - தமிழாக்கியோன்). அது எதைக் குறித்துப் பேசுகின்றதோ அதே பலனை அது தருகின்றது. அங்ஙனம் அது செய்யாவிடில், அது தேவனுடைய வித்தல்ல, அல்லது விதைக்கிறவன் அதை விதைக்க வேண்டிய முறையை அறியவில்லையென்று அர்த்தம். அதாவது, தேவனுடைய வார்த்தையை விதைப்பதற்கு அவன் தேவனால் அனுப்பப்படவில்லை. அவன் விதையை மலையின் மேல் அல்லது விதைக்கக்கூடாத ஸ்தலத்தில் தெளித்திருப்பான். பாருங்கள்? ஆகவே, நீங்கள் பாருங்கள்? விதை சரியான இடங்களில் விழும்போது அது சரியாக முளைக்கிறதாவென்று தேவன் பார்த்துக் கொள்கிறார். ஓ, என்னே ! 132கறுப்புக் குதிரையின் மேலிருக்கிறவனிடம், அது கூறியது என்ன? 'என் எண்ணெயையும், திராட்சரசத்தையும் தொடாதே; என் எண்ணெ யையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே. அவைகளில் சிறிதுதான் மீந்திருக்கிறது. ஆம், நீ ஜனங்களுக்கென வகுத்திருக்கும் வாழ்க்கையை அவர்களுக்கு நிறுத்துத் தருவதைப்பற்றி எனக்கு ஒன்றுமில்லை. அது உன் விருப்பம். நீ அதற்கான கிரயத்தை கடைசியில் அங்கே செலுத்தப் போகிறாய். ஆனால் எண்ணெயையும் திராட்சரசத்தையும் நீ காணும் போது, அதை சேதப்படுத்தாமல் விட்டுவிடு' என்று கூறப்பட்டது. ஓ, என்னே ! உங்களால் கூடுமானால்... அதாவது, 'சுத்த வார்த்தையாகிய எண்ணெயையும் திராட்சரசத் தையும் அபிஷேகமாக பெற்ற என் சிறு மந்தையில் சிலரை நீ பிடித்து அவர்களைக் கொன்று போடுவாய். ஏனெனில், அதையே நீ செய்து கொண்டும் வருகிறாய். ஆனால் 'மரியாளே வாழ்க' என்று சொல்லவும் உன் கோட்பாடுகளில் சிலவற்றைக் கைக்கொள்ளவும் அவர்களை நிர்ப் பந்தம் செய்ய வேண்டாம். நீ அவர்களிலிருந்து விலகி இரு. அவர்கள் போகுமிடத்தை அறிந்திருக்கின்றனர். ஏனெனில் அவர்கள் என் எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டு என் வாக்குத்தத்தத்தை அறிந்தி ருக்கிறப்படியால் சந்தோஷமெனும் திராட்சரசத்தைப் பெற்றிருக்கின்ற னர். அவர்களை நான் மறுபடியும் உயிரோடெழுப்புவேன் என்ற வாக்குத் தத்தத்தை அறிந்துள்ளனர். அதை சேதப்படுத்த வேண்டாம். அவர்களை குழுப்பமுறச் செய்யவேண்டாம். அவர்களை விட்டு அகன்று நில்' என்று அவர் சொல்கிறார். 133அவர் தம் வார்த்தையை உறுதிப்படுத்தி அதை நிறைவேற்றுகிறார். அவர்கள் அறிந்துள்ளனர். அவர்கள் மறுபடியும் உயிரோடெழுவர் என்று அறிந்திருந்தனர். ஓ, அதை நான் மிகவும் விரும்புகிறேன். வ்யூ! அவர்கள் மறுபடியும் உயிரோடு எழுந்திருப்பார்கள். இதோ அந்தக் கறுப்பு குதிரை வருகிறது - இருளின் காலங்கள். வெள்ளைக் குதிரையின் மேலிருந்தவன் என்ன செய்தான் என் பதை பூரணமாக நீங்கள் அறிவீர்கள். அவன் சிகப்புக் குதிரையின் மேல் சவாரி செய்தபோதும் என்ன நேர்ந்தது என்பது நமக்குத் தெரியும். இப்பொழுது அவன் கறுப்புக் குதிரையின் மேல் சவாரி செய்து கொண்டு வருகிறான். காலங்கள்தோறும் ஒரே ஆள் வித்தியாசமான குதிரைகளின் மேல் சவாரி செய்கிறான். இப்பொழுது அவன் கோதுமையும் வாற்கோதுமையும் நிறுத்துக் கொடுத்து அதற்குக் காசு வசூலித்தான் என்று பார்க்கிறோம். கோதுமை என்பது மாம்சப் பிரகாரமான ஜீவியத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாய் இருக்கிறது.327. ஏனெனில், 'விசுவாசம் கேள்வினால் - தேவனுடைய வார்த்தை யாகிய - தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் கேட்பதனால் வரும். தேவனுடைய வார்த்தை நிறைவேறுவதை அவர்கள் கண்கூடாகக் கண்ட னர். அது ஒரு வித்தாயிருப்பதால், அது விதைக்கப்பட்டபின் உயிரடை கிறது. (முளைக்கத் தொடங்குகிறது - தமிழாக்கியோன்). அது எதைக் குறித்துப் பேசுகின்றதோ அதே பலனை அது தருகின்றது. அங்ஙனம் அது செய்யாவிடில், அது தேவனுடைய வித்தல்ல, அல்லது விதைக்கிறவன் அதை விதைக்க வேண்டிய முறையை அறியவில்லையென்று அர்த்தம். அதாவது, தேவனுடைய வார்த்தையை விதைப்பதற்கு அவன் தேவனால் அனுப்பப்படவில்லை. அவன் விதையை மலையின் மேல் அல்லது விதைக்கக்கூடாத ஸ்தலத்தில் தெளித்திருப்பான். பாருங்கள்? ஆகவே, நீங்கள் பாருங்கள்? விதை சரியான இடங்களில் விழும்போது அது சரியாக முளைக்கிறதாவென்று தேவன் பார்த்துக் கொள்கிறார். ஓ, என்னே ! 134ஆனால் எண்ணெய் பரிசுத்த ஆவிக்கும் திராட்சரசம் அதனால் உண்டாகும் மகிழ்ச்சிக்கும் அடையாளமாயுள்ளன. “ரோமாபுரியே! அந்த ஆவிக்குரிய ஜீவியத்தை சேதப்படுத்த வேண்டாம். அதை ஒன்றும் செய் யாமல் விட்டுவிடு. அது எனக்குச் சொந்தமானது'' இப்பொழுது வேறொரு விஷயத்தை நீங்கள் கவனிக்கவேண்டு மென்று விரும்புகிறேன். கவனியுங்கள். ''எண்ணெயையும் திராட்ச ரசத்தையும் சேதப்படுத்தாதே“ என்று நான்கு ஜீவன்களில் ஒன்று கூற வில்லை. நீங்கள் அதைக் கவனித்தீர்களா? கவனியுங்கள். அதை நான் படிக்கிறேன்: அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், இப்பொழுது, இங்கு கவனியுங்கள். நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து சத்தத்தைக் கேட்டேன்“'. அது யார்? அதுதான் ஆட்டுக்குட்டியானவர்! ஆமென்! நான்கு ஜீவன்கள் இதைக் கூறவில்லை. அவர்கள் மத்தியிலிருக்கும் ஆட்டுக் குட்டியானவர் இதை சொல்கிறார். ஏனெனில் அவர் தமக்குச் சொந்த மானவர்களைக் பெற்றுக்கொள்ளப்போகிறார். அவர்கள் அவருக்குச் சொந் தம். அவர்தான் அவர்களை மீட்டவர். பாருங்கள்? ஆமென். “அந்த எண்ணெயைச் சேதப்படுத்தாதே!'' இல்லை ஐயா. அந்த நான்கு ஜீவன்கள் அதைக் கூறவில்லை. ஆனால் ஆட்டுக்குட்டியானவரே அதைக் கூறினார். ஓ, என்னே! ஆட்டுக்குட்டியானவர்!. ஆட்டுக்குட்டியான வர்தாமே இதை அறிவித்தார் - நான்கு ஜீவன்களல்ல. 135நான்கு ஜீவன்களில் ஒன்று யோவானை நோக்கி, 'நீ வந்து பார்'' என்று சொன்னது. யோவான் சென்று கறுப்புக் குதிரையையும் அதன் மேலிருக்கிறவனையும் கண்டான். ஆகவே அவர், “ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு... இவ்வளவு வாற்கோதுமையென்றும்,'' கூறினார். ஆனால் அதன்பின் அவைகளின் மத்தியிலிருந்த ஆட்டுக்குட்டியானவர், 'எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்று சத்த மிட்டார். ஊ ஊம்... ”அதைச் செய்யாதே''. அது சரி. ஓ, என்னே ! இதைக் கவனியுங்கள். “அப்படி செய்தால் ஒரு நாள் அதன் பலனை அனுபவிக்க நேரிடும்'' என்று கூறுகிறார். ஓ, என்னே ! ஒன்பது மணி முப்பது நிமிடங்கள். நல்லது. எனக்குத் தெரிந்தவரை மூன்று முத்திரைகளின் உண்மை யான அர்த்தம் இவையே என்று நான் என் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறேன். அதற்காக நான் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறேன். இது அவர் எனக்கு அருளின வெளிப்பாடாகும் என்று நான் கூறிட விரும்புகிறேன், அதன் வெளிப்பாட்டை அவர் எனக்கு அருளினார். நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோமென்பதை நிச்சயமாக நம்புகிறேன். 136நாளை இரவு, மங்கிய நிறமுள்ள குதிரையின் மேலிருக்கிறவனைப் பற்றி சிந்திப்போம். அதைக் குறித்து எனக்கு இதுவரை ஒன்றும் தெரியாது. நான் அதை அறியேன். நான் கூறுவது உண்மையென்பதை தேவன் அறிவார். அதைக் குறித்து ஒன்றும் எனக்குத் தெரியாது. இல்லை. அநேக வருடங்களுக்கு முன்பு நான் வைத்திருந்த என்னுடைய பழைய குறிப்புகளைப் பார்த்தேன். நான் சிறிது நேரத்திற்கு முன்பாக சகோ.கிரஹாம் ஸிநெல்லிங் அவர்களைக் கண்டேன்; அவர் ஒருவேளை வெளியே சென்றிருக்கலாம். நான் முன்பு இங்கே பிரசங்கித்ததை நினைத்துப் பார்க்கிறேன். நான் பல வருடங்களுக்கு முன்பாக என்ன கூறினேன் என்பதைக் காணும்படியாக... ஒருநாள் வெளிப்படுத்தின விசேஷபுத்தகத்தில் நான்கு குதிரைகளின் மேலிருக்கிறவர்களைக் குறித்து ஒரே நாளில் பிரசங்கித்தேன். அப் பொழுது, ''வெள்ளைக்குதிரை, ஆதிசபை ஜெயித்துக் கொண்டே செல்வதைக் குறிக்கின்றது'' என்று சொன்னேன். இந்த கருத்தை நான் ஏழாம் நாள் ஆசரிப்போரிடமிருந்து பெற்றுக்கொண் டேன். அதைக் குறித்த சிலவற்றை நான் அங்கே படித்தேன். ''ஜெயங்கொள்ளும்படியாய் சென்ற ஆதி சபை'' என்றேன். அடுத்ததாக கறுப்புக் குதிரை... நான் கூறினேன்... கறுப்புக் குதிரையை நான் என்னவென்று அழைத்தேன் என்பதை இப்பொழுது மறந்துவிட்டேன். 137அடுத்ததாக, “சிவப்பு குதிரை என்பது தொந்தரவுகள் சபைக்கு வரக்காத்திருக்கின்றன என்றும், அது நேரிடவிருக்கம் யுத்தங்களுக்கு ஒருக்கால் அறிகுறியாயிருக்கும்” என்றேன். ஒரு நாள் பூமி அந்தகாரப்பட்டு, நட்சத்திரங்களும், சூரியனும் சந்திரனும் ஒளியைக் கொடாமற் போகுமென்று அதையே கறுப்புக் குதிரை சித்தரிக்கிறது என்றும் சொன்னேன். மங்கிய நிறமுள்ள குதிரை வியாதிகள் அநேகம் வரக் காத்திருக் கின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றது என்று அப்பொழுது நான் பிரசங்கித்தேன். ஆனால் அதன் உண்மையான அர்த்தம் இன்னும் எனக்கு வெளிப்படவில்லை. ஆனால், அதைக் குறித்த என்னுடைய வியாக்கியானம் அதுவே. நான் இங்கே இந்த பிரசங்க பீடத்தில் நின்று, என்னால் முடிந்தவரை அதைச் செய்தேன். ஆனால், ஓ, ஆனால் ஏறக்குறைய ஏதோ ஒன்றைக் கூறினேன். சரி. ஹம்! ஓ, நீங்கள் காண்பீர்கள். சற்று கவனமாயிருங்கள். பாருங்கள்? 138இக்காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு நீங்கள் மகிழ்ச்சி யடைகின்றீர்கள் அல்லவா? (சபையார் ஆமென் என்கின்றனர்-ஆசி) நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? இவைகளெல்லாம் எங்கு சென்று முடிவடையும் என்பதைப் பார்க்கும் பொழுது, நான் நினைக்கிறேன். நாடுகள் உடைகின்றன இஸ்ரவேல் விழித்தெழும்புகின்றது தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த அடையாளங்கள் இவை புறஜாதிகளின் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன திகில் அவர்களை சூழ்ந்துள்ளது சிதறப்பட்டோரே, உங்கள் சொந்தத்திற்கு திரும்புங்கள் மீட்பின் நாள் சமீபமாயுள்ளது மனிதரின் இருதயங்கள் பயத்தினால் சோர்ந்து போயுள்ளன பரிசுத்த ஆவியால் நிறையப்பட்டு. உங்கள் விளக்குகளின் திரியை சுத்திகரியுங்கள் உங்கள் மீட்பு சமீபமாயுள்ளது, தலையுயர்த்தி நோக்குவீர் (ஓ என்னே ) கள்ளத்தீர்க்கதரிசிகள் பொய்யுரைக்கின்றனர் இயேசு கிறிஸ்துவே நம் தேவன் என்னும் (நீங்கள் அப்படி விசுவாசிக்கின்றீர்களா?) சபையார் ஆமென் என்கின்றனர் - ஆசி) தேவனின் சத்தியத்தை அவர்கள் மறுதலிக்கின்றனர் ஆனால் நாமோ அப்போஸ்தலர்களின் அடிச்சுவடுகளில் நடப்போம் மீட்பின் நாள் சமீபமாயுள்ளது . மனிதரின் இருதயங்கள் பயத்தினால் சோர்ந்துபோயுள்ளன பரிசுத்த ஆவியால் நிறையப்பட்டு உங்கள் விளக்குகளின் திரியை சுத்திகரியுங்கள் உங்கள் மீட்பு சமீபமாயுள்ளது, தலையுயர்த்தி நோக்குவீர் 139அது மிகவும் அற்புத மானதல்லவா? (சபையார் ஆமென் என்கின்றனர்-ஆசி) நான் அதை விரும்புகிறேன். மீட்பு சமீபமாயுள்ளது. சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாகும் மகிமையின் பாதையை நீவிர் நிச்சயம் கண்டுகொள்வீர் தண்ணீரின் வழியில் மாத்திரமே இன்றைய வெளிச்சம் உண்டு அதுவே இயேசு என்னும் விலையேறப்பெற்ற நாமத்தில் அடக்கம் பண்ணப்படுதலாம் வாலிபரே, வயோதிபரே, உங்கள் எல்லா பாவங்களுக்கும் மனந்திரும்புவீர் அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் உட்பிரவேசிப்பார் சாயங்கால வெளிச்சம் தோன்றி விட்டது தேவனும் கிறிஸ்துவும் ஒருவரே என்பது சத்தியம் தேவனுடைய வார்த்தை! ஓ! என்னே அற்புதம் விரைவில் ஆட்டுக்குட்டியானவர் மணவாட்டியைக் கொண்டு செல்வார் அவள் எப்பொழுதும் தம் பக்கத்திலிருக்கவான சேனைகள் அனைத்தும் அங்கு கூடியிருப்பர் ஓ, அது மகத்தான காட்சியாயிருக்கும் எல்லா பரிசுத்தவான்களும் கரையற்ற வெண்மையுடன் இருப்பர் நாம் இயேசுவுடன் நித்தியமாக புசிப்போம் ஓ, 'வந்து புசியுங்கள்' என் எஜமானன் அழைக்கிறார் நீங்கள் இயேசுவின் மேசையில் எந்நேரமும் விருந்துண்ணலாம் திரளான ஜனங்களை போஷித்தவர் தண்ணீரை திராட்சரசமாய் மாற்றினவர் பசியுள்ளோரை 'வந்து புசியுங்கள்' என அழைக்கிறார் ஓ, 'வந்து புசியுங்கள்' என் எஜமானன் அழைக்கிறார் (வார்த்தையைப் புசியுங்கள்) நீங்கள் இயேசுவின் மேசையில் எந்நேரமும் விருந்துண்ணலாம் திரளான ஜனங்களை போஷித்தவர் தண்ணீரை திராட்சரசமாய் மாற்றினவர் பசியுள்ளோரை 'வந்து புசியுங்கள்' என அழைக்கிறார். 140நீங்கள் ஆத்தும ஆகாரத்தைப்பெற பசியுள்ளவர்களாயிருக்கிறீர்களா? (சபையார் களிகூருகின்றனர்-ஆசி) ''நீதியின்மேல் பசிதாக முள்ளவர்கள் பாக்கியவான்கள்'' அவரில் நீங்கள் அன்புகூருகிறீர்களா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர்) அப்படியானால், ”நான் உம்மை நேசிக்கிறேன்'' என்று சொல்லுங்கள். நாமெல்லாரும் எழுந்து நின்று நம் கைகளையுயர்த்தி, ''நேசிக்கிறேன்' நேசிக்கிறேன், முந்தி அவர் நேசித்ததால் என்ற பாட்டைப் பாடி நமக்கு அவர் பேரிலுள்ள மதிப்பைத் தெரிவிப்போம். சரி, நாம் எல்லோரும் இப்பொழுது பாடுவோம். நேசிக்கிறேன் நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே. 141(ஒரு சகோதரன் அந்நிய பாஷையில் பேசுகிறார். சகோ. பிரான்ஹாம் சிறிது நேரம் நிறுத்துகிறார்'- ஆசி) மிகவும் பயபக்தியாய் இருங்கள். நம்மிடையே வியாக்கியானம் செய்கின்ற சகோ. ஹிக்கின்பாதம் இங்குள்ளாார். அவர் இங்கே இருக்கின்றாரா, இல்லையா என்பதை நான் அறியேன். அவர் நமக்கு என்ன கூறினார் என்பதை அறிந்து கொள்ள நாம் விரும்புகிறோம். சற்று ஒரு நிமிடம் காத்திருங்கள். இங்கே, இங்கே... (ஒரு சகோதரி வியாக்கியானம் அளிக்கிறார்). நிச்சயமாக, கர்த்தருக்கே புகழ்ச்சி, என்னுடைய விசுவாசம் தேவ னுக்குள் உயர்ந்து எழுந்துள்ளது. நீங்கள் இன்று இரவு அவரை முழு இருதயத்துடன் நேசிக்கிறீர்களா? (சபையார் 'ஆமென்'' என்கின் றனர்-ஆசி). ஓ, தேவனைப் புகழ்ந்து, ''கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி'' என்று சொல்லுங்கள். (சபையார் தேவனைப் புகழுகின்றனர்). கர்த்தாவே, நாங்கள் எங்கள் முழு இருதயத்துடனே உம்மை எவ்வளவாய்ப் புகழுகிறோம்! தேவனுக்கே மகிமை! எல்லா ஜனங்களே, அவருக்குப் புகழ்ச்சியைச் செலுத்துங்கள். தேவன் உங்களோடிருப்பாராக. (சபையார் தொடர்ந்து களிகூர்ந்து, தேவனைப் புகழ்கின்றனர்-ஆசி).